July 21, 2019

இஸ்லாம் ஒரு உன்னதமான மார்க்கம் - IS தலைவன் பக்தாத்தி பாதுகாப்பான நாட்டில் வாழ்கிறான் - மெல்கம் ரஞ்சித்

ஈஸ்டர் ஞாயிறு தினம் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சர்வதேசத்தின் சதித்திட்டம் என கத்தோலிக்க திருச் சபையின் பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு - கட்டுவாப்பிட்டிய, புனித செபஸ்தியார் தேவாலயத்தில் இன்று -21- நடைபெற்ற திருப்பலி பூஜையில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தினம் நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் சேதமடைந்த செபஸ்தியார் தேவாலயம் மறுசீரமைக்கப்பட்டதுடன் மூன்று மாதங்களுக்கு பின்னர் இன்று ஞாயிறு ஆராதனை நடத்தப்பட்டது. அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட பேராயர்,

தாக்குதலை தடுக்க வாய்ப்புகள் இருந்தன. தாக்குதல் நடத்தப்பட போகிறது என்ற தகவல்கள் கிடைத்திருந்தன. தாக்குதலுக்கு முன்னர் அரச அதிகாரிகள் இது பற்றி அறிவித்தனர்.

இந்திய தூதரகமும் அறிவித்திருந்தது. அதனை தடுத்திருக்கலாம். எமது துரதிஷ்டவசம், சுயநலவாத அரசியல்வாதிகளின் மோதல்கள் காரணமாக இந்த அனர்த்தம் நடந்தது.

வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் குழுவை நியமித்து அறிக்கை பெற்றனர். அந்த அறிக்கை கையளிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் நாங்கள் அதனை இன்னும் காணவில்லை. 70ஆம் ஆண்டுகளில் இருந்து கொலைகள் நடந்தன. டயர்களில் போட்டு எரிக்கப்பட்டனர்.

ஆறுகளில் பிணங்கள் மிதந்தன. பல அரசாங்கங்கள் ஆட்சியில் இருந்தன.விசாரணை குழுக்களை நியமித்தன. எந்த தலைவர்களும் அந்த அறிக்கைகளை வெளியிடவில்லை.

இது நாட்டை ஆளும் அரசியல்வாதிகளின் அரசியல் கலாசாரம். அனைத்தையும் சிகப்பு கம்பளத்திற்குள் மறைக்கப்பட்டுள்ளன. இதனால், அரசியல்வாதிகளை நம்ப முடியாது.

ஐ.எஸ். தலைவர் ஒரு பலமிக்க நாட்டில் வாழ்வதாக புதன்கிழமை பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அப்படியானால், ஐ.எஸ். தலைவர் அந்த நாட்டின் கைப்பாவையா?. இளைஞர்கள், இஸ்லாம் மதத்திற்காக உயிர்களை தியாகம் செய்தார்கள் என்பதை நம்ப முடியுமா?. இது சர்வதேச சதித்திட்டம்.

நடந்து முடிந்த சம்பவமானது, சுதந்திரத்திற்கு பின்னர் நடந்த பெரிய அழிவு. இதன் பின்னணியில் சர்வதேச அமைப்பு எப்படி சம்பந்தப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பு என்பது உண்மையை பொய்யாகும், பொய்யை உண்மையாகும் அமைப்பு. ஐ.நாவை நம்ப முடியாது.

சம்பவத்தின் பின்னர், அவர்கள் வந்தனர். கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு நியாயத்தை வழங்கவே அவர்கள் வந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் குறித்து அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. எமது நாட்டின் தலைவர்கள் இவற்றுக்கு எதிராக செயற்பட அஞ்சுகின்றனர்.

ஈஸ்டர் தாக்குதல் முஸ்லிம் மக்களின் செயல் அல்ல. சர்வதேச சதித்திட்டத்தில் தவறாக வழிநடத்தப்பட்ட இளைஞர்களை கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல். இதற்கு முஸ்லிம் மக்கள் பொறுப்புக் கூற வேண்டியதில்லை. முஸ்லிம் மக்கள் சர்வதேச சதித்திட்டத்தின் இரையாக மாறியுள்ளனர்.

