Header Ads



பாராட்டப்பட வேண்டிய Mp ஹரீஸ்

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்தவருமான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் , HMM HAREES அவர்களின் அண்மைக்கால அரசியல் நடவடிக்கைகள் பல மட்டங்களில் திருப்தியான நிலைமைகளை உண்டு பண்ணி இருக்கின்றது என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்படுகின்றது, அந்தவகையில் அக்கருத்தின் உண்மை நிலையினை ஆராயும் பதிவே இதுவாகும்,

கல்முனைப் பிரதேச அரசியலில் தலைவர் அஸ்ரஃப்பின் காலத்திற்கு பின்னர், பாரிய அபிவிருத்திகள் நிகழாமல் உள்ளது என்ற விமர்சனம் பரவலாக முன்வைக்கப்படடாலும், ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் இலங்கையில் முஸ்லிம்கள் பல நெருக்குவாரங்களை எதிர்நோக்குகின்ற வேளையில் கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதிகளின் செயற்பாடுகளை முழு நாட்டு மக்களும் எதிர்பார்த்து உள்ளனர், அந்தவகையில் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் அண்மைக்காலமாக பா.உ. ஹரீஸ் அவர்கள் பல சாதகமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார் , அவை

1). #ரத்ன_ஹிமியின் உண்ணாவிரதம் கண்டியில் இடம்பெற்றதனால், முழு நாட்டு முஸ்லிம்களும் பதற்றத்தில் இருந்த வேளை அமைச்சுப் பதவிகளை அனைவரும் ஏகோபித்து இராஜினாமாச் செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து செயற்பட வைத்தல், இது ஹரீஸின் முன்வைப்பே என SLMC தலைவர் ஹக்கீம் அவர்களும் ஒரு பேட்டியில் பெருமையாக கூறி இருந்தார்.இது ஒரு முக்கியமான அரசியல் தற்காப்பு நகர்வு என்பதுடன், பல இழப்புக்களையும், தவிர்த்ததுடன், சமூக ஒற்றுமையும் பாதுகாக்கப்பட்டது.

2). பாராளுமன்றில் #சிங்கள_மொழியில். உரையாற்றியமை,

கல்முனை பிரதேச செயலக பிரச்சினைகள் பற்றி பல முறை பேசக் கிடைத்தாலும் பாராளுமன்றத்தில் சிங்கள மொழியில் அப்பிரச்சினைகளை முன்வைத்து பேசியது பாராட்டுக்குரியதே, சிங்களமும் ஒரு மொழிதான் ஆனாலும் கிழக்கில் உள்ளவர்களுக்கு அது சிரமமான, கற்பதற்கு வாய்ப்பு கிடைக்காத ஒன்று மட்டுமல்ல இரண்டாம் மொழியும் ஆகும்.. 
அந்த வகையில் அது பெரும்பான்மையினரது கவனத்தை ஈர்த்து இருக்கும் .மட்டுமல்ல ஏனைய உறுப்பினர்களும், நாட்டு மக்களும் பிரச்சினையின் ஆழத்தை உணர மாற்று மொழி வடிவ உரை வழி அமைத்திருக்கும்..

3). கல்முனை உப பிரதேச பிரச்சினையின் போது பிரதேச மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சத்தியாக்கிரக நிகழ்வில் பா.உ. என்ற வகையில் பூரணமாக பங்கெடுத்ததுடன், அரசியல் ரீதியான பழைய பகைகளையும் மறந்து அரசியலில் தனக்கு எதிர் செயற்பாடு உள்ள முன்னாள் அமைச்சர் அதாவுள்ளா, போன்றோரையும், உள்ளூர் அரசியல் வாதிகளையும் ,பிரதேச தலைவர்களையும், தமது கருத்துக்களையும், விமர்சனங்களையும் பொதுச் சபையில் சுதந்திரமாக முன் வைக்க அனுமதித்திருந்தார்

இது கடந்த காலங்களை விட கல்முனையில் உருவாகி இருக்கும் ஒரு புதிய வழி முறையாகும் .

