Header Ads



ஜனாதிபதி வேட்பாளராக 3 பேரின் பெயர்கள் பரிந்துரை

சந்திகளில் சத்தமிடுவதன் மூலம் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய முடியாது என அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வது தொடர்பில் கிரமமான முறையொன்று காணப்படுகின்றமை தொடர்பில் கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “இந்த விதிமுறைகளுக்கு அமையவே கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டும்.

கட்சியின் செயற்குழு மற்றும் நாடாளுமன்றக் குழுவின் பெரும்பான்மை ஆதரவுடையவர் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்படுவார்.

மூன்று பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும்,பெரும்பான்மை ஆதரவுடையவர் போட்டியிடுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

முன்மொழியப்பட்டுள்ளவர்களில் எவர் போட்டியிட்டாலும், நிச்சயமாக வெற்றியீட்டுவார்.இந்த விடயம் தொடர்பில் எவரும் பதற்றமடையத் தேவையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

3 comments:

  1. If Ranil is chosen as candidate he will beat Hisbullah by few votes.

    ReplyDelete
  2. UNP's internal crisis to choose suitable candidate for the forthcoming presidential election won'to an end eventhough after the said election is over

    ReplyDelete
  3. சஜித்தை தவிர வேறு யாரை நீங்கள் களமிரக்கினாலும் தோல்விதான்.

    ReplyDelete

Powered by Blogger.