Header Ads



இலங்கை பௌத்த நாடு என்பதை, மறைக்கவோ மறுக்கவோ முடியாது - உலக முஸ்லிம் லீக்

மனிதப் பெறுமானமும், மெய்யறிவும் முதன்மைப் படுத்தப்படுவதன் மூலமே சமாதான சகவாழ்வை உறுதிமிக்கதாக கட்டியெழுப்ப முடியும் என உலக முஸ்லிம் லீக் செயலாளர் நாயகம் கலாநிதி முஹம்மத் அப்துல் கரீம் அல் ஈஸா தெரிவித்தார்.

சமாதான சகவாழ்வு தேசிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்த உலக முஸ்லிம் லீக் செயலாளர் நாயகம் நேற்று மாலை கொழும்பு சங்கிரில்லா ஹோட்டலில் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலே இதைத் தெரிவித்தார்.

மேல்மாகாண ஆளுநர் ஏஜே.எம். முஸம்மில், அஸ்யெயலித் அபதுல்காதர் மசூர் மௌலானா ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த உலக முஸ்லிம் லீக் செயலாளர் நாயகம்:

எனது இலங்கைக்கான முதல் விஜயம் இது. இந்தக் குறுகிய நாட்களுக்குள் இங்கு நிறையத் தெரிந்து கொண்டேன். ஏனைய மதத் தலைவர்கள் பலரையும் சந்தித்துப் பேசும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அவர்களிடமிருந்து அன்பும், நற்புணர்வும் வெளிப்பட்டன.

இந்த நாடு பௌத்த நாடு என்பதை மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. அவர்களுடன் பரஸ்பரம் புரிந்துணர்வுடன் முஸ்லிம்கள் இணைந்து வாழும் சூழல் ஏற்பட்டிருப்பது மெச்சத்தக்கது. சமாதன சகவாழ்வு மலர வேண்டுமானால் தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்.

இதற்கு விட்டுக் கொடுப்பும் புரிந்துணர்வும் அவசியம்.

வெறுப்புப் பேச்சுக்கள் எதிர்ப்பு மனப்பான்மையை அங்கீரிக்க முடியாது. மனித மனங்களை வென்றெடுப்பதன் மூலமே உலகில் சமாதான சகவாழ்வை மேலோங்கச் செய்யலாம்.

பயங்கரவாதத்துக்கு மதம், இனம், நேரம் காலம் கிடையாது. பயங்கரவாதத்தை யார் செய்தாலும் அது பயங்கரவாமே.

இங்கு மட்டுமல்ல உலகில் எங்கு பயங்கரவாதம் நடந்தாலும் நாம் அதனை எதிர்த்து நிற்போம். எமது மதத்தை நாம் பின்பற்றுவதோடு ஏனைய மதங்களுக்கு மதிப்பளிக்க பழகிக் கொள்ள வேண்டும். இனவாதம், பயங்கரவாதம், மதவாதம் அடிப்படைவாதம், தீவிரவாதம் இவை எதுவும் மனித சமுதாய மேம்பாட்டுக்கு உதவப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

எம்.ஏம்.எம். நிலாம்

6 comments:

  1. அது சிங்கள இன வாதிகளின் கருத்து. இப்ப உலக முஸ்லிம் லீக் அதனை ஆமோதிக்கிறதா? இலங்கை சிங்களம் தமிழ் மொழிகளைப்பேசுகிற சிங்களவர், ஈழத்தமிழர், முஸ்லிம்கள் மற்றும் மலையக தமிழரின் நாடு என்பதே சரியானதாகும்..

    ReplyDelete
  2. இல்லை ஜெயபாலன் அவர்களே,Sri Lanka வில் பல மொழிகள் பேசப்பட்டாலும் இது ஒரு Buddhist country ஏனெனில் 70% மேற்பட்டோர் சிங்களவர்கள்.நாம் அதை ஏற்றுகொல்கிரோம்.உங்கள் ஆக்ஷ்த்தான மனோ அமைச்சரும் சில மாதங்களுக்கு முன் இவ்வாறுதான் கூறினார்.அபோது மறுக்காத நீங்கள் இப்போது மறுப்பது ஏன்? Muslim ஒருவர் சொல்லிவிட்டார் என்பதனாலா? எனவே இதிலிருந்து புரிகிறது நீங்களும் இன வாத காய்ச்சலால் சற்று பாதிக்கப்பட்டுல்லீர்கல்

    ReplyDelete
  3. Rizad மனோவும் தெற்க்கு முஸ்லிம்களும் மலையக மக்களையும் தெற்க்கு முஸ்லிம்களையும் சிறுபாண்மை இனமென சொல்லி அரசியல் செய்கிறவர், அவர் சொல்லலாம். தங்களை தேசிய இனம் என சொல்கிற தமிழரும் வடகிழக்கு முஸ்லிம்களும் சொல்ல முடியாது. இலங்கை பெள்த்த நாடு என கிழக்கு முஸ்லிம்கள் சொன்னால் அவர்கள் தேசிய இனமாக மாட்டார்கள். இதுபற்றி வடகிழக்கு முஸ்லிம்கள்தான் முடிவெடுக்க முடியும். ஒரு தேசிய இனமாக தமிழர்கள் இலங்கையை பெளத்த நாடு என ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இலங்கை சிங்களவரதும் தமிழரதும் நாடு என்பதை ஏற்றுக்க்கொண்டுதான் இலங்கை தமிழ் போராளிகளுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. இலங்கை சிங்களம் தமிழ் பேசும் நான்கு இனங்களின் நாடு என்பட்து என் உறுதியான நிலைபாடு.

    ReplyDelete

Powered by Blogger.