Header Ads



18 கோடி முஸ்லிம்கள் இந்தியாவில் அச்சுறுத்தலோடு வாழ்கிறார்கள் - மோடியின் இறுதி ஆட்டம் இது - இம்ரான் கான்,

காஷ்மீர் விவகாரத்தில் நரேந்திர மோதி பெரிய தவறை செய்து கொண்டிருப்பதாக தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மோடி தனது இறுதி ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள இம்ரான் கான், 

பாகிஸ்தான் நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில், இந்திய ராணுவம் கலகம் ஏற்படுத்த நினைத்தால் அதற்கு நாங்கள் பத்து மடங்கு பதிலடி தருவோம்.

18 கோடி முஸ்லிம்கள் இந்தியாவில் அச்சுறுத்தலோடு வாழ்கிறார்கள். இந்த முடிவு இறுதியில் பின்னடைவையே ஏற்படுத்தும். உலகில் எங்கெல்லாம் மக்கள் ஒதுக்கப்படுகிறார்களோ அங்கு தீவிரவாதம் உருவாகும்.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் குண்டர்கள் மக்களை கொல்கிறார்கள், நீதிபதிகளை மிரட்டுகிறார்கள். இதனைத்தான் நாஜிக்கள் செய்தார்கள். அவர்களின் மேலாதிக்கத்தை எதிர்த்தவர்களை தேசத்துரோகி என்றார்கள்.

ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தமானது, அப்படியே நாஜிக்களின் சித்தாந்தம் போல் உள்ளது என்பதை இந்த உலகத்திற்கு தெரிய வைக்க வேண்டும். இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, இனஅழிப்பு இனி நடக்காது என்று கூட்டாக முடிவெடுக்கப்பட்டது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் அந்த நிலைக்கும் மீண்டும் இட்டுச் செல்கிறது.

ஹிட்லருக்கு இருந்த அகங்காரமும், நரேந்திர மோடியின் அகங்காரத்துக்கும் வித்தியாசம் இல்லை. ஆனால், ஹிட்லர் அழிக்கப்பட்டார் என வரலாறு சொல்கிறது. நெப்போலியன் அழிக்கப்பட்டார். போர் என்பது தீர்வல்ல. அது பல்வேறு மோதல்களுக்கு வழிவகுக்கும்.

இந்தியாவில் நீதிபதிகள் அச்சத்தில் இருக்கிறார்கள். ஊடகங்கள் முடக்கப்படுகின்றன. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அஞ்சுகிறார்கள்.

இந்த முடிவால் அதிக அழிவு இந்தியாவுக்கே. அரசமைப்பை சேதப்படுத்தி உச்சநீதிமன்ற மற்றும் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்பட்டிருக்கிறார்கள். நாட்டின் சட்டம் ஒழுங்கு மற்றும் மனித உரிமைகள் ஒடுக்கப்படும்போது, அதன் ஸ்திரத்தன்மையை இழக்கும்.

இந்திய அமைச்சர்கள் எப்படி பேசுகிறார்கள் என்று பாருங்கள். அவர்கள் தீவிரவாத மனநிலையை. பாபர் மசூதி சம்பவம், முஸ்லிம்களை கொல்வது, காஷ்மீரில் செய்யும் அட்டூழியங்கள் என ஆர்.எஸ்.எஸ்.ஸின் சித்தாந்தம் இந்தியாவில் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 

தற்போது காஷ்மீருக்கு மோடி செய்து கொண்டிருப்பது, ஹிட்லரின் இறுதி தீர்வு போன்று இருக்கிறது எனறும் இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார்.

5 comments:

  1. We ask God to answer the racists in suitable manner and will protect people from the evils of arrogant.

    ReplyDelete
  2. "THE MUSLIM VOICE" FEELS THAT THE SRI LANKAN MUSLIMS SHOULD BE REMINDED OF SOME FACTS, Insha Allah.
    It is sad to see a Prime Minister of a Democratic country which is a member of the UN, without "DENOUNCING WHAT INDIA HAS DONE" to wish well to the passing of a bill by the Narendra Modi's BJP government to opress the Kashmir people further. The Bill is repealing legislations 35 A which deals about the peoples rights in Kashmir and Bill 370 which deals with India's administartion of Kashmir which were put in place on the advice of the British in 1950 just after India was partitioned in 1947. NO ONE HAS THE POWER, NOT EVEN NARENDRA MODI OR HIS BJP GOVERNMENT, TO REPEAL, REVOKE OR ANNUL THIS LAW, except by the will of God AllMighty. This Prime Minister of ours (Ranil Wickremesinghe) is playing to the gallery by his above tweet, hoping that the Buddhist in Sri Lanka will vote him, and his alliance to power at the next presidential election and general elections. Ladakh is a mountainous terrain and has very little (extremely small) population (150,000) and the majority are are Buddhists. But there are Muslims and Hindus also in that population. Shame on our PM to make such a racial and discriminative "TWEET" telling that India will create a first Buddhist State. Ranil has failed to respect the Muslim majority Kashmir which has been now made to suffer and has not made any reference to that "INJUSTICE". THE MUSLIMS OF SRI LANKA SHOULD NEVER FORGIVE THIS SHAMELESS PM OF OURS FOR FORGETTING HOW HE IS STILL SITTING IN THE PM CHAIR BECAUSE OF THE MUSLIM VOTES THE HANSAYA AND THE UNF GOT IN 2015.
    “The Muslim Voice” acknowledges the oppression of the Kashmiri People by India over the last 70 years, without conducting the “PLEBICITE” ordered by the UN in 1948. India went to war with Pakistan on the contrary. The BJP government headed by Prime Minister Narendra Modi proposed Monday August 5th., 2019, to revoke Article 370 of India's constitution, which confers special rights to permanent residents of the state of Jammu and Kashmir. However, in October 2015, the High Court of Jammu and Kashmir has ruled that the Article 370 cannot be "abrogated, repealed or even amended." It explained that the clause (3) of the Article conferred power to the State's Constituent Assembly to recommend to the President on the matter of the repeal of the Article."The Muslim Voice" fully and totally rejects this political move by the BJP government of Narendra Modi and his minister of home affairs, Amith Shah. "The Muslim Voice" calls the government of Sri Lanka and all 21 Muslim parliamentarians on behalf of the Muslims of Sri Lanka to denounce this political process in the Indian parliamant (Lok Sabah) which is to further oppress the people of Kashmir and deny them democracy further.
    Noor Nizam.
    Convener - "The Muslim Voice".

    ReplyDelete
  3. அல்லாஹ் (swt) திருமறையில் பல இடங்களிலும் இதன் சாரப்படி கூறுகின்றான். “ஏன்னிடம் கேளுங்கள். நான் நிச்சயம் உங்களுக்கு வழங்குவேன். வுழங்குவபன் நான் ஒருவனே. ஒரு முஸ்லிம் அவர் எங்கிருந்தாலும் இன்னொரு முஸ்லிமின் சகோதரரே”.

    ReplyDelete
  4. அந்த 18 கோடி முஸ்லிம்களும் ஏன் பாக்கிஸ்தானுக்கு போய் வாழ முடியாது?
    பாக்கிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு என்பதால் அவர்களுக்கு அங்கு போக பயம்

    ReplyDelete
  5. பிரபாகரனும் அவனின் சந்ததிகளான நீரும் ஏன் இந்து நாடான இந்தியா போஹக்கூடாது.... இந்தியா ஒரு பயங்கரமான நாடு என்பதாலா????

    ReplyDelete

Powered by Blogger.