Header Ads



ஏட்டிக்குப் போட்டியாக விருந்து

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவினால் நேற்றிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் நிராகரித்துள்ளனர்.

கோத்தபாய ராஜபக்ச நேற்றிரவு கொழும்பு ஷெங்ரீலா ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த இராப்போசன விருந்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கலந்துக்கொண்டுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச விருந்துக்கான அழைப்பை விடுத்திருந்ததுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விருந்தில் கலந்துக்கொண்டுள்ளனர்.

இதற்கு அமைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, நிமல் சிறிபால டி சில்வா, பைசர் முஸ்தபா, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, லசந்த அழகியவண்ண, அங்கஜன் ராமநாதன், ஸ்ரீயானி விஜேவிக்ரம, திலங்க சுமதிபால, சாந்த பண்டார, காதர் மஸ்தான், துஷ்மன் மித்ரபால ஆகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விருந்தில் கலந்துக்கொண்டனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் மரண சடங்கு ஒன்றுக்கு செல்ல வேண்டியிருப்பதாக கூறி, அழைப்பை நிராகரித்துள்ளார். அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்கவும் விருந்துக்கான அழைப்பை நிகராகரித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தவிர, கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் சிலரும் இந்த விருந்தில் கலந்துக்கொண்டுள்ளனர்.

கடந்த செவ்வாய்கிழமை சஜித்தின் ஏற்பட்டிலும் புதன்கிழமை கோத்தபயவின் ஏற்பாட்டிலும் விருந்துகள் நடைபெற்ற அதேவேளை நாளை மறுதினம் சனிக்கிழமை ரணிலும் ஏற்பாட்டிலும் விருந்து நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. களவாடப்பட்ட மக்களின் பணம் இப்போது கோடி கோடியாக உல்லாச ஹோட்டல்களில் கரைகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.