Header Ads



14,000 வாக்கெடுப்பு நிலையங்கள் - ஜனாதிபதித் தேர்தலுக்கான பணிகள் ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் தினங்களில் வாக்கெடுப்பு நிலையங்களை சென்று கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆ​ணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நாடு பூராகவும் சுமார் 14 000 வாக்கெடுப்பு நிலையங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தலின்போது குறித்த அனைத்து வாக்கெடுப்பு நிலையங்களையும் பயன்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தேர்தல் கடமைகள் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான பயிற்சிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தின் இறுதிப் பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ளன.

2018 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரமே ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்க முடியும் எனவும் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றமையே இதற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களிற்கு இடையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்ற எதிர்பார்ப்புடன் ஆரம்பப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.