Header Ads



முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளில், கை வைக்கும் செயல்

முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப் மற்றும் புர்கா ஆடைகளை சட்டரீதியாக தடை விதிப்பதற்குரிய அமைச்சரவைப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது தொடர்பில் இலங்கை முஸ்லிம் சமூகத்திடமிருந்து குறிப்பாக முஸ்லிம் பெண்கள் சமூகத்திலிருந்து பாரிய எதிர்ப்புக்கள் வலுப் பெற்று வருகின்றன. 

கிழக்கு மாகாணத்திலிருந்து அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காத்தான்குடி ஏறாவூர் ஓட்டமாவடி போன்ற முஸ்லிம் பிரதேசங்களில் இருந்தும் இதற்கான எதிர்ப்புக்களும் கண்டனங்களும் எழுந்துள்ளன. 

ஏற்கனவே பொது நிர்வாக உள் நாட்டலுவல்கள் அமைச்சினால் பெண் அரச ஊழியர்களின் ஆடை ஒழுங்கு தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்று நிருபம், பின்னர் அதனை திருத்தி வெளியிடப்பட்ட சுற்று நிருபம் இவை,  முஸ்லிம்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருந்தது. 

இதனை விடவும் தற்போது முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப் மற்றும் புர்கா ஆடைகளுக்கு சட்டரீதியாக நிரந்தர தடை விதிப்பதற்குரிய அமைச்சரவைப் பத்திரம் நீதியமைச்சர் தலதா அத்துக்கோரளவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து இலங்கையில் பல பாகங்களிலும் இதற்கான எதிர்ப்புக்களும் கண்டனங்களும் முஸ்லிம் சமூகத்திடமிருந்து வெளி வருகின்றன. 

முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப் மற்றும் புர்கா ஆடை என்பது பெண்களின் பாதுகாப்பு ஆடை ஒழுங்காகும். இது அவர்களின் அடிப்படை உரிமையாகும். இதில் கைவைப்பதென்பது முஸ்லிம் பெண்களுடைய அடிப்படை உரிமையில் கைப்பதும், உரிமையை மீறுகின்ற செயலுமாகுமென முஸ்லிம் பெண்களும் இஸ்லாமிய பெண் சமூக சேவை அமைப்புக்களும் குற்றம் சாட்டுகின்றன. 

ஒரு முஸ்லிம் பெண் நிகாப் மற்றும் புர்கா ஆடைகளை அணிந்து பாதுகாப்பாக வெளியில் சென்று வரவும் தொழிலை சிறப்பாக செய்யவும் நிகாப் மற்றும் புர்கா பாதுகாப்பு கேடயமாக இருக்கின்றது. 

எனினும் இலங்கை அரசாங்கத்தின் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப இந்த ஆடை ஒழுங்கு தொடர்பில் முறையாக கலந்துரையாடி ஒரு தீர்மானத்துக்கு வரமுடியுமெனவும் இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

கடந்த ஏப்ரல் 21 அன்று இடம்பெற்ற மிலேச்சத்தனமான சம்பவத்தையடுத்து இலங்கையில் முஸ்லிம் பெண்கள் நிகாப் மற்றும் புர்கா அணிந்து செல்வதை முற்றாக தவிர்த்துள்ளனர். 

இதனால் பல முஸ்லிம் பெண்கள் வெளியில் வராமல் வீட்டுக்குள் முடங்கியிருப்பதாகவும் தெரிய வருகின்றது. 

முகத்தை மூடி அணியும் ஆடை என்பது இப்போதல்ல நீண்டகாலமாகவே பெரும்பான்மை இன இனவாதக் குழுக்களால் பிரசாரம் செய்யப் பட்டு வந்தது. தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை அடுத்து முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் புர்கா, நிகாபுக்கு மாத்திரமல்ல அபாயா, ஹிஜாபுக்கும் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. 

முகத்தை மூடி அணிவதை இலங்கையில் தடை செய்ய வேண்டும் எனப் பல்வேறு தரப்புகள் ஜனாதிபதிக்கு அழுத்தங்ளைப் பிரயோகித்தன. 

தீவிரவாதிகள் முகத்தை மறைத்து ஆடையணிந்து மேலும் தாக்குதல்களை நடாத்தலாம் என அதற்குக் காரணம் தெரிவிக்கப்பட்டது.  

