Header Ads



127 வருடங்களைத் தாண்டி கல்விப் பணியாற்றும், கொழும்பு ஸாஹிராக்கல்லூரியின் ஸ்தாபகர் தினவிழா


இலங்கை முஸ்லிம்களின் முன்னோடிப்பாடசாலையான கொழும்பு ஸாஹிராக்கல்லூரின் ஸ்தாபகர் தினவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 21ம் திகதி பி.ப 4.00 மணிக்கு கல்லூரியின் அப்துல்கபூர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கல்லூரியின் அதிபர் ரிஸ்வி மரைக்கார் அவர்களது தலைமையில் நடைபெறவுள்ள இவ் விழாவின் சிறப்பு பேச்சாளரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி ஸப்ரி’இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை உருவாக்குவதில் ஸாஹிராவின் பங்களிப்பு’என்னும் தலையங்கத்தில் உரையாற்றவுள்ளார்.

1892ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட  கொழும்பு ஸாஹிராக்கல்லூரியின் உருவாக்கத்தில் ஐ.எல்.எம்.அப்துல் அஸீஸ்,அரசி மரைக்கார் வாப்பிச்சி  மரைக்கார்,எகிப்தைக் சேர்ந்த ஒராபி பாஷா ஆகியோரது பங்களிப்பு பிரதானமானதாகும்.

127வருடங்களைத் தாண்டி கல்விப் பணியாற்றும்,இலங்கையின் மிகப் பெரும் கல்வி ஸ்தாபனமான  இக் கல்லூரியில் 5400 மாணவர்கள் கல்வி  கற்பதுடன் 300 ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றார்.

2 comments:

  1. HOW COME YOU COMPLETELY FORGOT DR. T.B. JAYAH WHO BROUGHT UP ZAHIRA COLLEGE FROM A MERE 50 STUDENTS TO ONE OF THE BEST COLOMBO SCHOOLS AFTER TIRELESSLY WORKING AS ITS PRINCIPAL FOR 27 YEARS? SHAME ON YOU.

    ReplyDelete
  2. Shame of you to Forget Dr T.B Jayah...

    ReplyDelete

Powered by Blogger.