August 12, 2019

பொதுஜன பெரமுனவின் கன்னி சம்மேளனத்தில், நடந்தேறியவை என்ன...?

(இரா­ஜ­துரை ஹஷான்)

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் தலை­மைத்­து­வத்தை பொறுப்­பேற்ற எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜ­பக்ஷ அந்த கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவை அறி­வித்தார். பொது­ஜன பெர­மு­னவின் கன்னி சம்­மே­ளனம் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை பிற்­பகல் சுக­த ­தாஸ உள்­ளக அரங்கில் இடம்­பெற்­றது. இதன் போதே குறித்த தெரி­வு­களும் அறி­விப்­புக்­களும் இடம்­பெற்­றன. 

உத்­தேச ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்பில் அர­சியல் கட்­சிகள் வேட்­பா­ளர்கள் குறித்து அறி­விப்­புக்­களை விடுக்க தயா­ராகி வரு­கின்ற நிலையில் பொது­ஜன பெர­மு­னவின் கட்சி சம்­மே­ள­னத்தில் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவின் பெயர் அறி­விக்­கப்­பட்­டது. 

அந்த கட்­சியின் தவி­சா­ள­ரான பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரீஸ் கட்­சியின் தலை­மைத்­துவ பத­விக்கு மஹிந்த ராஜ­ப­க்ஷவின் பெயரை பரிந்­து­து­ரைத்து யோச­னையை முன்­வைத்தார். அதற்­காக அனைத்து உறுப்­பி­னர்­களும் ஏக­ம­ன­தாக அனு­மதி வழங்­கி­னார்கள். 

இதன் பின்னர் நீண்ட உரை­யாற்­றிய பொது­ஜன பெர­மு­னவின் தலைவர் மஹிந்த ராஜ­பக்ஷ பிற்­பகல் 3.58 மணி­ய­ளவில் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவின் பெயரை வேட்­பா­ள­ராக அறி­வித்தார். அத்­தோடு சம்­மே­ளனம் இடம்­பெற்ற மேடைக்கு வருகை தந்த கோத்­த­பாய ராஜ­பக்ஷ மதத்­த­லை­வர்­களை வணங்கி பிர­தான மேடைக்குச் சென்று மஹிந்த ராஜ­ப­க்ஷவின் காலில் விழுந்து ஆசீர்­வாதம் பெற்றுக் கொண்டார். 

சுதந்­திர கட்சி உறுப்­பி­னர்­களும் பங்­கேற்பு 

கன்னி சம்­மே­ள­னத்­திற்கு  பொது­ஜன பெர­மு­னவில் தற்­போது அங்­கத்­துவம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும்,  கூட்டுக் கட்­சி­களின் தலை­வர்­களும் கலந்துக் கொண்­ட­துடன். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின்   உறுப்­பி­னர்­க­ளான   சரத் அமு­னு­கம,   எஸ்.பி . திஸா­நா­யக்க, டிலான் பெரேரா  மற்றும் வட­கி­ழக்கின் முன்னாள் முத­லைச்சர்  வர­த­ராஜ பெருமாள்,  விநா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன் (கருணா) உட்­பட  பொது­ஜன பெர­மு­னவின் உள்­ளு­ராட்­சி­மன்ற மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள் பெரு­ம­ள­வான ஆத­ர­வா­ளர்­களும் கலந்து கொண்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.ஆத­ர­வா­ளர்கள் ஆர­வாரம்

மஹிந்த ராஜ­பக்ஷ பொது­ஜன பெர­மு­னவின் தலை­மைத்­து­வத்தை ஏற்ற போதும் , கோத்­த­பாய ராஜ­பக்ஷ பிர­தான மேடைக்கு வருகை தந்த போதும் சம்­மே­ள­னத்தில் கலந்து கொண்­டி­ருந்த அனை­வரும் எழுந்து நின்று கர­கோஷம் எழுப்பி ஆர­வாரம் செய்­தனர். கோத்­த­பா­ய­வி­னதும், மஹிந்­த­வி­னதும், புகைப்­ப­டங்­களை ஏந்தி வெற்றி கோஷங்­களை எழுப்­பினர். அதே போன்ற இடை­வி­டாது உற்­சாக கோஷங்­களை எழுப்பி ஆர­வாரம் செய்­தனர். கட்சி சின்னம் கைய­ளிப்பு

