Header Ads



யார் இந்த அநுரகுமார...? (கடந்துவந்த பாதை, விசேடதொகுப்பு)

* முழு பெயர் - திஸாநாயக்க முதியன்சலாகே அநுரகுமார திஸாநாயக்க.

*பிறப்பு - 1968.11.24.

*பிறந்த ஊர் – கலேவெல - நான்கு வருடங்களுக்கு பிறகு கெக்கிராவையில் குடியேறினார்.

*ஆரம்ப கல்வி – தம்புத்தேகம காமினி வித்தியாலயம்.

உயர் கல்வி – தம்புத்தேகம மத்திய கல்லூரி.

குறித்த பாடசாலையிலிருந்து உயர்தரத்தில் சித்தியடைந்து - பல்கலைக்கழகத்துக்கு தெரிவான முதல் மாணவர் இவராவார்.

*1992 இல் களனி பல்கலைக்கழகத்துக்கு தெரிவான இவர் 1995 இல் பட்டதாரியானார்.

அரசியல் வாழ்க்கை......

*1997 இல் சோஸலிச இளைஞர் அமைப்பின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

*1997 இல் ஜே.வி.பியின் மத்திய செயற்குழு உறுப்பினராகவும், 1998 இல் ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினராகவும் செயற்பாட்டு அரசியலுக்கு உள்வாங்கப்பட்டார்.

*1998 இல் மத்திய மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கினார்.

*2000 இல் நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.

* 2004 இல் குருணாகலை மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்கு இரண்டாவது முறையும் தெரிவானார். கூட்டணி அரசாங்கத்தில் விவசார அமைச்சர் பதவியையும் வகித்தார்.

*2008 இல் ஜே.வி.பியின் நாடாளுமன்ற குழு தலைவராக நியமிக்கப்பட்டார்.

*2010 இல் தேசிய பட்டியல் ஊடாக மீண்டும் நாடாளுமன்றத்துக்கு....

*2014 ஜனவரி 2 ஆம் திகதி ஜே.வி.பியின் தலைமைப்பொறுப்பு கையளிக்கப்பட்டது.

அவர் பதவியேற்ற பின்னர் மாகாணசபைத் தேர்தலில் ஜே.வி.பியின் வாக்கு வங்கி அதிகரித்தது.

*2015 நடைபெற்ற பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். சபையில் எதிர்க்கட்சி பிரதம கொறடாவாகவும் பதவி வகித்தார்.

*2019 ஆகஸ்ட் 18 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்பட்டார்.

ஜனாதிபதி தேர்தலும் ஜே.வி.பியும்.........

*1982ஆம் ஆண்டு நடந்த முதலாவது ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி சார்பில் அதன் நிறுவுநரான றோகண விஜேவீர போட்டியிட்டு, 273,428 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

அதன் பின்னர்,1999 ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி சார்பில் நந்தன குணதிலக போட்டியிட்டு, 344,173 வாக்குகளைப் பெற்றிருந்தார். ( தற்போது ஐக்கிய தேசியக்கட்சியில் அங்கம் வகிக்கின்றார்.

*2010 இல் பொது வேட்பாளராக களமிறங்கிய பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கியது.

*2015 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை. எனினும், மஹிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்ககூடாது என பிரசாரம் முன்னெடுத்தது.

ஆர். சனத்

2 comments:

  1. சிறந்த மனிதர்

    ReplyDelete
  2. வெற்றி வாய்ப்பு மிக அரிது. சுமார் 800000. வரை வாக்குகள் பெறலாம்.
    அருமையான பேச்சு. நல்ல சிந்தனைப்போக்கு

    ReplyDelete

Powered by Blogger.