July 26, 2019

Dr ஷாபி விடுதலை, பெருநாள் இரவு போன்றிருக்கிறது - உங்களுக்கு எப்படி..?

- Dr.  Ahamed Nihaj -

டாக்டர் ஷாபி,,

நான் கண்டதுமில்லை. எனக்கும் அவருக்கும் எந்த தொடர்புமில்லை. ஆனால் அநியாயமாக, முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக கைது செய்து இழுத்துச் சென்றதை பார்த்த போது, மனது வலித்தது. பல இரவுகளில் தூக்கம் வர மறுத்தது. இறைவனிடம் பிரார்த்திப்பதை தவிர வேறு வழியும் இருக்கவில்லை.

பல வருடங்கள் மருத்துவம் படித்த வைத்தியர்களின் கண்களை இனவாதம் மறைத்தது. வைத்தியர்களுக்கான facebook மற்றும் viber குழுமங்களில் பச்சையாக இனவாதம் கதைத்தனர். ஆதாரம் கேட்ட முஸ்லிம் வைத்தியர்கள் பயங்கரவாதிகளாக திட்டப்பட்டனர். பல குழுக்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். வைத்தியர்களின் கூட்டமைப்பின் இனவாத முகம் வெளிப்பட்டது.

வைத்தியசாலையில் பல வைத்தியர்களுடன் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. வைத்தியனாக இராமல் பொதுப் புத்தியுள்ள ஒரு சராசரி மனிதனாக சிந்தித்துப் பாருங்கள் என கடைசியாக ஒருவரிடம் கூறினேன்.

இறைவனிடம் கேட்ட பிரார்த்தனைகள் பலனளிக்க தொடங்கின.

போலியான குற்றச்சாட்டு என நிரூபணமானது. வைத்தியசாலை அத்தியட்சகரின் போலி மோசடி தோலுரிக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனைக்காக அழைக்கப்பட்ட குற்றஞ்சாட்டிய பெண்கள் பின்னங்கால் பிடறியில் அடிபட ஓடினார்கள். அவர்களின் கணவர்களின் விந்தணுக்களை பரிசோதிப்பதற்கும் அவர்கள் தயாராக இருக்கவில்லை.

இப்போது வைத்தியர்களின் பக்கங்களில் இதைப்பற்றிய எந்தப் பேச்சுமில்லை. சில மறை கழன்ட பைத்தியங்களின் தனிப்பட்ட போஸ்ட்களை தவிர.

வைத்தியர் ஷாபிக்கும் எனக்கும் எந்த உறவுமில்லை. ஆனால் இன்று பெருநாள் இரவு போன்றிருக்கிறது எனக்கு!

உங்களுக்கு எப்படி?

9 கருத்துரைகள்:

ungalukku etpatta Athe unarwu enakkum undaanathu...kaaranam...naan Awarathu villagil padithu nalla nilaikku...wanthawan......sumar 12
years Angu waalnthawar.....Alhamthulillah....

இவ்வேளை முஸ்லீம் சமூகத்துக்கான ஒரு வேன்டுகோள்

எந்த ஒன்று நடந்தாலும் அது இறை நாட்டப்படியே என்பதில் நமக்குள் மாற்றுக் கருத்து இருக்காது.

அந்த அடிப்படையில் நடந்துமுடிந்துள்ள அண்மைக்கால கசப்பான சம்பவங்கள் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் ஒரு நல்ல திருப்பத்தை எம் அனைவரிலும் கொன்டுவர வேன்டும் என்பதற்காக அல்லாஹ்வால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம்.

எனவே இன்நிகள்வுகளின் பின்னணியை நாம் எதிரமறையாகப் பாரப்பதை விடுத்து - நம்முடைய மாற்றத்திற்கான ஒரு சந்தர்ப்பமாக நம்மால் எடுத்துக்கொள்ள முடியுமாக இருந்தால் அதுவே நாம் நம்முடைய இம்மை மறுமை வாழ்வை சீர்செய்து கொள்வதற்கான ஓர் அரிய சந்தரப்பமாக அமையும். அவற்றுக்கான ஒருசில வரிகள்.

1. மாற்று சமூகங்களின் கலாச்சாரங்களையும் அவர்களது பண்பாட்டு செயற்பாடுகளையும் மதித்து நடக்கப் பழகுதல் - அவரவர்களுக்குரிய கெளரவத்தை கண்ணியத்தை வழங்குதல்.

2. அவர்களுக்கும் நமக்குமிடையேயான தொடர்பாடலை புரிந்துணர்வை சமூகரீதியாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்து - ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களைக் கழைய அனைத்துவகையான நடவடிக்கைகளை சமூகரீதியாக மேற்கொள்ளல்.

3. நம்முடைய கொடுக்கல் வாங்கல் பழக்கவளக்கம் அனைத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தி மற்றவர்களிடையே நம்பிக்கையை கட்டியெளுப்பும் வகையாக நடந்தகொள்ள முயற்சித்தல் - நாம் நம்பிக்கை்கு உரியவர்கள் என்று உள்ளும் வெளியும் மற்றவர்களது மனேறிலையில் மாற்றம் வரும்வரை இந்தப்பணி தொடரவேன்டும்.

4. நம்முடைய மார்க்கம் சம்பந்தப்பட்டு ஏற்பட்டிருக்கும் சில சசந்தேகங்களையும் அவநம்பிக்கைகளையும் அவர்கள் மத்தியில் இருந்து துடைத்தெறிவதற்காக நிறுவனரீதியாக நடவடிக்கை எடுத்தல்.

5. நாம் எந்த சந்தர்ப்பத்திலும் நாட்டின் நலனுக்கு எதிராக செயற்படக் கூடியவர்கள் அல்ல என்பதை அவர்களுக்குத் தெழிவுபடத்தக்கூடிய கலந்துரையாடல்பளை சமூக ரீதியாக மெற்கொள்ளல்.

6. பல்வேறு மட்டங்களில் பிரிந்து நிற்கும் நம் சமூகத்தை ஒன்றிணைக்கும் ஒரு பாலமாக நடைபெற்ற நிகழ்வுகளைப் பயன்படுத்த காத்திரமான நடவடிக்கை எடுத்தல்.

7. ஒருங்கிணைக்கப்பட்ட ஓர் தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்பவும் அதனுடாக சமூகத்தை எதிர்காலத்தில் வழிநடாத்தவும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

இன்சா அல்லாஹ் - நம்முடைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் இவற்றை நோக்கி அமையுமாயின் இலங்கைவாழ் முஸ்லீம்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

Mashallah..This is a good news. but it is my personal opinions. Muslim doctors should avoid politics as it does not suite them in Sri Lanka. your good intention to help Muslim community is great but, Sri Lankan political culture right now is not good for good people like you. I personally feel that it would great for you, for our community and for Sri Lanka, if you could master your field of specialisation and do your best service for Sri Lanka, it would be appreciated well by all communities. We all know you are innocent but, politics does not discriminate between good and bad people when you are in a wrong side. This is nothing but political revenge all know that. 99% Sinhalese too know that .. but I do not know how it would be good for you to continue your politics any longer in SL.. but 2 months of this torture and persecution for the sake of our community would have given you many lessons. We pray and hope this problem will be finished for good and you will have a good time again..

Marsha Allah. So happy to hear this news

Post a comment