உன்னதமான இஸ்லாம் சமயத்தை பாதுகாக்க முன்னோக்கி வாருங்கள். அடிப்படைவாத கருத்துக்களுக்கு செவிமடுப்பது இஸ்லாம் தர்மத்திற்கு செய்யும் அவமதிப்பு. முஸ்லிம் மக்கள் எங்களுடன் இணையுங்கள்.

உலகில் முஸ்லிம் நாடுகளேயே அதிகமான பேர் நடந்தது. அடிப்படைவாதத்தை பரப்பி, ஆயுதங்களை விற்பனை செய்து, எண்ணெய் வளத்தை கைப்பற்ற முயற்சித்து வருகின்றனர். இதற்கு இஸ்லாம் சமயத்திற்கு தொடர்பில்லை எனவும் பேராயர் மெல்கம் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.

19 கருத்துரைகள்:

The holy respected Cardinal Malcom Ranjith is always kindhearted, soft minded, speaking well and good, have not double tongues, and maintaining the truthfulness always. His reputation already gone more than the peak of the Himalaya.

alhamthulilah you are very grate father

உண்மையாகவும்,நேர்மையாகவும்,மனச்சாட்யுடனும் பேசுகிரார் கர்தினால்.thanks a lot on behalf of Sri Lankan Muslim community.

I respect cardinal malcum Ranjith he is a kind hearted truthful person .he respect other religion.our leaders need to learn more from cardinal.

இவர் எவ்வளவு பரந்த மனப்பான்மையுடன் சிந்திக்கும் மனச்சாட்சியுள்ள புத்திஜீவி. கருணையை அடிப்படையாகக்கொண்ட ஒரு மதத்தின் தகுதிமிக்க தலைவர்.அன்பே அனைத்தும் என்ற கோட்பாட்டில் நிறுவப்பட்ட பஞ்சசீல ஒழக்க நெறிவாழ்வுக்கு வழிகாட்டும் பெளத்த மத துவேஷம் காக்கும் துறவிகள் இவர் போல் சிந்திக்கும் சீரிய உள்ளம்பெறுவார்களா?

Whst a great person he is.

yes, i agreed with Malkam Ranjith. Alhamdulillah....

இங்கு வணக்கத்துக்குரிய என்ற சொல்லை பயன்படுத்தாமல் இருக்க முடியும் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. கிறிஸ்தவர்களுக்கும், யூதர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் வேதம் ஒரே இறைவனால் அருளப்பட்டது. கிறிஸ்தவ மதம் உலகில் அன்பை போதிக்கின்றது. இஸ்லாம் மதம் உலகில் சகோதரத்துவத்தை போதிக்கின்றது. மார்க்கத்தில் முஸ்லிம்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் கிறிஸ்தவர்கள் என்று அல்குர்ஆன் கூறுகின்றது. لَـتَجِدَنَّ اَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِّـلَّذِيْنَ اٰمَنُوا الْيَهُوْدَ وَالَّذِيْنَ اَشْرَكُوْا‌ وَلَـتَجِدَنَّ اَ قْرَبَهُمْ مَّوَدَّةً لِّـلَّذِيْنَ اٰمَنُوا الَّذِيْنَ قَالُوْۤا اِنَّا نَصٰرٰى‌ ذٰ لِكَ بِاَنَّ مِنْهُمْ قِسِّيْسِيْنَ وَرُهْبَانًا وَّاَنَّهُمْ لَا يَسْتَكْبِرُوْنَ‏ 
நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்; “நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர்; ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர் மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை.
(அல்குர்ஆன் : 5:82)

Very much welcome, I have never heard these words from any of our Muslim leader, they fear to talk because they thing they will loose dignity, brad as supporting terror, fear of loosing foreign trips. and many...

