Header Ads



சேலையில் புத்தரின் உருவம், பெண்ணுக்கு நடந்த அவலம், பௌத்ததுறவி தலமையில் கூடி மனது புண்படி பேச்சு

திருகோணமலை பொது பஸ்நிலையத்தில் யாழ்ப்பாணம் செல்வதற்கு பஸ் நிலையத்திற்கு சென்ற பெண் அணிந்திருந்த சேலையால் இன்று -29- மதியம் குறித்த பகுதியில் பதற்ற நிலமை ஏற்பட்டது.

குறித்த பெண் தனது பிள்ளையுடன் வயதான பெண்ணெருவருமாக திருகோணமலை நகரிற்கு  ஆலய வழிபாட்டிற்காக வந்தபோதும் அவர் புத்தரின் உருவம் பொறித்த சோலை அணிந்திருந்ததனால் இப்பதற்றநிலைமை ஏற்பட்டது.

குறித்த சேலையில் பொறிக்கப்பட்டிருந்த புத்த பெருமானின் உருவத்தைக் கண்ட சில பெரும்பான்மையினத்தவர்கள் இதுதொடர்பாக பலருக்கும் அறிவித்ததுடன் குறித்த பெண்ணை சுற்றிவளைத்து கூடியதுடன் குறித்த சேலை தொடர்பாக  பெண்ணிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் பஸ்நிலயத்தில் நின்ற பொலிசாரும் குறித்த இடத்திற்கு விரைந்தனர்.

பின்னர் பிரதான பொலிஸ் நிலயத்திற்கு முன்பாகவுள்ள விகாரையின் பௌத்ததுறவி தலமையிலான பலரும் குறித்த இடத்தில் கூடியதுடன் பெண் மீது மனம் புண்படியாகும் விதமான  கருத்துக்களை வெளியிட்டதுடன் திருகோணமலை பிரதான பொலிஸ் நிலையத்திற்கும் அறிவித்தனர்.

அதுமட்டுமன்றி தமது புத்த பெருமானை பொறித்த சேலை அணிந்த பெண்ணிற்கு தகுந்த நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இச்சம்பவம் இன்று பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றது. இந்நிலையில் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிசார் குறித்த பிள்ளை மற்றும் இரு பெண்களையும்  பொலிஸ் நிலயத்திற்கு அழைத்துச் சென்றனர். 

குறித்த பெண்கள் பொலிஸ் வண்டியில் அழைத்து செல்லப்பட்டனர். பஸ் நிலயத்தில் இந்நடவடிக்கையை அதிகளவிலான மக்கள் பௌத்த ஆதரவாளர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்ததாக செய்தியாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திருகோணமலை பிரதான பொலிஸ் நிலையப் பொலிசார் மேற்கோண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. இவ்வளவு பிரச்சினைகள் இதற்கு முன்பு நடந்தும் இன்னும் திருந்தாத மக்களும் உள்ளார்கள்.

    ReplyDelete
  2. Should have called racist Viyalendran to the spot to resolve this issue.

    ReplyDelete

Powered by Blogger.