Header Ads



சஜித்திற்கு 3 ஆம் திகதிவரை, ஜனாதிபதி காலக்கெடு

ஐக்கிய தேசியக் கட்சியில் ஜனாதிபதி தேர்தலுக்காக சஜித் பிரேமதாஸவை தெரிவு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில் அவரை பொதுவேட்பாளராக களமிறக்கவும் அதற்கு முன்னர் அவரை பிரதமர் பதவியில் நியமிப்பதற்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தரப்பு விருப்பை வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் 3 ஆம் திகதி சுதந்திரக் கட்சியின் சம்மேளனம் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னர் சஜித் பிரேமதாஸ ஒரு முடிவை எடுக்க வேண்டுமென மைத்ரி தரப்பு நேற்றிரவு தகவல் அனுப்பியுள்ளது.

வேட்பாளர் நியமனத்தை வழங்க ரணில் முட்டுக்கட்டைகளை இட்டுவருவதால் கட்சியில் இருந்து வெளியேறி பொது வேட்பாளராக களமிறங்குமாறு சஜித்துக்கு ஆலோசனை கூறப்பட்டாலும் அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறும் முடிவை இதுவரை எடுக்கவில்லை.

அதேசமயம் சுதந்திரக்கட்சி மாநாட்டுக்கு முன்னர் சஜித்தின் முடிவை பெறுவதில் தீவிர முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

எவ்வாறாயினும் சுதந்திரக் கட்சி மாநாட்டில் யாருக்கு ஆதரவு என்ற முடிவை அறிவிக்காதிருக்க ஜனாதிபதி மைத்ரி ஆலோசனை நடத்திவருவதாகவும் சுதந்திரக் கட்சியின் யோசனைகளை ஏற்றுக்கொள்ளும் ஒருவருக்கு தமது கட்சி ஆதரவை வழங்குமென்ற அறிவிப்பை அன்றைய தினம் அவர் வெளியிடலாமென்று அந்தக் கட்சியின் உயர்மட்ட தகவல்கள் தெரிவித்தன.  Thamilan

No comments

Powered by Blogger.