Header Ads



முஸ்லிம்களை பீடித்துள்ள 2 ஆபத்தான நோய்கள்

இலங்கை முஸ்லிம்களைப் பற்றித் தமிழகத்தில் இருந்த ஓர் அரசியல் ஆய்வாளர், "இலங்கை முஸ்லிம்கள் என்போர் நன்றாக பிரியாணி சாப்பிடுவார்கள், யூ.என்.பி.க்கு மட்டுமே எப்போதும் வாக்களிப்பார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். 

இவ்விரு பண்புகளோடு சேர்த்து நான் இன்னும் இரு விடயங்களை அவர் சேர்த்துக் கொள்ளலாம் எனக் கருதுகிறேன்: ஒன்று - எதற்கெடுத்தாலும் கடுமையாக உணர்ச்சி வசப்படுவார்கள்; இரண்டு - என்னதான் நடந்தாலும் எவ்வளவு பேரழிவுகள் நிகழ்ந்தாலும் மூன்று நாட்களுக்குள் அவற்றை மறந்து விடுவார்கள். 

முஸ்லிம் சமூகத்தைப் பீடித்துள்ள ஆபத்தான நோய்கள் இவை. இதனால் மொத்தமாக இலாபமடைவோர் அரசியல்வாதிகளும் முஸ்லிம்களின் விரோதிகளுமே.

அளுத்கமை பேரழிவு இன்று வெறும் வரலாற்றுக் குறிப்பாகவும் அரசியல்வாதிகள் அவ்வப்போது கையில் எடுத்துக் கொள்ளும் உணர்ச்சித் தூண்டல் ஆயுதமாகவும் மட்டுமே மாறிவிட்டுள்ளது. அந்த விவகாரத்தை நாம் போதிய அளவுக்கு அரசியல்மயப் படுத்தினோமா ? சர்வதேச மட்டங்களுக்குக் கொண்டு சென்றோமா ? அதன் மூலம் அப்பேரழிவுக்குக் காரணமாக இருந்தவர்களைத் தண்டித்தோமா ? ஆகக் குறைந்த பட்சம் யார் அதைத் திட்டமிட்டுச் செய்து முடித்தார்கள் என்பதையாவது ஐயம்திரபற அறிந்துகொண்டோமா ? அம்பலப் படுத்தினோமா ? இவற்றுள் எதுவுமே நடக்கவில்லை. 

ஆனால் எல்லாவற்றையும் வசதியாக மறந்துவிட்டு பேருவளை மக்கள் பல அணிகளாகப் பிரிந்து, ஆளாளுக்கு ஒவ்வொருவனைக் கூப்பிட்டு, மாலைபோட்டு, கஸீதா பாடி, விருந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 

இதெல்லாம் ஒருபுறமிருக்கட்டும். அளுத்கமை கலவரத்துக்கான காரணம், சில முஸ்லிம் இளைஞர்கள் ஒரு பெளத்த பிக்குவைத் தாக்கியதுதான் என்று சொல்லப்பட்டு, அதைச் சாட்டாக வைத்தே ஒட்டுமொத்தக் காடைத்தனங்களும் கட்டவிழ்த்து விடப்பட்டன. கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டன. கடைசியில் அந்த முஸ்லிம் இளைஞர்கள் மீது தொடுக்கப்பட்டிருந்த குற்றவியல் வழக்குக்கு என்ன நடந்தது என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் ? 
முஸ்லிம்கள் சார்பில் வாதாடிய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். ஸுஹைர் அவர்கள் அவவழக்கை வெற்றிகரமாக எதிர்கொண்டு, தனக்கு "முஸ்லிம் இளைஞர்கள் அடித்தார்கள்" என்று தான் பொய்யான தகவல்களை வெளியிட்டதாகக் குறிப்பிட்ட பெளத்த பிக்குவின் வாயாலேயே நீதிமன்றத்தில் சொல்ல வைத்து, வழக்கை முறியடித்துக் குறித்த இளைஞர்கள் "நிரபராதிகள்" எனும் தீர்ப்பையும் பெற்றுக் கொடுத்தார். 

