Header Ads



ஜனாதிபதி வேட்பாளராக யாரை நிறுத்த வேண்டுமென்ற மக்களின் விருப்பம் எமக்கு தெரியவந்துள்ளது - கபீர்

எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடத்தப்படவுள்ள கட்சியின் சம்மேளனத்திற்கு முன்னர் புதிய கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை பெயரிடுவதற்கு ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் ஹசிம் கொழும்பில் இன்று -15- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்துள்ளார்.

எமது சம்மேளனம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ளது.

குறித்த சம்மேளனத்திற்கு முன்னர் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பிலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை பெயரிடுவதற்கு எதிர்ப்பார்த்துள்ளோம்.

இது தொடர்பில் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ள கட்சி கலந்துரையாடலில் கட்சியின் தலைவருக்கு அறிவிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

புதிய கூட்டணி தொடர்பான யாப்பில் கைச்சாத்திடும் தினத்திலேயே ஜனாதிபதி வேட்பாளரையும் அறிவிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

இதற்கு அமைச்சர் சஜித் பிரேமதாஸவும் இணங்கியுள்ளார்.

வேட்பாளர்கள் தொடர்பில் கட்சி பலரின் பெயர்களை தீர்மானித்துள்ள போதும் மக்கள் ஒருவரின் பதாகைகளை வைத்துள்ளனர்.

இதன்மூலம் மக்களின் விருப்பம் எமக்கு தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும் மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறே ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் பெயரிடப்படுவார் என அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா போட்டியிடுவது தொடர்பில அவரது தனிப்பட்ட கருத்து வெளியிடுவதற்கான அதிகாரத்தை ஐக்கிய தேசிய கட்சி அவருக்கு வழங்கியுள்ளாக இதன்போது அமைச்சர் கபீர் ஹசிம் தெரிவித்தார்.

1 comment:

  1. ரணில் தோல்வியடையக்கூடிய வேட்பாளரைத்தானே தேடிக்கொண்டிருக்கிறார்.

    ReplyDelete

Powered by Blogger.