July 23, 2019

தமிழர்களுக்கு தீர்வு வழங்குவேன் என மகிந்த, எழுத்துமூல உறுதிமொழி வழங்கினால் அவருக்கு ஆதரவு - TNA

தமது கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுமானால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கும் நிலையிருக்காது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களுக்கான தீர்வு உட்பட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குவேன் என சர்வதேச நாடு ஒன்றின் முன்னிலையில் எழுத்துமூல உறுதி மொழி வழங்குவாராயின் அவருக்கு ஆதரவு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட மாமாங்கம் மூன்றாம் இரண்டாம் குறுக்கு வீதிகளை கம்பிரலிய திட்டத்தின் கீழ் புனரமைக்கும் பணிகள் இன்று பிற்பகல் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

இதற்கென கம்பிரலிய திட்டத்தின் கீழ் 40இலட்சம் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதுடன் அந்த ஒதுக்கீட்டினை பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஓதுக்கியுள்ளார்.

இதன் புனரமைப்பு பணிகள் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தார்.

3 கருத்துரைகள்:

😃😃😂😂 யுத்த குற்றசாட்டேல்லாம் காத்திலே பறக்கபோகுது.ஜ நா மனித உரிமை சம்பந்தமான விடயங்கல் எல்லாம் 😃😃😃 35 வருடங்கள் தமிழ் மக்கள் முட்டாள்கள் ஆனதுதான் மிச்சம்.

வரலாற்றில் மக்கள் வாழ்வதுதான் அடிப்படை. பிரச்சினைகளை யார் தீர்க்க முன்வந்தாலும் ஏற்றுக்கொள்ளலாம். கிழக்கில் படுவான்கரை சென்றபோது சோமாலியாவுக்கு வந்துவிட்டேனோ என அதிற்ச்சி அடைந்தேன். அதேசமயம் இலங்கையில் மாவட ரீதியாக கொழும்பில் அல்ல யாழ்பாணத்தில்தான் அதிகமான அதிகமான பணம் உள்ளதாக தெரிகிறது. இபோதுதான் புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவிகள் கிழக்குகுநோக்கி வர ஆரம்பித்துள்ளது. எதிர்கால தமிழர்கள் அரசியல் வடக்கின் செல்வம் கிழக்கின் வறுமை இலங்கையில் மலைக தமிழர் முஸ்லிம்கள் சிங்களவர்களின் - ஏனைய இனங்களின் அரசியல் - இந்தியா உட்பட இந்து சமுத்திர சர்வதேச அணி என்பவற்றால்தான் தீர்மானமாகப் போகிறது என்பது தெளிவாகிவருகிறது. வடக்கு தமிழர் பிரதிநிதிகள் அரசுக்கு வெளியில் இருந்து உரிமைக்கு போராடுகிறதும் கிழக்கு தமிழர் பிரதிநிதிகள் அரசுக்கு நிபந்தனைகளுடன் ஆதரவளித்து அமைச்சு பதவிகளை ஏற்க்க வேண்டியதுமான சூழல் உருவாகி வருகிறது. மலையகதமிழர்கள் முஸ்லிம்களுடனான அரசியல் உறவுடன் ஒப்பிடுகையில் எதிர்காலத் தமிழர் அரசியலில் மகிந்தாவா ரணிலா என்பது சிறிய அம்சம்தான்.

ஜெயபாலன் அவர்களே அப்போ ஏன் யுத்தம் முடிந்த நேரம் இவ்வாறு செய்திருக்கலாமே.ஏன் 10 வருடங்கள் ஜெனிவாவில் நேரத்தை நாசமாக்கினீர்கல்.அய்யா “விழுந்தும் மீசையில் மண் படவில்லை” என சொல்வார்கள் அதை இப்போது உதாரணம் மூலம் நீங்கள் விளக்கி விட்டீர்கள்.

Post a Comment