ஆனால் இந்த வழக்குத் தீர்ப்பு இலங்கையின் எந்தப் பிரதான ஊடகங்களிலும் வெளிவரவே இல்லை. தமிழ்ப் பத்திரிகைகளில் கூட வெளியாகவில்லை. 

மிகவும் முக்கியமான ஒரு வழக்கின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு தீர்ப்பு அப்படியே இருட்டடிப்புச் செய்யப்பட்டு விட்டது. சரியென்றால் இத்தீர்ப்பை முஸ்லிம் சமூகம் தேசிய மட்டத்தில் கொண்டாடியிருக்க வேண்டும். ஸுஹைர் அவர்களுக்கு ஒரு பெரிய வரவேற்பளித்திருக்க வேண்டும். இத்தீர்ப்பை நாடாளுமன்றத்தில் முஸ்லிம் எம்.பி.க்களும் அமைச்சர்களும் எடுத்துப் பேசி அதனை ஹன்சார்ட்டில் பதிவுசெய்திருக்க வேண்டும், அப்போதுதான் அது இலங்கை வரலாற்றில் பதியப்பட்டிருக்கும். இதில் எதையுமே நாம் செய்யவில்லை.

அடுத்து திகன கலவரத்தை எடுத்துக் கொள்வோம். குடிபோதையில் இருந்த சில முஸ்லிம் இளைஞர்கள் ஒரு சிங்களச் சகோதரரைத் தாக்கிக் கொலைசெய்து விட்டார்கள் என்ற அப்பட்டமான ஒரு பொய்யைப் புனைந்துதான் அப்பேரழிவு முன்னெடுக்கப்பட்டு அநியாயமாக ஒரு முஸ்லிம் இளைஞரும் இறக்க நேர்ந்தது. அந்த முஸ்லிம் இளைஞர் தீயில் சிக்கி இறந்தாரா அல்லது கொல்லப்பட்டு எரிந்த வீட்டுக்குள் போடப்பட்டிருந்தாரா எனும் சந்தேகம் இதுவரை தெளிவாகவில்லை. 

தாக்கப்பட்ட குறித்த சிங்களச் சகோதரர், தாக்கப்பட்டதன் பின்னர் தானாகவே மருத்துவ மனைக்குச் சென்று சில தினங்கள் சிகிச்சை பெற்று வந்தார். தனது குடும்பத்தார் கொண்டுசென்று கொடுத்த உணவு பானங்களையும் உட்கொண்டு வந்தார். ஆனாலும் சில நாட்களில் அவர் வெகு ஆச்சர்யமாக இறந்து விட்டார். அதற்கிடையே அந்த மருத்துவ மனையில் பணியாற்றிய ஒரு செவிலி திடீரெனத் தலைமறைவாகி விட்டார். இந்தத் தலைமறைவு வரையிலும் பத்திரிகைகளில் ஊடகங்களில் செய்திகள் வந்தன. அதன்பிறகு எல்லாமே இருட்டடிப்புச் செய்யப்பட்டு விட்டன. 

உண்மையில் அங்கே என்ன நடந்தது என்பது இதுவரை எவருக்குமே தெரியாது. அந்தச் சிங்கள இளைஞர் மருத்துவ மனையில் ஏதோ ஒரு வகையில் கொல்லப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம்கொள்ள நியாயமான காரணங்கள் நிறையவே உள்ளன. 

எது எப்படி இருந்தாலும் முஸ்லிம் இளைஞர்கள் தாக்கியதால்தான் அவர் இறந்தார் என்று ஒருவகையிலும் கருத முடியாது. தாக்குதலால்தான் இறந்தார் எனில் அவர் உடனே அல்லது சில நாட்களுக்குள் இறந்திருக்க வேண்டும். ஆனால் தானாகவே மருத்துவ மனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுத் தேறிவந்த நிலையில் பல நாட்களின் பின்னரே திடீரென இறந்து போயுள்ளார். எனவே அது ஒரு கொலை அல்ல. வேண்டுமெனில் மரணத்தை விளைவிக்கக்கூடிய தாக்குதலை நடத்திய குற்றம் மட்டுமே நிகழ்ந்துள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் குறித்த இளைஞரின் மருத்துவ அறிக்கையையும் பிரேதப் பரிசோதனை அறிக்கையையும் இன்றும் நாம் கோரி ஆய்ந்து இதன் உண்மைகளை வெளிக்கொணர முடியும். இந்தத் திசையில் இவ்விவகாரத்தை இதுவரை எவருமே சிந்திக்கவில்லை.

