Header Ads



பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை நாங்கள் விசர் நாய்களாகவே பார்க்கின்றோம்

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை நாங்கள் ஒரு விசர் நாய்களாகவே பார்க்கின்றோம் என கிழக்கு மாகாண ஆளுனர் ஷான் விஜயலால் டி சில்வா தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இன்று -20-  நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் உரையாற்றினார்.

உலகத்தில் உள்ள அனைவரும் விரும்பும் அனைவரது வாய்களிலும் உச்சரிக்கப்படும் ஒரு சொல்லாக சமாதானம் என்றும் சொல் இருக்கின்றது. இன்று சில இடங்களில் சமாதானத்தின் சொல்லின் அர்த்தம் புரிந்துகொள்ளப்படாத நிலையில் அந்த சமாதானத்திற்கு சவால் ஏற்படும் போதே அதனை புரிந்துகொள்ளும் நிலையும் இருக்கின்றது.

ஒரு காலணித்துவ நாடுகளில் சுதந்திரம் எப்படி இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோன்றுதான் இந்த சமாதானமும் ஒருமைப்பாடும் இல்லாதிருக்கும்போது அங்கு எவ்வாறான சூழ்நிலை உருவாகும் என்பதும் அனைவருக்கும் தெரியும். நாங்கள் இந்த நாட்டில் எந்த யுத்ததினையும் விரும்பவில்லை. அவ்வாறான நிலையிலும் பல்வேறு விதமான வன்முறைகளுக்கு முகம்கொடுக்கவேண்டிய சூழ்நிலையும் உள்ளது.

இலங்கை காலணித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலத்தில் அதில் இருந்து மீட்பதற்காக இந்த நாட்டில தமிழ்,சிங்கள, முஸ்லிம் மக்கள் இணைந்து போராட்டங்களை நடாத்தினார்கள். அவ்வாறு அனைவரும் இணைந்து பெற்றுக்கொண்ட சுதந்திரத்தினை நாங்கள் இன்று அவற்றினை அனுபவிக்க முடியாத நிலையில் உள்ளோம்.

இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாத செயற்பாடுகளை அனைவரும் செய்வதில்லை. ஒரு சிறிய குழுவினரே இந்த பயங்கரவாத செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர். இந்த செயற்பாடுகள் இலங்கைக்கு மட்டுமன்றி ஏனைய நாடுகளுக்கும் தாக்கத்தினை செலுத்துபவையாக இருக்கின்றன.

இலங்கையில் மட்டுமன்றி உலக நாடுகளிலும் இவ்வாறான ஒரு சிறு குழுக்களினாலேயே பயங்கரவாத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை நாங்கள் ஒரு விசர் நாய்களாகவே பார்க்கின்றோம்.

இந்த நாட்டில் கடந்த 10 வருடத்திற்கு மேலாக அமைதி நிலவிவந்த நிலையில் கடந்த ஏப்ரல் 21 தாக்குதல் என்பது இலங்கை மக்கள் பழைய நினைவுகளை நினைவுபடுத்தும் வகையில் அமைந்த காரணத்தினால் இந்த நாட்டில் பல சம்பவங்கள் நடந்தேறியது.

யுத்த காலத்தில் உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன. அந்த உயிர்களை நாங்கள் மீள கொண்டு வரமுடியாது. அவ்வாறான சூழ்நிலை இந்த நாட்டில் எப்போதும் ஏற்படக்கூடாது என ஆளுநர் மேலும் குறிப்பிட்டார்.

1 comment:

  1. ஏப்ரல் 21 தாக்குதலை நடாத்தியவர்கள் பயங்கரவாதிகள்தான். அதன் பின்னர் நடந்த தாக்குதலை நடாத்தியவர்கள் யார்? அவர்களையும் விசர் நாய் பட்டியலில் சேர்த்து பேசினால் அருமையாக இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.