Header Ads



அடுத்தவாரம் சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்போம் - ஹக்கீமும், றிசாத்தும் ஆதரவளிப்பார்கள் - மங்கள

அடுத்த வாரம் எமது கட்சியினர் அனைவரும் ஒன்றிணைந்து, எமது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் யோசனையில், கரு ஜயசூரியவின் ஆமோதித்தலில், சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்போம் என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மாத்தறை உயன்வத்தை மைதானத்தில் நடைபெற்று வரும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

அரசாங்கம் இட்டுள்ள பலமான அடித்தளத்தை அடுத்த கட்டத்திற்கு 2025 ஆம் ஆண்டுக்கு கொண்டு செல்லும் பலம் இளம் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு இருக்கின்றது.

சஜித் பிரேமதாசவுடன் எனக்கும் பிரச்சினைகள் இருந்தன. ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர் கருவா பொல்லுகள் சிலவற்றை நான் கையிலும் எடுத்தேன்.

தற்போதைய அரசாங்கத்தின் நிதியமைச்சர் என்ற வகையில், திறைசேரியில் இருந்து அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு அச்சமின்றி பணத்தை ஒதுக்க முடியும். அவர் திருடமாட்டார்.

பணத்தை சரியான முறையில் செலவு செய்வார். சில அமைச்சுக்கள் ஒரு சில வேலைகளை இன்னும் செய்யவில்லை. அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ஒதுக்கிய நிதியில் 97 வீதத்தை அவர் செலவிட்டுள்ளார். அந்தளவுக்கு அக்கறை இருக்கின்றது. அது தந்தையிடம் இருந்து வந்தது.

நாடு மீண்டும் ராஜபக்ச குடும்பத்தின் அடிமை யுகத்திற்கு செல்வதை தடுக்க கூடிய ஒரே நபர் சஜித் பிரேமதாச. கோத்தபாய என்பவர் வன்செயல் காலத்தில் ஒரு பயந்தாள்கொள்ளி. நீங்கள் கோத்தபாய என்றுடி அழைக்காதீர்கள் கோத்தபயம் எனக் கூறுங்கள். குற்றச் செயல்களை செய்தவர், துறவியாக மாறியது போல், நாட்டின் ஜனாதிபதியாக பதவிக்கு வர முயற்சிக்கின்றார்.

மக்கள் நீங்கள் அச்சம் கொள்ள வேண்டாம், சஜித் பிரேமதாச, ராஜபக்சவினர் செல்ல இடமில்லாமல் தோல்வியடைய செய்வார். ஐக்கிய தேசியக் கட்சியில் எவரும் பிளவுப்பட்டு கிடக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியினர் என்ற வகையில் நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கின்றோம்.

அடுத்த வாரம் எமது கட்சியினர் அனைவரும் ஒன்றிணைந்து, எமது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் யோசனையில், கரு ஜயசூரியவின் ஆமோதித்தலில், சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்போம்.

சஜித் பிரேமதாசவுக்கு எமது சகோதர கட்சிகள் ஆதரவளித்துள்ளன. இன்னும் இரண்டு வாரங்களில் எமது ஜனாதிபதி வேட்பாளருடன் நாங்கள் காலிமுகத்திடலுக்கு வரும் போது, அவரை சூழ, எமது பிரதமர், சபாநாயகர் என முழு கட்சியும் மாத்திரமல்லாது, ரவூப் ஹக்கீம், றிசார்ட் பதியூதீன், மனோ கணேசன், திகாம்பரம், ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க அனைவரும் இருப்பார்கள்.

நாங்கள் வடக்கு மக்களின் ஆதரவையும் பெற்று 1994ஆம் ஆண்டு சந்திரிக்கா பெற்றுக்கொண்ட வாக்குகளை விட பெருவாரியான வாக்குகளை பெற்றும் 25 ஆண்டுகளுக்கு பிறகு ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி ஒருவரை ஆட்சிக்கு கொண்டு வரும் என உறுதியளிக்கின்றேன் என அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

5 comments:

  1. Hon. Mangala is a very good misionist...

    ReplyDelete
  2. மங்கள அவர்களே. முஸ்லிகள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தீர்மானித்த பின்னர் தான் நீங்கள் சொன்ன இருவரும் மஹிந்த பக்கம் இருந்து வெளியே வந்தார்கள். இந்த இருவரையும் வாங்கி விட்டால் எல்லாம் சரி என்று என்ன வேண்டாம்.

    ReplyDelete
  3. We have to vote for sajith
    But our faith with Allah.
    He is ruler.he is the giving and removing the power.

    ReplyDelete
  4. Don't vote for sajith
    He is only support for Tamil people not Muslims

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete

Powered by Blogger.