இது ஒருபுறமிருக்க, திகன கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அற்பசொற்ப நட்டஈடுகளை அரசாங்கம் வழங்கிவரும் நிலையில் 117 சொத்துக்களில் 77 சொத்துக்களுக்கான இழப்பீடுகளையாவது பெற்றுக்கொள்ளாமல் நம்மவர்கள் காலம் கடத்திக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. 

அம்பாறையில் நடந்தேறிய அநியாயங்களுக்கு அடிப்படையாக அமைந்தது மலட்டுமருந்து எனும் கீழ்த்தரமான புனைவு. மலட்டுமருந்து பூசப்பட்ட உள்ளாடைகள் பற்றிய குற்றச்சாட்டுகள் சுமார் பத்து வருடங்களுக்கும் மேலாகத் திட்டமிட்டுத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தன. நாம் எவருமே அவற்றை, அதன் பாரிய பின்விளைவுகளைக் கண்டுகொள்ளவே இல்லை. வெறும் பார்வையாளர்களாகவே இருந்தோம். ஆகக்குறைந்த பட்சம் இப்பிரச்சாரங்களால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட முஸ்லிம் ஆடை உற்பத்தி, விற்பனை நிறுவனங்களாவது இவ்விவகாரத்தில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அவர்களே கண்டுகொள்ளவில்லை. அதன் விளைவாகப் பல முஸ்லிம் ஆடைகள் விற்பனைக் காட்சியகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. முஸ்லிம்களின் ஆடைத்துறை வர்த்தகம் படுமோசமாகப் பாதிக்கப்பட்டது. 

முஸ்லிம் உணவகங்களின் வியாபாரத்தை வீழ்த்துவதற்காகத் திட்டமிட்டு இட்டுக்கட்டப்பட்டுப் பரப்பப்பட்டு வந்த "கொத்துரொட்டியில் மலட்டு மருந்து" எனும் புனைவும் பல வருடங்களாகவே பிரச்சாரப்படுத்தப்பட்டு வந்தது. எவருமே கண்டுகொள்ளவில்லை. முடிவு, அம்பாறையில் தொடங்கி அக்குரணையில் முடிந்தது.

மலட்டுமருந்து எனும் பூச்சாண்டி பொய்த்துப் போன பிறகு பலோப்பியன் குழாய் கையிலெடுக்கப்பட்டது. டொக்டர் ஷாபியில் தொடங்கி கம்பஹா, குருணாகல் மாவட்டங்களில் கோடிக்கணக்கான சொத்தழிப்புகளோடு தற்காலிகமாக அடங்கியுள்ளது. டொக்டர் ஷாபிக்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் நேர்மையுணர்வுள்ள மாற்றுச்சமூகச் சகோதரர்களும் தீவிரமாகக் குரல்கொடுத்தோம். ஏதோ ஒரு வழியில் டொக்டர் ஷாபி வெளியே பிணையில் வந்ததோடு அவரின் பேச்சே இல்லாமல் போய்விட்டது. அவரும் ஒருவகையான பெரும் மெளனத்தில் இருக்கிறார். போராட்ட உணர்வெல்லாம் வெறும் மூன்றே நாட்களில் அடங்கிவிட்டது.

சம்பிக்கவும் ஞானசாரவும் கிழப்பிவிட்டு, வளர்த்துப் பூதாகரமாக்கப்பட்ட வஹாபிஸம், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய பயங்கரவாதம், இஸ்லாமிய அடிப்படைவாதம், ஐஸிஸ் மற்றும் "பாஸ்க்கு ப்ரஹாரய" ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி நிறுத்தி வைத்துள்ளது. 

