Header Ads



காஷ்மீர் விவகாரத்தை தலிபான்கள், எப்படி நோக்குகிறார்கள்...?

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கிய இந்திய அரசின் முடிவு குறித்து தாலிபன் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

தாலிபன் அமைப்பின் Voice of Jihad என்ற இணையதளத்தில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

அதில், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது, அப்பகுதிக்கு கூடுதல் படைகள் அனுப்பியது, அப்பகுதியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், அங்குள்ள முஸ்லிம் மக்கள் படும் கஷ்டங்கள் குறித்து செய்திகள் பல வெளியாகி உள்ளதாக கூறப்பட்டிருக்கிறது.

மேலும் அந்த அறிக்கையில், "இது குறித்து தாலிபன் அமைப்பு தனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறது. இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளும், காஷ்மீர் பகுதியில் வன்முறை மற்றும் பிரச்சனை ஏற்படும் அளவிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று வலியுறுத்துகிறோம்.

காஷ்மீருக்கு சிறப்புரிமை தந்த அரசமைப்பு சட்டத்தின் 370வது உறுப்புரை - முழு வரலாறு
காஷ்மீர் மசோதாக்கள் நிறைவேறிய பின்னர் கள நிலவரம் என்ன?
போர் மற்றும் மோதலால் நாங்கள் கசப்பான அனுபவங்களை பெற்றிருக்கிறோம். இப்பிராந்திய பிரச்சனையை அமைதி மற்றும் பகுத்தறிவுப் பாதையைக் கொண்டு தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, இஸ்லாமிய நாடுகள், ஐ.நா போன்ற முக்கிய அமைப்புகள் காஷ்மீரில் இருக்கும் பாதுகாப்பற்ற சூழலை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி, இந்த நெருக்கடி பரவுவதை தடுத்து அமைதியான முறையில் இப்பிரச்சனையை தீர்க்க வேண்டும்.

காஷ்மீர் பிரச்சனையை ஆப்கானிஸ்தானுடன் சிலர் இணைத்து பேசுவது, இந்தச் சூழலில் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. ஏனெனில், ஆப்கானிஸ்தான் பிரச்சனைக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. This is nothing but a political muscling of Modi.. Not all Indians support this move... It is a dangerous move,,, India needs peace for its economic development and this is not good time for Pakistan and India.. any war is bad for both.. china will reap benefit of it.. and west too. Let us wait and see how this stupid modi see more blood in this part of the world...

    ReplyDelete

Powered by Blogger.