ஆரம்பத்தில் அரச வர்த்தமானி அறிவித்தல் மூலம் முகத்திரை அணிய தடைவிதிக்கப்பட்டது.. பாதுகாப்புக் காரணங்களுக்காக இலங்கையில் முகத்தை மூடி ஆடை அணிவது தொடர்பில் வெளியிடப்பட்ட அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் முஸ்லிம்கள் மத்தியில் குழப்பகரமான நிலைமையினை உருவாக்கியது. 

காதுகள் வெளித்தெரிய வேண்டும்' என்ற வர்த்தமானி அறிவித்தல் பெண்களின் ஹிஜாபுக்கும் தடையாக அமைந்தது. இதனையடுத்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியைச் சந்தித்து அரசாங்க வர்த்தமானியில் திருத்தங்களைச் செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். 

முகத்தை மூடி ஆடை அணிவதற்கான தடையினை வரவேற்ற முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகளும் அரசியல் தலைமைகளும் காதுகளை மூடி ஹிஜாப் அணியும் வகையில் வர்த்தமானியில் திருத்தங்களைச் செய்யுமாறு வேண்டிக்கொண்டனர். 

முஸ்லிம் சமூகம் வர்த்தமானி அறிவித்தலில் திருத்தத்தையே வேண்டி நின்றது. இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் ஆடைக்கு தடைவிதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 

ஒருவரை அடையாளம் காண்பதைத் தடுக்கும் வகையில்,  அல்லது சிரமமாக்கும் வகையில் முழு முகத்தையும் மறைக்கும் வண்ணம் பொது இடத்தில் இலங்கைப் பிரஜையால் ஏதாவது ஆடை, உடுப்பு அல்லது துணிமணிகள் அணியப்படலாகாது.  இலங்கை இராணுவம், இலங்கை கடற் படை இலங்கை விமானப் படை, பொலிஸ் அதிகாரிகள் அல்லது சிவில் பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் கேட்டுக்கொள்ளும் பட்சத்தில் ஒருவரை அடையாளம் காண  காதுகள் உட்பட முழு முகத்தையும் மறைக்கும் எந்த ஒன்றினையும் அகற்ற வேண்டி நேரிடும். இங்கு முழு முகம் எனக் குறிப்பிடப்படுவது நெற்றியில் இருந்து வாய்க்குக் கீழுள்ள நாடி வரை என்பதாகும். இங்கு காதுகள் உள்ளடங்காது என திருத்தத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் மீண்டும் முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப் மற்றும் புர்கா ஆடைகளுக்கு சட்டரீதியாக தடை விதிப்பதற்குரிய அமைச்சரவைப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

கொழும்பு மற்றும் கண்டி மாவட்ட மஸ்ஜித் சம்மேளனம் ஏற்பாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெஹிவளை முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாசலில், முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான மாநாடு ஒன்று நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி உள்ளிட்ட மார்க்க அறிஞர்கள், முஸ்லிம் அரசியல்வாதிகள், புத்திஜீவிகளும் பெருந்திரளான சமூக ஆர்வலர்களும்  கலந்துகொண்டனர். 

முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடும் புர்கா, நிகாப் உடைக்கு நிரந்தர தடையுத்தரவு வரக்கூடாது என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம். பிராந்தியத்தில் முதன்முறையாக இலங்கையில் மாத்திரம் இந்த சட்டத்தை கொண்டுவருவதற்கான அவசியமில்லை. நிரந்தர தடைக்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டபோது, அதற்கான மாற்றுவழி குறித்து தீர்மானிப்பதற்கு ஒருவாரம் கால அவகாசம் கோரியிருக்கிறேன். அதற்குள் இதற்கான நிரந்தரத் தீர்வுகுறித்து நாங்கள் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

முஸ்லிம்களின் இவ்வாறான உரிமை விடயத்தில் கை வைக்கக் கூடாது என்று  முஸ்லிம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள், முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்கள் கருத்துக்களை வெளியிடுகின்றன.

கடந்த 14.08.2019 அன்று காத்தான்குடிக்கு விஜயம் செய்த சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரியவை  சந்தித்த சில முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களும் இதனை வலியுறுத்தின. 

