Header Ads



துவேஷக்காரர்கள் பட்டியலில், முஸ்லிம்களுக்கு முதலிடமா....?

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்ற கலந்துரையாடல் எல்லா சமூக மட்டங்களிலும் வேகமாக பேசப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட கருத்தாடல்கள் பலத்தை தேசிய மற்றும் உள்ளூர் மட்டங்களில் பார்க்ககூடியாத இருந்தது. அத்தனையிலும் கலந்துகொள்ளும் நம்ம நானாமார் வேற லெவல்.

நம்ம முஸ்லிம்கள் தான் இந்த நாட்டில் இனத்துவேசம் அல்லது மதத்துவேசம் பேசும் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்களோ என எண்ணத்தோன்றுகிறது.

நாட்டின் ஜனாதிபதி பற்றிய கலந்துரையாடலில் கூட முஸ்லிம்களுக்கு என்ன செய்தார், முஸ்லிம்களை பாதுகாத்தாரா? முஸ்லிம்களை கட்டியணைத்தாரா? என்று முஸ்லீம் தலைவர்கள் என்று சொல்லுபவர்கள் கூட செய்யாத விடயத்தை ஜனாதிபதி வேற்பாளர்களிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள்.

இல்ல தெரியாமல் தான் கேற்கிறேன், முஸ்லிம்கள் முஸ்லிம்களை பற்றி மட்டும் தான் சிந்திப்பார்களா? முஸ்லிம்களின் உரிமைகள், முஸ்லிம்களின் கல்வி, முஸ்லிம்கள் சுகாதாரம் என்று எல்லாவற்றிலும் முஸ்லிம்கள் முஸ்லிம்களை பற்றி மட்டும் தான் சிந்திக்கின்றார்களா?

இந்த நாட்டின் பொருளாதார நிலைமையை தூக்கி நிறுத்துவது பற்றி பேசமாட்டார்களா? இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு பற்றி பேச மாட்டார்களா? இந்த நாட்டின் அடுத்த 10 வருட கனவைப் பற்றி பேசமாட்டார்கள்? உலக நாடுகளோடு போட்டி போட்டுக்கொண்டு ஓடுவதற்காக தேவைப்படும் சிறப்பான வெளிநாட்டு கொள்கைப் பற்றி பேசமாட்டார்களா? இந்த நாட்டில் ஊழல் இல்லாத நிர்வாகத்தைப்பற்றி பேசமாட்டார்களா? எப்ப பார்த்தாலும் எதை எடுத்தாலும் முஸ்லிம்கள் முஸ்லிம்கள் முஸ்லிம்கள்..

முஸ்லிம்கள் முஸ்லிம்களை பற்றி மட்டும் தான் பேச வேண்டும் என்று எனக்கு இந்த இனிய மார்க்க இஸ்லாம் சொல்லித்தரவில்லை.

ஜனாதிபதி தேர்தல் பற்றி கலந்துரையாடும் அன்பு நானாமார்களே இந்த நாட்டு யாப்பில் இருக்கும் பல சட்டங்களில் ஒரு சட்டமான "மத சுதந்திரம் மற்றும் அதன் உரிமைகள்" என்ற விடயத்தை பற்றி மட்டும் பேசிக்கொண்டிருக்காமல் அதனை தாண்டி இருக்கும் நாட்டின் இறைமை, பொருளாதாரம், வெளிநாட்டு கொள்கை, அபிவிருத்தி திட்டம், சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு, கல்வி, நிர்வாகம், சூழல், சுகாதாரம் என எல்லாவற்றையும் பற்றி சிந்தியுங்கள், இவை அத்தனையும் இலங்கையில் இருக்கும் அனைத்து இலங்கையருக்கு சமமாக கொடுக்கப்படவேண்டும் என்பதை பற்றி கலந்துரையாடுங்கள். அதுவே நல்ல முடிவுகளையும் நல்ல சிந்தனைகளையும் தரும்.

முஸ்லீம் சமூகம் எப்போதும் மனிதத்தை நேசிக்கும் சமூகம்.

- SM Isham Marikar -

8 comments:

  1. ARE YOU A NON MUSLIM.....write about the Batticaloa campus to media, now a Tera going to eliminate because of hate, which a single persons effort, a big investment with 0 percent interest for our mother land from Saudi Arabia, who is appreciate this...

