Header Ads



ரஸ்மினின் உரைக்கு, மனோ கணேசனின் விமர்சனம் (வீடியோ)

- Mano Ganesan -

"பால் சமத்துவம்" என்பது இன்றைய யுகத்தின் அறைகூவல். வீட்டிலும், நாட்டிலும் பெண்கள் ஒரு மறுக்க முடியா அங்கம். இதை மறுப்பவர், பிற்போக்காளர்!

இங்கே இதை பாருங்கள்! “வெட்கி தலை குனிமின்” என்று கூவ தோன்றுகிறது!!!

இஸ்லாத்தின் காதி என்ற மத நீதிமன்றில் பெண்கள் இடம்பெறுவது தொடர்பில் எதை வேண்டுமானாலும் பேசிவிட்டு போகட்டும். அதில் நாம் தலையிடவில்லை. அதை அந்த மார்க்க அறிஞர் குழாம் பார்த்துக்கொள்ளட்டும். அதுவே எம் அரசின் நிலைப்பாடு.

ஆனால், “ஆட்சி பொறுப்பில் அமர பெண்களுக்கு தகுதி இல்லை” என்று பொதுமையாக கூறிவிட்டு, அதற்கு சந்திரிக்கா முதல் சோனியா ஊடாக உலகின் முதல் பெண் பிரதமர் சிறிமாவையும் பெயர் சொல்லி, பேரியல், பெனாசிர் வரை, இந்த மனுஷன் உதாரணம் காட்டுவதை சகிக்க முடியவில்லை.

“இவர்கள் எல்லோரும், தம் குடும்ப ஆண்கள் மூலமாகவே வெளிச்சத்துக்கு வந்தார்கள்” என்றும் இவர் கூறுகிறார். ஆம், ஒடுக்கப்பட்ட ஒரு பிரிவு, அது ஜாதியோ, இனமோ, வர்க்கமோ அல்லது பெண் பாலோ, எதுவாக இருந்தாலும், அது எழுந்து வர, ஒரு ஊன்றுக்கோல் தேவைப்படுகிறது என்பது விஞ்ஞானம்.

எம்மை போன்ற முற்போக்காளர் ஒடுக்கபட்டோருக்கு ஊன்றுக்கோலாக துணை இருப்போம்.
ஆனால், இன்று நடக்க தொடங்கி விட்ட பிறகு இவர்களுக்கு, இங்கே பெண்களுக்கு எந்த ஊன்றுக்கோலும் படிப்படியாக இனி தேவைப்படாது.

அப்புறம் பெண் ஆட்சியாளர்களின் ஆட்சி பணியையும் சாடையாக விமர்சித்து தன் முட்டாள் கருத்துக்கு இவர் நியாயம் தேடுகிறார். அட, இன்றைய ஆண் ஆட்சியாளர்கள் மட்டும் என்னய்யா கிழித்து விட்டார்கள்?

இஸ்லாமிய முற்போக்காளர்கள், குறிப்பாக இஸ்லாமிய முற்போக்கு சகோதரிகள், இந்த பிற்போக்கு மடைமைக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். இப்படியே போனால், “ஆட்சி பொறுப்புக்கு தகுதி இல்லாத பெண்களுக்கு ஆட்சியாளரை தெரிவு செய்யவும் தகுதியில்லை” என்று கூறி (இவரின் தர்க்கப்படி பார்த்தால் இந்த தர்க்கம் சரிதானே!!!) இஸ்லாமிய பெண்கள் வாக்களிக்கவும் கூடாது என்பார்கள்.

(அது சரி, தமிழ்நாட்டு தமிழில் சரளமாக பேசும் இந்தாள் யாரப்பா?)



2 comments:

  1. ithu mano kanesanin karutha?? intha news shariyaha puriyavillai.

    ReplyDelete
  2. Mr Minister,

    He is an abnormal case and an imported stuff. If you can take legal action against him through your ministry please do it under "Degraging the Gender balance" . These elements should be erradicated in order to avoid unpleasant situation within the community and among the communities.

    ReplyDelete

Powered by Blogger.