Header Ads



அமைச்சுக்களை ஏற்க கோரிய ரணில், மறுத்தனர் முஸ்லிம் Mp கள் - முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஒருவாரத்தில் தீர்ப்பதாக உறுதி

முஸ்லிம் அரசியல்வாதிகள்முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு அடுத்த ஒரு வார காலத்தில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படுமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று மாலை எம் பிக்களான ரவூப் ஹக்கீம் ,ரிஷார்ட் பதியுதீன் ,ஹாரீஸ் ,மஹ்ரூப் ,பைசல் காசீம் ,அலிசாஹீர் மௌலானா ,தௌபீக் ,நசீர் ஆகியோர் அலரி மாளிகையில் பிரதமரை சந்தித்தனர் .

முஸ்லிம் எம்பிக்களுடன் பேச்சை ஆரம்பித்த பிரதமர்,நாளை அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளுமாறும் இன்று ஜனாதிபதிக்கு அமைச்சர் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்.ஆனால் இப்போதைக்கு அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பதில்லையென்ற தங்களின் நிலைப்பாட்டை முஸ்லிம் எம் பிக்கள் ரணிலிடம் எடுத்துக் கூறினர்.

கல்முனை தமிழ் பிரதேச செயலக விவகாரம் ,வாழைச்சேனை பிரதேசசபை எல்லை விடயம் ,தோப்பூர் உப பிரதேச சபை தரமுயர்த்தல் விடயங்களில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக எம்.பிக்கள் சுட்டிக்காட்டியதையடுத்து அது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசவுள்ளதாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வார காலத்திற்குள் இந்த விடயங்களுக்கு உரிய தீர்வை பெற்றுத் தருவதாக இதன்போது பிரதமர் உறுதியளித்துள்ளார்.

வெறுமனே பேச்சளவில் இல்லாமல் இம்முறை உறுதியான முடிவு தேவையென முஸ்லிம் எம் பிக்கள் பிரதமரிடம் வலியுறுத்தியதாக சொல்லப்பட்டது. TN 

5 comments:

  1. உங்கள் முடிவில் உறுதியாய் இருங்கள்.

    ReplyDelete
  2. மிக்க மகிழ்ச்சி மன்னா!
    வேதாளம் முருங்கை மரம் ஏறும்.

    ReplyDelete
  3. EPPOLUZUM POL IMMURAIYUM KATTAAYAMAAHA KOLIPPAL
    KIDAIKKUM.

    ReplyDelete
  4. தமிழரும் முஸ்லிம்களும் பேசி தீர்வுக்கு வரமுடியாவிட்டால் கிழக்கை இழந்துவிடுகிற ஆபத்துள்ளது. இலங்க அரசின் முன்னமும் நாளை ஒருவேளை 1987 வரலாறு திரும்பி வெளிநாடுகளின் தலையீடு அதிகரிக்கிற சூழல் ஏற்பட்டாலும் கிழக்கில் தமிழரதும் முஸ்லிம்களதும் பலமாக நல் உறவு மட்டுமே அமைய முடியும். முதலில் கல்முனை பிரச்சிமைக்கு தீர்வும் அதே சமன்பாட்டின் அடிபடையில் மூதூர் வாழைசேனை பிரச்சினைகள் ஆராயபட்டு சீர்செய்யபடுவதும் அவசியம்.

    ReplyDelete

Powered by Blogger.