Header Ads



30 ஆம் திகதி, ஜனாதிபதிக்கு செல்லவுள்ள முக்கிய தீர்ப்பு - அதையடுத்தே தேர்தல் பற்றி தீர்மானம்

எல்லை நிர்ணய ஆணைக்குழு அறிக்கை இல்லாத நிலையில், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விளக்கம் கோரி ஜனாதிபதி தாக்கல் செய்த மனுவை ஐந்து உறுப்பினர்களைக் ( நீதியரசர்கள் ) கொண்ட உயர்நீதிமன்ற ஆயம் முன் ஆராய பிரதம நீதியரசர் முடிவு செய்துள்ளார்.

அதன்படி, புவனேக அலுவிஹரே, சிசிர டி ஆப்ரூ, பிரசன்ன ஜெயவர்தன, விஜித் மலல்கொட ஆகிய நீதியரசர்மார் அடங்கிய ஐந்து பேர் கொண்ட ஆயம் பிரதம நீதியரசர் ஜயந்த ஜெயசூர்ய தலைமையில் இதனை ஆராயவுள்ளது.

ஜனாதிபதியின் மனு தொடர்பில் விளக்கங்களை வழங்குவதாயின் இந்த மாதம் 21 ஆம் தேதிக்கு முன் அவற்றை சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்றம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளது.

ஜனாதிபதியின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் வரும் 23 ஆம் தேதி விசாரிக்க தீர்மானித்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் இந்த முடிவு இந்த மாதம் 30 ஆம் தேதிக்கு முன் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும். Tm

No comments

Powered by Blogger.