முஸ்லிம் பெண்களின் ஆடைக் கலாசாரத்தில் ஏற்படுத்தப்படுகின்ற மாற்றம் அடிப்படை உரிமை மீறல் எனக் கூறி மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழு காரியாலயத்துக்கு, அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலமும் மற்றும் தனித் தனியாகவும் சுமார் 2150 முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டிருப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார். 

அண்மையில் அவசரகால சட்ட ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக தடை செய்யப்பட்ட முஸ்லிம் பெண்களின் முகத்திரை அணிதலை நிரந்தரமாக சட்டத்தின் மூலம் தடை செய்ய அரசு எந்த முயற்சியும் எடுக்கக் கூடாது எனவும் கூறி முஸ்லிம் பெண்களின்  ஆடைக் கலாசாரத்தினை மழுங்கடிக்கும்  செயல் எனக் கூறி, அதனை சட்டமாக்கக் கூடாது என காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பெண்கள் மட்டக்களப்பு மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடுகளைச் செய்துள்ளனர்.  

இதுவரை சுமார் 996 முறைப்பாடுகள் தனித்தனியாக செய்யப்பட்டுள்ளன. மேற்படி முறைப்பாடுகள் இலங்கை அரசியல் அமைப்பின் மூன்றாம் அத்தியாயத்தின் அடிப்படை உரிமை  உறுப்புரையின் 10, 12 ஆம் பிரிவுகள் மீறப்படுவதாகவும் அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இம்முறைப்பாடுகள் பற்றி மனித உரிமை ஆணைக்குழுவின் தலைமை காரியாலயத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் மேலும் தெரிவித்தார். 

இதே நேரம் நிகாப் மற்றும் புர்கா ஆடைகளுக்கு முற்றாக தடை விதிக்காது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சந்தர்ப்பங்களில் மாத்திரம் அதனை தடை செய்யும் வகையில் சட்டமியற்றுவது தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்திடம் நீதியமைச்சு ஆலோசனை கோரியுள்ளதாக தெரிய வருகின்றது. 

பயங்கரவாதத்துக்கும் இஸ்லாத்துக்கும் முடிச்சுப்போடுவதற்கு எத்தனிப்பவர்கள், முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் மீது கை வைப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். 

பல்லின சமூகங்கள் வாழும் நாட்டில் முஸ்லிம்களின்  உரிமைகளுக்காக உரத்துக் குரல் கொடுக்க வேண்டும்.  

இதற்கான முன்னெடுப்புக்களை அரசியல், ஆன்மீக, தொழில்சார் ரீதியாக முன்னெடுக்கப்பட வேண்டும். 

எம்.எஸ்.எம்.நூர்தீன்   

9 comments:

  1. Mr.Shihabdeen !
    read the article again.
    Mr Noordeen has pointed out that many muslim women wering nikab still inside the home.some of them have resigned their jobs. This is the reality.Wearing nikab or not is the choice of muslim women.But unfortunately wearing nikab is mostly seen as a problem by gentlements.even by muslim named men.Ashame!!

    ReplyDelete
  2. Mrs. Rilwan: If you have taken statistics, can you exactly say how many Muslim ladies have resigned and how many are staying indoors with their names and addresses. Don’t talk bullshit like politicians. Here we’re talking about face cover, not abaya.

    Now the real situation is, suppose the face cover is legalized and somebody cover her face in public, surely she will be harassed even by three wheeler drivers or thugs in the street. This is called inviting trouble yourself. Do you like a group of people take off your face cover, insult and laugh at you in public or wear something with respect and dignity without extra cover and walk in the street without any fear?? The choice is yours.

    By the way, I’m not a Muslim named man, but Arabic named practical man. If you can’t answer my questions, please don’t write rubbish.

    ReplyDelete
  3. Mr.sihabdeen...
    உடம்பை காட்டிக் கொண்டு ஆடையை குறைத்து ஆபாசமாக வலம் வரும் பெண்களுக்கு விரும்பிய ஆடை அணியும் சுதந்திரம் உள்ள இந்நாட்டில் தங்களை முழுமையாக மறைத்து ஆடை அணிந்து கண்ணியமாக வீதியால் செல்லும் உரிமையை பறிப்பதற்கு முன்னெடுக்கப்படும் சூழ்ச்சிக்கு எதிராகவே இங்கு கோசம் இடப்படுகின்றது.

