Header Ads



கோட்டாபய பெற்றுக்கொண்ட தேசிய அடையாள அட்டை + கடவுச்சீட்டு குறித்து விசாரணை ஆரம்பம்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்‌ஷ, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திலிருந்து கடவுச் சீட்டை எவ்வாறு பெற்றுக்கொண்டார் என்பது தொடர்பில் இரு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்துமாறு, பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவினால், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டுப் பிரஜையாவிருந்த கோட்டாபய ராஜபக்‌ஷ, புதிய தேசிய அடையாள அட்டையொன்றைப் பெற்றுக்கொண்டு, அதனூடாக கடவுச் சீட்டைப் பெற்றுக்கொண்டுள்ளாரா என்பது தொடர்பிலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 comment:

  1. கோத்தா ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்த பின் ஏன் இந்த விசாரணை. முன்பேயே செய்திருக்கலாமே.

    ReplyDelete

Powered by Blogger.