Header Ads



கோட்டா - மைத்திரி சந்திப்பு, உடன்பாடுகள் எட்டப்பட்டதாக தகவல்


ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவுக்குமிடையில் முக்கியமான சந்திப்பொன்று சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் நடந்தது.

தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து இருவரும் மனம்விட்டு பேசி பல முக்கியமான தீர்மானங்களை எட்டியுள்ளதாக தகவல். அந்த தீர்மானங்களை இப்போதைக்கு பகிரங்கப்படுத்தாதிருக்கவும் இருவரும் உடன்பட்டுள்ளனர் .

குறிப்பாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் அரசியல் கூட்டணி அமைக்க நடந்துவரும் பேச்சுக் குழுவின் உறுப்பினர்களை மாற்றியமைக்க இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதன்படி மஹிந்த தரப்பில் பேச்சுக் குழுவுக்கு பசில் ராஜபக்ச தலைமை வகிப்பாரென தெரிகிறது. சுதந்திரக் கட்சியில் தமக்கு நெருக்கமான சிலரை மைத்ரி பெயரிடவுள்ளதாக அறியமுடிந்தது.

இந்த சந்திப்பின்பின்னரே- கோட்டாபய வழங்கிய விருந்துபசாரத்தில் சுதந்திரக் கட்சி எம் பிக்கள் கலந்து கொள்ள மைத்ரி அனுமதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் மைத்திரிக்கு உரிய அந்தஸ்தை வழங்க கோட்டா இதன்போது உத்தரவாதம் அளித்தாரெனவும் மேலும் அறியமுடிந்தது. Tn

No comments

Powered by Blogger.