விசாரணை தொடர்கிறது. அவசரகாலச் சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டும் நடைமுறையில் உள்ளது. சுமார் 2000 பேர்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. சுமார் 65 பேர்கள் தடுத்துவைத்து விசாரணையில் உள்ளனர். இன்னும் 70 பேர்கள் அளவில் ஸஹ்ரான் கும்பலுடன் பயிற்சி பெற்றவர்கள் வெளியே நடமாடுகிறார்கள் என்று ஞானசார தேரர் பகிரங்கமாகச் சொல்லித் திரிகிறார். 

குற்றங்களோடு சம்பந்தப்பட்டவர்கள் குறித்த தகவல்கள் தெரிந்திருந்தும் அவற்றை மறைப்பதும் வெளிப்படுத்தாமல் இருப்பதும் குற்றவியல் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களின் கீழ் பாரிய குற்றங்களாகும். ஆனாலும் ஞானசார தேரரைக் கைதுசெய்து அவர் சொல்லும் 70 க்கும் அதிகமான ஆயுதப்பயிற்சி பெற்ற முஸ்லிம் இளைஞர்கள் குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் அதிகார பீடங்கள் அமைதி காக்கின்றன.

"பாஸ்க்கு ப்ரஹாரய" வோடு எந்தத் தொடர்பும் இல்லாத அபாயா, நிக்காப், மத்ரசாக்கள், அரபுமொழி, பேரீச்சை மரம், ஹிஸ்புல்லா கொலேஜ், முஸ்லிம் தனியார் சட்டம், காதி நீதிமன்றங்கள்... என்று ஒட்டுமொத்த முஸ்லிம்களின் இருப்புமே கேள்விக்கும் பெரும் அச்சுறுத்தல்களுக்கும் ஆளாகியுள்ளது.

முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தமா ? ஒருபோதும் நடக்காது, நடக்க விடவே மாட்டோம் என்ற பெரும் கூச்சல்களெல்லாம் அடங்கிப்போய், சத்தமில்லாமல் முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தம் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டுவிட்டுள்ளது. முஸ்லிம் பெண்களின் திருமணத்திற்கான ஆகக்குறைந்த வயது பதினெட்டாக ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. இனி அடுத்த கட்டமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிடும். தனிப்பட்ட ரீதியில் இத்திருமண வயதெல்லைத் திருத்தத்தை நானும் ஏற்றுக் கொள்கிறேன். அது தேவையானதும் நியாயமானதுமாகும்.

அண்மையில் அனுராதபுர மாவட்டம், கஹட்டகஸ்திகிலியவில் ஒரு சிசு இறந்து ரகசியமாகப் புதைக்கப்பட்ட விடயம் அம்பலமாகி, குறித்த சிசுவின் தாயும் தகப்பனும் மறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு நுஸ்ரான் பின்னூரி எனும் முல்லா குறித்த வாதவிவாதங்கள் சூடேறி, வெறும் மூன்றே நாட்களில் அடங்கிவிட்டது. இது இவ்வாறு அடங்கிவிடக்கூடிய அற்பமான விஷயம் அல்ல. வெகு சீரியஸாக ஆய்ந்து தெளிவுபடுத்தப்படவேண்டிய ஒரு விவகாரம். 

மலட்டுமருந்து எனும் பூதத்தை நாம் எப்படிக் கண்டுகொள்ளாமல் இருந்து கடைசியில் மொத்த சமூகமும் எவ்வாறு பேரழிவைச் சந்தித்ததோ அவ்வாறான ஒரு பெரும் தீமையே இந்த நுஸ்ரான் பின்னூரி விவகாரமும் ஆகும். வழக்கம்போல இவ்விடயத்திலும் ஜம்இய்யத்துல் உலமா சபை கள்ள மெளனம் காக்கிறது. 

