Header Ads



பௌத்த பிக்குகளால் எனக்கு, பெரிய தலையிடியாக இருக்கிறது - ஜனாதிபதி

ஜனாதிபதி செயலகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பு சற்று முன்னர் முடிவடைந்தது.

சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே நடந்த இச் சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன் தலைமையில் மாவை.சேனாதிராசா, த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வழக்கமாக முக்கிய சந்திப்புக்களில் இரா.சம்பந்தனே அதிகம் பேசுவது வழக்கம். ஆனால் இன்றைய சந்திப்பில் இரா.சம்பந்தன் பேசவில்லை மாறாக மாவை சேனாதிராசா பிரச்சனைகளை ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தார்.

வழக்கமான சந்திப்புக்களில் சம்பந்தன் தமிழர் தரப்பு கோரிக்கைகளை மிக தெளிவாக எடுத்துரைப்பது வழமை ஆனால் இம்முறை சம்பந்தன் கதைக்காமை ஜனாதிபதிக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

சந்திப்பில் கலந்து கொண்ட ஏனைய எம்.பிக்களும் பிரச்சனைகள் குறித்து பேசினர்.

தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றால் மக்கள் பாதிக்கப்படுவது, காணிகள் விடுவிக்கப்படாதது, பௌத்த பிக்குகளால் கன்னியா, நீராவியடி உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்கள் குறித்து கூட்டமைப்பு தரப்பு விரிவாக குறிப்பிட்டது.

இதை கேட்டுக் கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரி, பௌத்த பிக்குகளால் தமிழர்களிற்கு மட்டுமல்ல, எனக்கும் பெரிய தலையிடியாகத்தான் இருக்கிறது. இங்கு பிரச்சனைகளை தந்து கொண்டிருக்கிறார்கள் என்றார்.

எதிர்வரும் 30ம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும்போது, காணி விடுவிப்பு தொடர்பான அறிவித்தலை வெளியிட வேண்டு மென மாவை சேனாதிராசா குறிப்பிட்டார்.

இதன்போது, குறுக்கிட்ட இரா.சம்பந்தன், அறிவித்தல் விடுப்பதல்ல, காணியை விடுவிக்க வேண்டுமென்றார். எனினும், ஜனாதிபதி அது குறித்து தெளிவான பதில் அளிக்கவில்லை.

இன்று ஜனாதிபதி நேரநெருக்கடியான பல நிகழ்ச்சிகளை கொண்டிருப்பதாலும், சம்பந்தப்பட்ட விடயங்களை ஆராய அதிகாரிகளோ, ஜனாதிபதி செயலாளர் போன்றவர்ளோ இருக்காததாலும் மீண்டும் இரண்டு தரப்பும் சந்தித்து பேசுவதென முடிவாகியது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் அனைவரும், அமைச்சின் செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள் அனைவரையும் உள்ளடக்கியதாக இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 28ம் திகதி காலை 11 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறும் என முடிவெடுக்கப் பட்டுள்ளது.

4 comments:

  1. தனக்கு பைத்தியம் என்பதை ஒத்துக்கொண்டால் சரி.

    ReplyDelete
  2. அப்போ ஜனாசாராவுக்கு நீதிமன்ரம் கொடுத்த தண்டனையை ரத்தாக்கி அவரை விடுவித்தது யார்? இப்போ என்ன புது பேச்சு தலையிடி,காய்ச்சல் என.

    ReplyDelete
  3. @Rizard, ஞானசார பிக்கு சாரை விடுதலை செய்யுமாறு முஸ்லிம்கள் சார்பில் தான்தான் ஜனாதிபதியை வேண்டியதாக காமேடியன் ஹிஸ்புல்லா அப்போ ஒரு அறிக்கை விட்டிருந்தாரே

    ReplyDelete

Powered by Blogger.