Header Ads



தேசியப் பட்டியல் கேட்டு அதாவுல்லாவும், ஹிஸ்புல்லாவும் விண்ணப்பம் - மஹிந்த தெரிவிப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இடைவெளியாகியுள்ள தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு இதுவரையில் 19 எழுத்துமூல வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அக்கூட்டணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநராக கலாநிதி ஹிஸ்புல்லாவை நியமனம் செய்தபோது, அவரது தேசியப் பட்டியல் பாராளுமன்ற பதவி இராஜினாமா செய்யப்பட்டது. அந்த இடத்துக்கு குருணாகல் மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார நியமிக்கப்பட்டார்.

குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்க திடீர் மரணமடைந்ததைத் தொடர்ந்து மக்கள் தெரிவு பட்டியலில் அடுத்து காணப்பட்ட சாந்த பண்டார அப்பதவியைப் பெறுவதற்கு தனது தேசியப் பட்டியல் உறுப்புரிமையை இராஜினாமா செய்தார்.

இதனால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான கூட்டணியாக கருதப்படும் வெற்றிலைச் சின்ன பொதுஜன ஐக்கிய முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியொன்று இதுவரையில் வெற்றிடமாகவே உள்ளது.

இப்பதவிக்காக விண்ணப்பித்துள்ள 19 பேரில் கலாநிதி ஹிஸ்புல்லா உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை மக்கள் காங்கிரஸ், கம்யுனிஸ்ட் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகளிடமிருந்து எழுத்து மூல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அமரவீர எம்.பி. மேலும் குறிப்பிட்டுள்ளார். DC

No comments

Powered by Blogger.