ஸஹ்ரான் குறித்த போதிய தெளிவூட்டலைப் பகிரங்கமாக ஆரம்பத்திலேயே ஜம்இய்யத்துல் உலமா சபை பொதுமக்களுக்குப் பகிரங்க ஊடகங்கள் வாயிலாகவும் குத்பா மேடைகளிலும் வழங்கியிருந்தால் இன்று ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் குற்றவாளிக் கூண்டில் ஏறவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. 

இவ்விடயத்திலும் உலமா சபை பாரிய தவறை இழைத்து விட்டுள்ளது. வெளிப்படையாக, தெளிவாகப் பேச வேண்டிய விவகாரங்களை மூடிமறைப்பதால் நிச்சயமாகப் பின்னொரு சந்தர்ப்பத்தில் பாரிய பின்விளைவுகள் ஏற்படும், ஏற்பட்டும் விட்டது.

கோட்டாவின் பெயர் அறிவிக்கப்பட்டதும் கணிசமான முஸ்லிம் இளைஞர்கள் அவருக்கு ஆலவட்டம் பிடிக்கத் தொடங்கினர். பின்னர் அனுர குமார திசாநாயக்கவின் பெயர் அறிவிக்கப்பட்டதும் ஏதோ தங்களுக்கொரு இம்ரான் கான் கிடைத்துவிட்டதைப் போல ஒரே நாளில் பெரும்பாலான முஸ்லிம் இளைஞர்கள் அனுரவுக்குக் குடைபிடிக்கத் தொடங்கி விட்டனர். எல்லாமே வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பு. அறிவுக்குச் சம்பந்தமே இல்லாத அதிகூடிய எதிர்பார்ப்புகள், போற்றுதல்கள், புகழாரங்கள் !

முதலில் எல்லா வேட்பாளர்களின் பெயர்களும் வெளியாகட்டும். அவர்களுடைய கொள்கைகளைக் கொண்ட தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவரட்டும். அவற்றைப் படித்துப் பார்த்து, ஆய்ந்து தெளிந்து, நமது சமூகத்தின் சார்பான நமது கோரிக்கைகளை நாமும் முன்வைத்து அதற்கு அவர்களது பிரதிபலிப்புகள் என்ன என்பதையெல்லாம் அலசி ஆராய்ந்து நடைமுறைச் சாத்தியமான, நன்மைகள் இல்லாவிட்டாலும் தீமைகளாவது மிகக்குறைவாகச் செய்யக்கூடிய ஒரு வேட்பாளரை ஒற்றுமையாக ஆதரிப்போம். 

அதுவரை அவசரப் படாதீர்கள், எவருக்கும் "ஜயவேவா" போடாதீர்கள், ஆலவட்டம் தூக்காதீர்கள். நாம் அவர்களிடம் போக வேண்டியதில்லை, குறைந்த பட்சம் இப்போதாவது அவர்களை நமது காலடிக்கு வரவைப்போம், வருவார்கள், வர வேண்டும் !

ஒவ்வொரு விடயத்தையும் அவ்வப்போது உடனுக்குடன் நிதானமாக அணுக வேண்டும். எந்த விடயத்திலும் உணர்ச்சிகளுக்கு இடம்கொடுக்கவே கூடாது. எல்லாவற்றையும் தெளிந்த அறிவோடு அணுக வேண்டும். 

ஒவ்வொரு விடயத்தையும் அவ்வத் துறைகளில் அறிவும் தெளிவும் ஆற்றலும் உள்ளவர்கள் மட்டுமே கையாள வேண்டும். 

முல்லாக்கள் அரசியல் பேசக் கூடாது. அரசியல்வாதிகள் பத்வா கொடுக்கக்கூடாது. மாறாக முல்லாக்களும் அரசியல்வாதிகளும் ஓரிடத்தில் அமர்ந்து கூடிப் பேசி அலசி ஆராய்ந்த பின்னர் தான் மார்க்க, சமூக விடயங்களில் கருத்துச் சொல்ல வேண்டும்.

புத்திஜீவிகள் - ஏதோ நடக்கிறது, நடக்கட்டும், நமக்கு நமது தொழில், வருமானம், சமூக அந்தஸ்து பாதிக்கப்பட்டுவிடக் கூடாது, பேசாமல் ஒதுங்கி இருப்போம் என்று இருப்பது அல்லாஹ்விடத்தில் தப்பவே முடியாத பெருங்குற்றமாகி விடலாம்.