4). #தெரண_தொலைக்காட்சி யின் 360 நிகழ்வில் கலந்து கொண்டமை,
இந்நிகழ்வுக்கு முன்னரே, பலரும் இந்நிகழ்வு சிங்கள மக்களைச் சென்றடையும் நிகழ்வு, மட்டுமல்ல இனவாதிகளும், குறித்த ஊடகவியலாளரும் உணர்வுகளை திசை திருப்பி நாட்டில் வன்முறை உருவாகும் அடிப்படையாக இதனை மாற்றி அமைக்கலாம் ,எனவே பா.உ.ஹரீஸ் அவர்கள் இதனை முன்கூட்டியே தவிர்ப்பது நலம் என சமூக ஊடகங்களிலும், ஏனைய வகைகளிலும் கருத்து தெரிவித்திருந்தனர்,

ஆனால் குறித்த ஊடக வியலாளரால் கேட்கப்பட்ட கேள்விகளிற்கு தனக்கு தெரிந்த சிங்கள பேச்சுப் புலமையின் ஊடாக சிறந்த பதில்களை வழங்கி இருந்தமையை, அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பால் நாம் பாராட்டி ஆக வேண்டும்.

குறித்த நிகழ்வு சிங்கள மொழி நேயர்களிடையேயும், சமூக ஊடகங்களிலும் வரவேற்பைப் பெற்று இருந்தது, அத்தோடு அதில் கேட்கப்பட்ட கல்முனை தொடர்பான பல வினாக்களுக்கு தெளிவான பதிலையும், ஆதாரங்களையும் காட்டி பேசி இருந்தமை சிறந்த முன்மாதிரியே ஆகும், அத்தோடு பதில்களை கேட்டு குறித்த ஊடகவியலாளர் சில நேரங்களில் மௌனியாக இருந்ததையும் அவதானிக்க முடிந்தது,

இன்னும் , வடகிழக்கு, இணைப்பு, 1987 க்கு முந்திய கல்முனை, இஸ்லாமாபாத், மற்றும் முஸ்லிம் தனித் தேசம் என்பன தொடர்பான பல வினாக்களிற்கு தெளிவான பதில் கூறியதுடன், அமெரிக்க SOFA உடன்பாடு குறித்த விடயத்திலும் இந்நாட்டு முஸ்லிம்கள். தேசப்பற்று மிக்கவர்கள், அவர்கள் எப்போதும் இலங்கை தேசத்தின் நலனில் அக்கறையானவர்கள் என்பதை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தி இருந்தார்,

அந்தவகையில் தமக்கு தெரிந்த சிங்கள மொழி அறிவினூடாக பல சிக்கலான கேள்விகளுக்கும் மிக நுட்பமான பதில்களை வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்களை அனைவரும் பாராட்டியே ஆக வேண்டும், அத்தோடு சிங்கள ஊடகங்களில் தமது கருத்துகளை முன்வைத்து அச்சமூகங்களிலே கிழக்கு முஸ்லிம்கள் பற்றி நிலவும் தப்பபிப்பிராயங்களை நீக்க முயன்ற பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் துணிவையும் பாராட்டித்தான் ஆக வேண்டும்,

எது எப்படியோ, அரசியல். என்பது பல சிக்கல்களைக்,கொண்ட ஒரு நீண்ட பயணம் அதில் மக்களின், புத்திஜிவிகளின் விமர்னங்களே வழிகாட்டியாக இருந்து பிரதிநிதிகளை புனரமைக்கின்றது, அந்த வகையில் மக்களது விமர்சனங்களையும், ஆலோசனைகளையும் உள்வாங்கிய நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் காலத்தையும், மக்களது நிலைமையையும் கவனத்திற் கொண்டு, அண்மைக்காலமாக தமது செயற்பாடுகளில் நல்ல , பல புதிய மாற்றங்களைக் கொண்டு வந்திருப்பது, பாராட்டுக்குரியது.

இது , ஆரோக்கியமான அணுகு முறை தேசிய, மற்றும் இப்பிரதேச உள்ளூர் அரசியலிலும்,எதிர்காலத்தில் புதிய மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும், அந்த எதிர்பார்ப்புக்களை நோக்கிய பயணத்தில் தன்னை ஈடுபடுத்தி இருக்கும் ஹரீஸ் அவர்களின் முயற்சி நல்ல பலன் அளிக்கட்டும்.என மனந்திறந்து பாராட்டுவோம்.....

#நல்லவற்றை_வரவேற்போம்,#அதேபோல் #நல்லன_நடக்கவும்_வழிகாட்டுவோம்..

MUFIZAL ABOOBUCKER, 
UNIVERSITY OF PERADENIYA
04:07:2019

1 comment:

  1. மதிப்புக்குரிய ஹாரிஸ் அவர்களின் தெரண 360 பேட்டியை முழுமையாக மொழிபெயர்த்து யாழ் முஸ்லிம் சஞ்சிகையில் வெளியிட முடியுமாயின் பயனுள்ளதாக இருக்கும். தயவு செய்து முஸ்லிம்கள் பறிய சிங்கள பதிவு மொழிபெயர்ப்புகளுக்கு இடம்தாருங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.