    இந்த உரிமை போராட்டத்தில் மார்க்க கருத்து மோதல்களை ஒருபுறம் வைத்து விட்டு சமூகத்தின் அனைத்து தரப்பின் மீதும் நலவை நாடும் நடுநிலை சிந்தனைவாதிகள் மாத்திரம் பங்கெடுத்தால் போதுமானது.


    1990 இற்கு முன்னால் மாற்று மதத்தவர்கள் அணிந்த ஆடை தற்போது எவ்வாறு ஆபாசமாகியுள்ளது என்ற பொறுத்தமான கேள்வியை மறைத்து விட்டு,

    1990 முன்னிருந்தே பல்லாண்டுகலாக எம் பெண்கள் கண்ணிமாக அணியும் ஆடை, கலாச்சார மாற்றத்தின் போதும் பக்குவம் பேணி வருவதை புரியாத மேற்கத்தேய சிந்தனையில் மூழ்கிப்போயுள்ள உங்களைப் போன்ற உள்வீட்டு போராளிகள் இந்த தலைப்புக்குள் மூக்கை நுழைக்காமல் விட்டால் பொறுத்தமாக அமையும்.

    ReplyDelete
  4. Unknown: உங்களுடைய கருத்துக்களுக்கு உரிய பதிலை நான் ஏற்கனவே ஆங்கிலத்தில் தந்திருக்கிறேன். புரியவில்லை என்றால் ஆங்கிலம் தெரிந்தவர்களிடம் காட்டி புரிந்துகொள்ளுங்கள்.

    உங்களுடைய பெற்றோர் வைத்த பெயரில் எழுத்துவதட்கு கூட முதுகெலும்பு இல்லாத நீங்கள் நான் என்ன செய்யவேண்டுமென்று எனக்கு கட்டளை இடுவதை பார்க்கும்போது மந்தபுத்திக்காரன் செய்யும் கோமாளித்தனம் போல் இருக்கிறது. ஹி ஹி ஹி

    Peace: Yes I’m Shihabdeen and I’m proud to be who I’m.

    ReplyDelete
  5. மதத்திற்கு அப்பால் மாற்று மதத்தவர்கள் பலரே விரும்பிய ஆடை அணியும் பெண்களின் உரிமையை பாதுகாக்கப்பட வேண்டும் என்று கருத்துப்பரிமாற்றம் செய்யும் போது,
    உங்களைப் போன்ற பச்சோந்திகளுக்கு பெயரைக்கூறியோ,கூறாமலோ பதிவிடுவதால் பிரயோசனமே கிடையாது.

    ஆங்கிலத்தில் பின்னூட்டம் தெரிவித்தால் அறிவாளியென்று மக்கள் எண்ணிவிடுவார்கள் என்று ஏமாந்து விடாதீர்கள்.
    உங்களின் கீழ்த்தரமான கருத்துக்களை
    ஆங்கிலத்தில் எழுதியதால் பலரின் எதிர்ப்பில் இருந்து தப்பிவிட்டீர்கள் என்று சந்தோசம் அடைந்து கொள்ளுங்கள்


    ReplyDelete
  6. Unknown: முகத்திரையை கிழித்து வீசுவதட்கே காபிர்கள் காத்துக்கொட்டிருக்கிறார்களே தவிர கட்டிஅணைப்பதட்கு அல்ல. இயலுமென்றால் முகத்தை மூடிக்கொண்டு வெளியில் போங்க பார்ப்போம். நின்றுகொண்டே தூங்க வைச்சிருவாங்க.

    தகாத முறைகள் பிறந்து குப்பை தொட்டியில் வீசப்பட்ட குழந்தைகளுக்குத்தான் அப்பன் பெயர் தெரியாது என்று சொல்வார்கள். இப்படி பட்டவர்கள் பச்சோந்திகளை விட கேவலமானவர்கள்.

    ReplyDelete
  7. Mr.sihabdeen

    I'm Abdullah...

    முலீம்களை நசுக்க நினைக்கும் இனவாதிகளுக்கு
    உங்களைப்போன்ற பயந்தாங்கொள்ளி போ(ரா)ளிகள்தான் விருந்து....

    இன்னும் கொஞ்ஞ நாளில் Sihabdeen என்ற பெயரோடு வீதியால் சென்றால் முடியை சிறைத்து விடுவார்களோ என்று மனதளவில் பாதிப்படைந்து பெயரை மாற்றினாலும் மாற்றி விடுவீர்கள் போலும்.

    அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக


    ReplyDelete

Powered by Blogger.