உண்மையில் புத்திஜீவிகளே சமூகத்தை இயக்க வேண்டும். உலமாக்களும் அரசியல்வாதிகளும் வெறும் கருவிகளே. அக்கருவிகளை ஒருமுகப்படுத்தி, ஒருங்கிணைத்து, சமூக நலன்கள் எனும் ஒரே நேர்கோட்டில் வழிநடாத்துவதே புத்திஜீவிகளின் தலையாய பொறுப்பாகும்.

-Mohamed Ajaaz-

9 comments:

  1. முஸ்லிம்களிலும் புத்தி ஜீவிகள் இருக்கிறார்களா?

    ReplyDelete
  2. A MUST FOR MUSLIMS TO READ, Insha Allah.

    https://ceylontoday.lk/print-more/38624
    FCID probing Salley's vehicle deal and utterances
    CT Web 02:00 AM Aug 23 2019

    A MUST FOR MUSLIMS TO READ, Insha Allah.
    By courtesy - "The Muslim Voice".

    FCID probing Salley's vehicle deal and utterances
    CT Web 02:00 AM Aug 23 2019
    By Kavindya Perera

    The Financial Crimes Investigation Division (FCID) yesterday (22), informed Colombo Chief Magistrate Lanka Jayaratna of details pertaining to former Western Province Governor Azath Salley, who had allegedly issued statements detrimental to religious reconciliation here as well as having produced fake documents to register a vehicle.

    Upul Ranjith Jayasena, a resident of Kottawa Road, Pannipitiya had lodged a complaint, on 12 June, against Salley, with the Special Unit set up at the Police Headquarters, to record complaints against former Eastern Province Governor M.L.A.M. Hisbullah, Salley and Minister Rishad Bathiudeen.

    The FCID said, the probe against Salley had been initiated on instructions received from the Inspector General of Police. They told Magistrate Jayaratna that Salley had claimed, during a media briefing, on 2 July 2016, that if anyone had mentioned the name of Prophet Mohammad he was willing to commit suicide with that person.

    They added that during the same media briefing, Salley had issued a threat to Bodu Bala Sena General Secretary Ven. Galagodaaththe Gnanasara Thera and that such divisive comments had contributed to the erosion of religious reconciliation efforts.

    The FCID further said that Salley, during the time he had served as the Governor, had purchased a Range Rover vehicle, contrary to the State's procurement programme, from the Exotic Company, which is an unregistered firm. They said that Salley had then furnished bogus documents to substantiate his claims that the vehicle had been registered through a registered firm.
    The FCID said that they have already sought video footage of Salley's Media briefing from five media outlets and once they are received they will continue with the probe.

    They told Magistrate Jayaratna that with regard to the charge of Salley having produced bogus documents to suggest that he had registered his vehicle with the Motor Traffic Department, they had completed the necessary inquiries. The FCID said that they had also recorded a statement from the Secretary to the Western Province Governor, T. Somasiri.

    They told that in the statement given to them by Somasiri, he has stated that in order to provide an official vehicle for the use of the Governor, the procurement committee formed by the Western Province Governor's Office, a limited number of tenders had been called. Based on the prices that had been submitted, SML Frontier Auto Motive Company had quoted prices towards the makeup of a Range Rover jeep valued at
    Rs 61 million, they said.

    The FCID noted that as the State Budget Department has imposed restrictions for Governors to purchase vehicles at prices less than Rs 43 million, Salley had personally spoken to the Chairman of the SML Company in an attempt to get an estimate from that firm to purchase a Range Rover valued at Rs 44.05 million.
    The FCID told the Magistrate that their investigations had revealed that when the State Budget Department had imposed the aforesaid restriction, Salley had sent a letter to the President's Secretary to purchase a vehicle at the price of Rs 44.05 million.

