Header Ads



சஜித்துக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுங்கள், குழப்பம் ஏற்படுத்துவோரை விலக்குங்கள் - பொன்சேகா

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தையும், கட்சியின் கொள்கையையும் மீறியே செயற்பட்டு வருகின்றார்.கட்சியின் கொள்கையை மீறி செயற்படும் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என ஐக்கிய தேசிய முன்னணியின்  பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவிக்கின்றார். 

அதேபோல் இன்று சஜித் பிரேமாதாசவுடன் ஒரு அணி உள்ளது அனைவருக்கும் தெரிந்ததே. அவர்களை தவிர பெரும்பான்மையான உறுப்பினர்கள் பிரதமருடன் இணைந்து கட்சிக்காக செயற்பட  தயாராக உள்ளனர். ஆகவே கட்சிக்குள் இருந்து குழப்பங்களை ஏற்படுத்தும்  நபர்கள் கட்சியை விட்டு வெளியேறுவதே நல்லதென நான் நினைக்கிறேன். அவர்கள் வெளியேறினால் எம்மால் கட்சியை பலப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் உள்ள இழுத்தடிப்புகள் குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

(ஆர்.யசி)

7 comments:

  1. அய்யா நீங்கள் நல்லவர் ஆனால் சஜித்தை வெளியே அனுப்ப சொல்வது சரியல்ல.சஜித் அணி வெளியேறினால் UNP தடம் இல்லாமல் போய்விடும்

    ReplyDelete
  2. Your greedy man
    Your looking for big CHAIR

    ReplyDelete
  3. We need leader for country.
    Not for party

    ReplyDelete
  4. Sajid is a member of UNP party since his infancy whereas you joined UNP yesterday or day before.

    ReplyDelete
  5. Antha wisyattha party paartthukkum...ungada partiya sariya paarthikkitta ok...

    ReplyDelete
  6. You came from back door without securing even 5000 votes and u r advising unp about a member who was a unp member from the beginning.first of all take disciplinary action against pent house Ravi and his master's.

    ReplyDelete

Powered by Blogger.