பொது­ஜன பெர­மு­னவின் தலை­வ­ராக மஹிந்த ராஜ­ப­க்ஷவின் பெயரை பரிந்­து­ரைத்த பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ், பிர­தான மேடைக்கு அழைத்துச் சென்று கட்சி சின்­னத்தை அவ­ரிடம் கைளித்தார். உறுதி மொழி

தாமரை மொட்டின் வடி­வி­லான இளஞ்­சி­வப்பு ஒளி விளக்­கு­களை ஏந்தி கட்­சியின் தலைவர் மஹிந்த ராஜ­பக்ஷ, ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ, போஷகர் பசில் ராஜ­பக்ஷ மற்றும் தவி­சாளர் பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரீஸ் உள்­ளிட்ட சம்­மே­ள­னத்தில் கலந்து கொண்ட அனை­வரும் உறுதி மொழி எடுத்துக் கொண்­டனர்.

" மக்­களின் பிர­தி­நி­தி­யாக தெரிவு செய்­யப்­ப­டு­வர்கள் எந்­நி­லை­யிலும் மக்­களின் நலன்­களை மாத்­திரம் கருத்திற் கொண்டு பொறுப்­புடன் செயற்­பட வேண்டும்,  முன்­னெ­டுக்­கப்­படும்  அனைத்து செயற்­பா­டு­க­ளிலும் நாட்டு பற்றும், பொது­ஜன பெர­மு­னவின்  பிரத்­தி­யேக கொள்­கை­களும் எந்­நி­லை­யிலும்  முன்­னி­லைப்­ப­டுத்­தப்­படல் அவ­சியம்.

கட்­சியின் சம்­மே­ள­னத்தின் போது  அனைத்து தரப்­பி­னரும் ஒரு இலக்­கினை நோக்கி பய­ணிப்­பது அவ­சி­யாகும். அர­சியல்  மாற்­றங்­களின் போதும் கட்­சியின் கொள்­கை­யினை ஒரு­போதும் விட்டுக் கொடுக்க கூடாது,  உத்­தேச தேர்­தல்­களில்  வெற்­றி­யினை  மாத்­திரம் இலக்காக் கொண்டு செயற்­ப­டாமல் தாய் நாட்டின் நலன்­க­ளையும் கருத்திற் கொண்டு அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டுதல்  கட்­சியின் அனைத்து உறுப்­பி­னர்­களின் தார்­மீக பொறுப்­பாகும். " என்று அனை­வரும் உறுதி மொழி எடுத்துக் கொண்­டனர்.

தமிழில் பேசிய மஹிந்த 

கட்­சியின் தலை­மைத்­து­வத்தைப் பொறுப்­பேற்றுக் கொண்­டதன் பின்னர் நீண்ட உரை­யாற்­றிய மஹிந்த ராஜ­பக்ஷ தமிழிலும் உரை­யாற்­றினார். வடக்கு , கிழக்கு உள்­ளிட்ட இலங்கை வாழ் தமிழ் மக்களிடம் ஆதரவைக் கோரினார். 

பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு 

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்ட கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் தமிழ் கலாசரப்படி பொன்னாடை போர்த்தி கௌரவிப்பும் இடம்பெற்றது.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் விசேட உரையினை தொடர்ந்து தேசிய  கீதத்துடன்  மாலை 4.30 மணியளவில் சம்மேளனம் நிறைவுப் பெற்றது.

1 கருத்துரைகள்:

It means there is no more SLFP now. They are plotting to divide it long time ago.. They do not like to see SLFP as it is related to BANDARANAYAKE FAMILY. NOW, they to replace it With MAHINDA FAMILY nothing else. A good luck for them all.

Post a comment