    They then said that a report had been sought from the Motor Traffic Department in this connection and that it had come to light that in the official name of the Western Province Governor's Secretary, a vehicle has been registered under WP CBI 4999 while it had been imported to Sri Lanka by the Exotic Company situated at 171, Havelock Road,

    Colombo 5.
    (Contd: below)

    ReplyDelete
  3. (Contd: from above.)
    The FCID said that while recording a statement from the Director of the said firm, Shihab Shahabdeen, it had been revealed that the vehicle had been brought to this country from the United Kingdom as a secondhand vehicle on 25 January 2019 and it had sold it to the SML for a price of Rs 42 million before registering it under the name of the Secretary to the Western Province Governor.

    Later, Salley had proposed to the SML firm that they should purchase the vehicle at a price of Rs 43 million, as that is the prescribed price allowed for Governors and provide him with a five-year service certificate.

    The FCID finally told Magistrate Jayaratna that they were yet probing whether Salley had committed any violation of the provisions of the Offences against Public Property Act, No. 12 of 1982, through his actions.

    They also said that they were also investigating whether his actions had violated Sections 102, 113 and 452 of the Penal Code.


    ReplyDelete
  4. தமிழக முஸ்லிம்களின் கெட்ட பழக்கம் பிரியாணி யும். தி.மு.க வாகவும் இருக்கும் போது நமது கெட்ட பழக்கம் யூ என்பியும் பிரியாணி யாகவும் இருப்பது தவறில்லை.. மறதி மனிதனோடு கூட பிறந்தது. ஞாபக சக்தி அதிகரிக்கும் எனில் சமூகம் எப்பவோ சண்டை இட்டு அழிந்திருக்கும்.பொறுமையாக இருப்போம் பொறுமை நமது சமூகத்திற்கு வெற்றியையே தந்துள்ளது.. மற்ற சமூகம் அதை உணர்ந்து வருகிறது..

    ReplyDelete
  5. Self proclaimed Muslim nation and convener...stupid.only Jaffna Muslim tqki g probably publishing his rubbish stories.pototype of redcap mubarak

    ReplyDelete
  6. ANOTHER MUST FOR MUSLIMS AND ESPECIALLY FOR Roshan - Surrey TO READ, Insha Allah.

    Rs.160mn for 85 Hakeem coordinators at NWSDB: COPE
    http://www.dailymirror.lk/top_story/Rs-160mn-for-85-Hakeem-coordinators-at-NWSDB-COPE/155-173293

    The Committee on Public Enterprises (COPE) revealed yesterday that a staggering Rs.160 million had been paid as salaries to 85 employees of the National Water Supply and Drainage Board (NWSDB) who were recruited as ministerial coordinating officers of Subject Minister Rauff Hakeem since 2015.
    It was revealed at the COPE session held yesterday that 35 out of 85 coordinating officers continue to savour a monthly remuneration of Rs.250,000 including a fuel allowance.

    COPE Chairman Sunil Handunnetti ordered NWSDB officials to submit a comprehensive report on the said coordinating officers in order to determine their roles. “I called for a report on this issue during an earlier instance too, but to no avail,” he said.

    ReplyDelete
  7. இலங்கையில் ம்ட்டுமல்ல, உலகத்தில் சகல இடங்களிலும், எல்லா இனத்தினருக்கும் முஸ்லிம்கள் பிரச்சனைகள் கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.

    இலங்கை, காஷ்மீர், குஜராத், பலஸ்தீன், மியன்மார், பாக்கிஸ்தான், சிரியா, ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், ரஷ்யா (செச்சினியா), சீனா, மேற்கு நாடுகள் (ISIS), இப்படி இன்னும் பல....பல...

    (இங்கு இப்படியான உண்மைகளை சொல்லவந்தால், பலர் வந்து திட்டுகுறார்கள்)

    ReplyDelete
  8. Pls.listen the what cope chiarmna says at the end of that proceedings about the coordinators. We are not here to support or to reject rauf hakeem.all the ministers had this.we reject self proclaimmed. pandithayas.minimum IQ is needed to judge people.we don't work for the payment received from bankrupt politicians tonwrite.

    ReplyDelete

Powered by Blogger.