Header Ads



வேட்பாளராக நிறுத்தப்படுகிறார் அனுரகுமார...?


வரும் அதிபர் தேர்தலில் ஜேவிபி சார்பில், அந்தக் கட்சியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க போட்டியிடவுள்ளார் என, ஜேவிபி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு மிகவும் பொருத்தமானவர் அனுரகுமார திசநாயக்கவே என்று, அதிகளவான ஜேவிபி உறுப்பினர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

நாளை மறுநாள் காலிமுகத்திடலில் நடைபெறவுள்ள ஜேவிபியின் மாநாட்டில், அனுரகுமார திசநாயக்கவை வேட்பாளராக அறிவித்து, ஒப்புதல் அளிக்கப்படவுள்ளது.

முன்னதாக, அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்ற, புகழ்பெற்ற ஒருவரை ஜேவிபி வேட்பாளராக முன்நிறுத்த முடிவு செய்யப்பட்டது, எனினும், இந்த முடிவு மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

1982ஆம் ஆண்டு நடந்த முதலாவது ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி சார்பில் அதன் நிறுவுநரான றோகண விஜேவீர போட்டியிட்டு, 273,428 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

அதன் பின்னர்,1999 அதிபர் தேர்தலில் ஜேவிபி சார்பில் நந்தன குணதிலக போட்டியிட்டு, 344,173 வாக்குகளைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Congratulations.. We are with you to Support.. Now We are not in need of Dirty, Criminals, Uneducated stupids Old Ruling Parties... Welcome JVP.

    ReplyDelete

Powered by Blogger.