உண்மையில் இது ஒரு நடுநிலையான கருத்து.

Cardinal Malcolm Ranjith is a respected Archbishop of Colombo, he speaks the truth, he knows who is responsible for the bombings. SL Muslims are always thankful to the Cardinal Malcolm Ranjith for his very decisive words that averted a Muslim-Christian violence in SL, and his name will be written in golden letters in the history of Muslims.

உண்மையில் நம்பமுடியவில்லை. எப்படி கர்தினால் ரஞ்சித் அவர்களால் இவ்வளவு தெழிவாகவும் உறுதியாகவும் உண்மையைத் தனித்துணிவோடு பேசமுடிகிறது ???

உள்ளதை உள்ளபடியே பேசத்துணிவுபெற்ற மல்கம் ரஞ்சித் அவர்களுக்கு இலங்கை முஸ்லிமு் சமூகம் மிகப்பெரும் கடமைப்பட்டிருக்கிறது.

இலங்கை முஸ்லிம்களின் மிகப்பெரும் அழிவைத் தடுக்க பெரும் அர்ப்பணம் செய்தது மட்டுமல்லாது முஸ்லீம் சமுகத்தின் நியாயத்தன்மையை நிலைநாட்ட அவர் கொடுக்கும் குரல் வரலாற்றில் எழுதப்படவேன்டியவைகளாகும்.

முஸ்லிம் கிறிஸ்தவ சமூகங்கள் தமக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் களைந்து சாத்தியப்பாடானவற்றில் ஒன்றிணைந்து செயல்பட முன்வருவதற்கு இவருடைய வழிகாட்டல் நிட்சயம் ஒரு மயில்கல்லாக அமையும். தலைமைகள் சிந்தி்க்குமா ?

நீங்கள் மனிதரில் சிறந்தவர். உங்களினதும் உங்களை சார்ந்தவர்களினதும் பாவங்களை நாம் வணங்கும் ஒரேயொரு கடவுள் மன்னிக்க வேண்டுகிறோம்.

ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது, மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (Al Quran : Al Baqara : Verse 62)

Dear my muslim brother i am happy to see positive comments of Cardinal for this article. and same time some of us blame him blindly for while athuraliya rathna thero was hunger strike in kandy. some words was mentioned "ivanda suya roobataha ippa velangittom" double gamer" erigira neruppil ennaya uturaru" there many criticizes I dont have remember.the curse of our community is believe everything blindly.because we dont have proper leadership and unity.everyone thinking that its time to say good bye to this government must need a change..of course even me expecting a change. governments are not jumping from sky people is the government our votes is choosing the strong sri lanka.now a days peoples are very clear and clever they know whats going on our country so try avoid blame most respectful person of country like Cardinal Malcom blame a dirt politicians I will clap u all.JAFNA MUSLIM reading not only by Muslim around the world but also tamil reading non muslims. even my non Muslim friends told me that "ungal alkalukku ena nalava senjalum nadri illa" while some of us blame Cardinal Malcom visit during hunger strike (later she apologize to me).
so while you comments about this kind of the people be careful its hurting and creating bad view of our community.

Rawthiran. We must appreciate to anyone do good. so we respect cardinal for his this speach. But his visit to Rathna therar was wrong.

விரைவில் இஸ்லாத்தை தழுவிக் கொள்ள வாய்ப்பு...இன்ஷா அல்லாஹ்....

@Rowthiran; people are always good, and the five fingers are not the same. Some people might be ignored owing to prevailed situation. You come and see my hometown. They are living more than the friends and relatives. when they go for the worship places only, could be identified; otherwise not. We are respecting people. People living faraway; when they come to my town, they go to Muslim houses, they drink, eat and play and then go home. If you wanna to see the reality, let me know. I can arrange a stay with me for any amount of days. I can take you a round. You can realize the truth of it. People are always good Rowthiran. They are more than good. They are very innocent. Let me know please.

Post a comment