Header Ads



ஐதேக சார்பில், சஜித்தை களமிறக்குவதில்லை - ரணில் விடாப்பிடி


ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதில் இன்னும் குழப்ப நிலை நீடிப்பதாக தெரிய வருகிறது.

அமைச்சர் சஜித் பிரேமதாஸ கட்சியின் சார்பில் போட்டியிடுவார் என அதிகளவில் பேசப்பட்டாலும், அதனை கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவினால் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என தெரிய வருகிறது.

தேவை ஏற்பட்டால் சுயேட்சையாக ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை களமிறங்குமாறு, சஜித்திற்கு நெருக்கமான சிலரிடம் பிரதமர் அறிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தனிக்கட்சியில் தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியம் சஜித்திற்கு இருந்தால், கட்சியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அருண டி சொய்ஸாவின் கட்சியில் சந்தர்ப்பம் உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எப்படியிருப்பினும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க சபாநாயகர் கருஜயசூரியவுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கு பிரதமர் விரும்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.

4 comments:

  1. அப்போ அடுத்த ஜனாதிபதி கோத்தாதான்

    ReplyDelete
  2. ரணிலுக்கு ஜனாதிபதி ஆகா விட்டாலும் பரவா இல்லை. Unp தலைமை மிக முக்கியம். எதிர்க் கட்சித் தலைவராகவும் இருக்கலாம். மேலும் ராஜபக்ச கம்பனி சப்போர்ட்டும் கிடைக்கும். ஏமாற முஸ்லிம், தமிழ் கட்சி களும் உள்ளன. எனவே சாகும் வரை அரசியலில் காலம் தள்ளலாம். ஒரு பிரச்சினையும் இல்லை.

    ReplyDelete
  3. Ranil should be the candidate representing UNP. The result will be Anura defeat Gota by a slim majority and Ranil a distant third. That will send Ranil home permanently.

    ReplyDelete

Powered by Blogger.