Header Ads



ISIS இடம் கெஞ்சிய சஹ்ரான், கண்டுபிடித்தது அமெரிக்கா - பயங்கரவாதம் பற்றி ரணிலுக்கு ஆலோசனை

பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் கடலோரக் காவல்படை என்பன அவசியம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.

அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்கள் குழு செவ்வாய்க்கிழமை, மாலை அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தலைமையில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தது.

21/4 தாக்குதலுக்குப் பின்னர் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இதன் போது, அவர்கள் சிறிலங்கா பிரதமருக்கு விளக்கியுள்ளனர்.

கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் கடலோர காவல்படை இருக்கும், ஒரு நாட்டிற்குள் ஊடுருவ முயற்சிக்கும் போது, எந்தவொரு பயங்கரவாதியும் அஞ்சுவர் என்றும் அவர்கள் கூறினர்.

புலனாய்வு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, பயங்கரவாத எதிர்ப்பு மையத்தை நிறுவி, நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, இந்த சந்திப்பின் போது, சிறிலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார்.

9/11 தாக்குதலுக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட பயங்கரவாத சந்தேக நபர்களை, குடியியல் நீதிமன்றங்களில் விசாரிப்பதில் தாங்கள் நடைமுறை சிக்கல்களை எதிர்கொண்டதாக, அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதம் என்பது, சாதாரண குடியியல் நீதிமன்ற முறை மூலம் விசாரிக்கப்பட வேண்டிய சாதாரண குற்றம் அல்ல என்றும்,  அத்தகைய சந்தேக நபர்களைத் தண்டிக்க அவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் தேவைப்பட்டதாகவும், அவர்கள் கூறினர்.

அடையாளம் காணப்பட்ட பயங்கரவாத சந்தேக நபர்கள் தொடர்பாக எல்லை கட்டுப்பாட்டு தரவு அமைப்புகளை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் அமெரிக்க நிபுணர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

தேசிய தவ்ஹீத் ஜமாத் தலைவர் மொஹமட் சஹ்ரான் இஸ்லாமிய அரசின் (ஐஎஸ்) சிறிலங்காவுக்கான முகவராக தன்னை அங்கீகரிக்குமாறு கோரியிருந்தார் என்பதை, அமெரிக்க குழு கண்டுபிடித்திருப்பதாகவும் இதன்போது தெரிவித்துள்ளது.

7 comments:

  1. என்னத்த கண்டுபிடிக்க எல்லாமே அமெரிக்கா நாயின் வேளை தானே...

    ReplyDelete
  2. என்னத்த கண்டுபிடிக்க எல்லாமே அமெரிக்கா நாயின் வேளை தானே... பிள்ளையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவான்...உதா.. ம் 9/11

    ReplyDelete
  3. U S your going to invade stilanka.may god bless our country.2019 Dec ranil will go home.will take a rest.

    ReplyDelete
  4. I think America has received this information from Isis chief Bakthi

    ReplyDelete
  5. இந்தியாவை போன்று இல்ங்கையையும் இஸ்ரேல்/மோசாட் யின் அலோசனைகளை பெற்று பயங்கரவாதகளை அடக்க வேண்டும்

    ReplyDelete
  6. சஹ்ரான் ISIS கதைத்து தன்னை இலங்கைக்கு பொறுப்புதாரியாக ஏற்றுக்கொள்ளும்படி கதைத்தை கண்டுபிடித்துவிட்டீர் ரெம்ப்பிரமாதம்!

    எனவே சஹ்ரான் கதைத்த Isis உறுப்பினர் எங்கு இருக்கின்றார் என்றும் தெரிந்துவிட்டதே உடனே அந்த நபரை சென்று பிடியுங்களேன் ஏன் விட்டுவைத்துள்ளீர்கள்?

    யாருக்குடா ரீல் விடூரிங்க?

    ReplyDelete

Powered by Blogger.