Header Ads



கோத்தாவை வேட்பாளராக அறிவிக்கிறார் மகிந்த – ஒரு வாரம் ஆலயங்களில் வழிபாடு

- கி.தவசீலன் -

வரும் அதிபர் தேர்தலுக்கான பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக கோத்தபய ராஜபக்சவை, எதிர்வரும் 11ஆம் நாள், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவிக்கவுள்ளார் என, ராஜபக்சவினருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கோத்தாபய ராஜபக்சவை நிறுத்துவதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.

கொழும்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில், அதிபர் வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை மகிந்த ராஜபக்ச வெளியிடவுள்ளார்.

அந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர், ஒரு வார காலத்துக்கு கோத்தாபய ராஜபக்ச நாடு முழுவதிலும் உள்ள மத வழிபாட்டு இடங்களுக்குச் செல்லவுள்ளார்.

அதேவேளை, கோத்தாபய ராஜபக்சவுக்கு நெருக்கமான உதவியாளர்கள், அவரது அதிபர் தேர்தலுக்கான கொள்கை அறிக்கையை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளதாகவும் கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 comment:

  1. கோதபாயாவை சனாதிபதியாக்கும் திட்டத்தை ஏற்கனவே அமெரிக்கா பொறுப்பேற்று இப்போது அந்த நாடகம் நடந்தேறிக்கொண்டிருக்கின்றது. ஏற்கனவேதேர்தல் திணைக்களத்தில் கணணி பயிற்சி என்ற பெயரில் அமெரிக்க ஸி.ஐ.ஏ யின் ஏஜென்ட் கம்யூட்டர் ஜில்மார்ட்வேலைகளை முன்னெடுத்து வருகின்றான். அரசாங்கமும் அரசாங்க உயர் அதிகாரிகளும் பைத்தியக் காரத்தனமாக பதவிக்குபோட்டி போடுகின்றனர். பிரதமரோ அல்லது சஜித்தோ இதனைக் கவனமாகக் கையாளது போனால் எஞ்சியிருப்பது பாயைச் சுருட்டிக்கொண்டு ஓடுவது மட்டும்தான்

    ReplyDelete

Powered by Blogger.