    ReplyDelete
  2. S.M. Isham Marikar, நீங்கள் புத்தளம் என்று நினைக்கின்றேன். எழுதினதுதான் எழுதிவிட்டீர்கள். இன்னும் மிக ஆழமாக எழுதி இருக்கலாம். இப்போது முஸ்லிம்கள் முஸ்லிம்களைப்பற்றி எழுதிய காலம் போய்விட்டது. இனி நாட்டைப்பற்றியும் உலகத்தைப்பற்றியும் அதனோடு நாம் எப்படி ஒன்றுசேரப் பயணம் செய்து நமது இலக்குகளை அடைய முடியும் என்பது பற்றித்தான் பேச வேண்டும். காக்கா குருவிகள் பிடித்து அதன் கால்களில் நூலினைக் கட்டி வானத்தில் பறக்கவிட்ட நாம் எப்படி விமானத்தை உருவாக்கிப் பறக்க வைக்க வேண்டும் என்பதைப் பற்றித்தான் இனிப் பேச வேண்டும். மாவட்டத்திற்கு இரண்டு பேர் மூன்று பேர் என்று வைத்திய பொறியியல் போன்ற உயர் மட்ட துறைகளுக்கு மாணவர்களை அனுப்பிக் கொண்டிருக்கும் நாம் இத்தொழிற்றுறைகளில் போட்டி போட்டு சாதனைகளை நிலைநாட்டி எம் நாட்டிற்கும் உலகத்திற்கும் பயன்தரவல்ல புகழ்மிக்க விஞ்ஞானிகளை உருவாக்க எப்போது முயற்சிக்கப் போகின்றோம். அதற்காக மாணவர்களை நாம் உருவாக்கிக் காட்ட வேண்டாமா? முஸ்லிம்களிடம் கோடி கோடியாக தங்கக் குவியல்கள் கொட்டிக் கிடக்கின்றன. வைரம் பிளாட்டின மலைகளை கொத்துக் கொத்தாய் உருவாக்க எம் மாணவர்களைத் தயாராக்க வேண்டும். பெரும் தொழில் அதிபர்களை அரசியல்ஞானிகளை விவசாயிகளை வர்த்தகர்களை இன்னும் சமூகத்தில் மிளிரக்கூடிய வல்லுனர்களை உருவாக்கி முஸ்லிம் சமூகத்தினை உருமாற்ற முயற்சிக்க வேண்டும். அவரகளுக்கு எல்லாம் ஒரு தலையாய தலைவனை நம் மத்தியில் இருந்தே உருவாக்க வேண்டும். இதனை படித்தவுடன் உங்கள் மனதில் எழக்கூடிய விடயம் Telepathy மூலம் என் செவிகளில் விழுகின்றது. எங்கள் அபரிதமான முன்னேற்றத்திற்கு எமது அரசியல்வாதிகளல்லோ தடையாக இருக்கின்றார்கள் என்பதுதானே உங்கள் கவலை. அதுதான் இலங்கையின் மொத்த முஸ்லிம்களினதும் புத்திஜீவிகளினதும் கவலை. தலைமைப் பதவிகளுக்கே இலாயக்கற்றவர்களால் எமது சமூகம் மண்ணுக்கு இரையாகின்றது என்பதனைவிட முஸ்லிம் சமூகம் அவரகளது வளர்ச்சிக்கு எருவாகப் போகின்றதே என்பதுமே எமக்கிடையே இருக்கும் ஒன்றிரண்டு புத்திஜீவிகளினதும் கவலையுமாகும். நாங்கள் எங்களை நெறிப்படுத்தக்கூடிய அரசியல் தலைமுறைகளை உருவாக்க வேண்டும். எமது அரசியலாளர்கள்தான் எமது முன்னேற்றத்திற்கு சாவுமணி அடிப்பவர்கள் என்றால் அவர்களுக்கு சாவு மணி அடித்துவிட்டு அவர்கள் மேலால் நாம் நடந்து சென்று நம் இலக்கை அடைய அடையும்வரை போராட வேண்டும். இதற்கு முழு சமூகமும் ஒன்றுபட வேண்டும். பெரு முயற்சி வேண்டும். பெரும் சக்தி வேண்டும். இது ஒன்றுக்கும் நாம் தயார் இல்லையென்றால் மஸ்ஜிதுகளுக்குச் சென்று குர் ஆனை எடுத்து தஜ்வீத் முறைப்படி ஓத முயற்சிப்போம்.

    ReplyDelete
  3. எந்த அமைச்சருக்கும் எல்லா மக்களும் ஓட்டு போடுவதில்லை , ஜனாதிபதிக்கு மட்டுமே கூடுதலான முஸ்லீம் ஓட்டு விழுகிறது , தன் சமூகத்திற்கு அவர்கள் அர்ப்பணிப்புடன் நடந்து கொள்ளும் போது ஓட்டு போட்டவன் தனது இனத்தின் ,நலனை , பாதுகாப்பை எதிர்பார்ப்பது நியாயமே , இப்போது கூட ஒரு வேட்பாளராக விரும்பும் ஒருவர் அந்த மக்களுக்கு செய்ய போவதை எல்லாம் பட்டியல் போடுகிறார் . அப்படியானால் முஸ்லீம் வாக்குகளை எதிர்பார்ப்பது நியாயமா , உம்மை போன்ற ஒரு சிலர் சில வரப்பிரசாதங்களை பெறுவதால் , முழு முஸ்லீமும் பெற்றதாகி விடுமா

    ReplyDelete

Powered by Blogger.