Header Ads



என்னுடன் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள், இணைந்து கொள்ள உள்ளனர் - சஜித்


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்களும் என்னுடன் இணைந்துகொள்வார்கள் என அமைச்சர் சஜித் பிரேமதாச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று தலவத்துகொடையில் இன்று இடம்பெற்றிருந்தது. இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழு மற்றும் செயற்குழு 7 நாட்களுக்குள் கூடி ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டும் என 55 பேர் கையொப்பமிட்டு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து ஊடகவியலாளர்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய அவர்,

“அனைத்தும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்களும் என்னுடன் இணைந்துகொள்வார்கள்.

வேட்புமனு தாக்கல் செய்யும் போது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது அனைவருக்கும் தெரியவரும். அதுவரையிலும் பொறுமையாக இருக்க வேண்டும். எதிர்தரப்பு வேட்பாளர் யார் என்பது குறித்து எனக்கு பிரச்சினை கிடையாது.

நாட்டு மக்களின் பிரச்சினையே முக்கியமாக காணப்படுகின்றது. நாட்டு மக்களே எனக்கு முக்கியம். அவர்களுக்கு சேவையாற்றுவதே எனது ஒரே நோக்கமாகும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

1 comment:

  1. திரு.சஜித் அவர்கள் ஜனாதிபதியாய் வந்தால்,Sri Lanka ஆசியாவின் ஆச்சரியமாய் மாறிவிடும்

    ReplyDelete

Powered by Blogger.