Header Ads



மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டுமா, என்பதை தீர்மானிக்கும் பொறுப்பு மக்களுடையது - ரணில்

சிறைச்சாலையாக இருந்த போகம்பர சிறைச்சாலை தற்போது சுதந்திர மத்திய நிலையமாக மாற்றப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த சுதந்திரத்தின் ஊடாக முன்னோக்கி செல்வதா அல்லது கடந்த காலத்திற்கு சென்று மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் பொறுப்பு மக்களுடையது எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி போகம்பர கலாசார பூங்காவின் முதல் கட்டத்தை இன்று முற்பகல் திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதமர் இதனை கூறியுள்ளார்.

ஜப்பானிய பிரதமர் ஷிங்சோ அபேவின் உதவியுடன் கண்டி நகரத்தை ஜப்பானின் வரலாற்று சிறப்புமிக்க நாரா நகருக்கு இணையாக அபிவிருத்தி செய்யும் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் நாட்டின் பொருளாதாரம் ஸ்தம்பித்து போக இடமளிக்காது மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இதனால், நாட்டை மீண்டும் வழமைக்கு கொண்டு வரவும், சுற்றுலாத்துறை மேம்படுத்தவும் முடிந்தது எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்த நிகழ்வில் உரையாற்றியஅமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, கண்டி மாநகரின் வரலாற்று சிறப்புமிக்க மரபுரிமைகளை பாதுகாத்து, நகரம் அபிவிருத்தி செய்யப்படும் என கூறியுள்ளார். இதற்கு அமைய கட்டுக்கஸ்தோட்டை நகரை வர்த்தக நகராக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.