Header Ads



சஜித்தின் கூட்டத்திற்கு சென்றவர்களும், ரணிலின் விருந்தில் பங்கேற்பு


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நேற்றைய தினம் இரவு அலரி மாளிகையில் வழங்கப்பட்ட இரவு விருந்தில் பலர் கலந்து கொண்டதாக தெரிய வருகிறது.

“சஜித் வருகிறார்” பேரணியில் கலந்து கொண்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த விருந்தில் கலந்து கொண்டதாக இராஜங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் அந்த அரசியல் விடயங்கள் தொடர்பில் ஒன்றுமே கலந்துரையாடப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அரச பணத்தில் இரவு விருந்து வழங்கப்படவில்லை. தனிப்பட்ட பணத்திலேயே இந்த விருந்து வழங்கப்பட்டது. இதில் பல உறுப்பினர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து கொண்டனர். ஒருவருக்கு ஒருவர் நட்புறவை ஏற்படுத்திக்கொள்ளும் வகையிலேயே இந்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றது.

விருந்து உபசாரத்தில் ஹர்ஷ டி சில்வா, இரான் விக்ரமசிங்க, அஜித் பீ பெரேரா, நலின் பண்டார உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர். மனோ கணேசன், தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.

எனினும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ மற்றும் மங்கள சமரவீர ஆகிய இருவரும் கலந்துக்கொள்கவில்லை. எதிர்ப்பு கோபங்கள் இதற்கு காரணமல்ல அவர்களுக்கு பேரணியின் பின்னர் தாமதமாகியிருக்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் உள்ளக முரண்பாடுகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில் இந்த விபருந்து உபசார நிகழ்வு முக்கியத்துவம் மிகுந்ததாக பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை களமிறக்குவதில், கட்சியின் தலைவராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க காட்டி வரும் தயக்கமே இந்த முரண்பாடுகளுக்கு காரணமாகும்.

No comments

Powered by Blogger.