Header Ads



2027 இல் ஜமாஅத்தே இஸ்லாமி, இலங்கையை கைப்பற்றும், ஹஜ்ஜுல் அக்பருக்கு எதிராக கரிபூசும் சிங்கள ஊடகம்

அருண (2019.08.27) – சிங்களப் பத்திரிகையில் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களுக்கு கரி பூசும் வகையிலான, முன் பக்க, முதல் செய்திக்கெதிரான கண்டனம்.

தலைப்பில் ...

2027 இல் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி முழு இலங்கையையும் கைப்பற்றும் திட்டமாம்...

அப்கானிஸ்தானில் இடம் பெற்றுள்ள யுத்தத்திலும் இவர் கலந்து கொண்டாராம்...

70 நாடுகளுடன் இவருக்கு தொடர்புகள் உள்ளனவாம்...

உள்ளே ...

சஹ்ரானோடு தொடர்புடையவர்களை இவர் வெளிநாடுகளுக்கு யுத்தப் பயிற்சிக்காக அனுப்பி வைத்துள்ளார்...

ஹமாஸ் அமைப்புடன் இவருக்கு தொடர்புள்ளது...

1985 முதல் தீவிரவாத உரைகளை நாடுபூராகவும் திகழ்த்தியுள்ளார்...

இவரது உரைகளில் ஏனைய மதங்களுக்கு எதிரான தீவிரவாதக் கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், அவரது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இளைஞர்களை தீவிரவாதப் பயிற்சிகளுக்காக வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைத்துள்ளார்...

சஹ்ரானின் தாக்குதலுக்குப் பின்னர்தான் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் எதிர்காலத் திட்டங்கள் பற்றிய இரகசியம் வெளியாகி உள்ளது...

இது ஊடக தர்மம்... ????

இது போன்ற ஊடகங்கள் 'வேசி'க்கு சமன். ஊடக ஒழுக்கக் கோவைக்கும் நேர்மையாகவும் நடுநிலையுடனும் கருத்துக்களைப் பரிமாறுகின்ற ஊடக – ஊடகவியலாளர்களுக்கும் சேறுபூசும் பண்பாடற்ற வேலைகளை அருண போன்ற அச்சு ஊடகங்களும் இலத்திரனியல் ஊடகங்களும் செய்வதை, ஓர் ஊடகவியலாளன் என்ற வகையில் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்...

உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை அப்பாவிச் சிங்கள மக்களின் உள்ளங்களில் பாய்ச்ச எந்தனிக்கும் தரங்கெட்ட இந்த செயலுக்காக நான் வெட்கப்படுகிறேன்...

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் உங்களிடம் எந்த ஆதாரமும் இருக்காது. காரணம், நீங்கள் கற்பனையில் சோடித்தவை இவை. ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் நிகழ்த்திய உரைகளை நீங்கள் ஒரு கணம் ஆய்வுக்குட்படுத்திப் பார்த்து விட்டு கருத்துச் சொல்லுங்கள்...

மார்க்க உரை எனபதற்கப்பால் நாட்டின் இன ஒற்றுமை, நல்லிணக்கம், சகவாழ்வு... என்று இந்த தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் ஆற்றியுள்ள பங்களிப்புக்களை எல்லாம் நீங்கள் மறந்து பேசுகிறீர்கள், நன்றி கெட்டதனமாக ...

ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை பெரிய கொட்டை எழுத்தில் போடத் தெரிந்த உங்களால் இன்றைய தினம் (2019.08.28) அதற்கு மறுப்புத் தெரிவிக்கும் விதத்திலான செய்தியை அதே கொட்டை எழுத்தில் போட முடியவில்லை. காரணம், உங்கள் ஊடகம் நடுநிலை தவறியது...

லரீப் சுலைமான்

2019.08.28


1 comment:

Powered by Blogger.