Header Ads



சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரி, மாலிக் அசீஸ் பற்றி சுதன்த தேரர் CID யில் முறைப்பாடு

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி மாலிக் அசீஸ் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை விசாரணை செய்யுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர். 

மாகல்கந்தே சுதன்த தேரரினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடே இவ்வாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கிய சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி மாலிக் அசீஸ் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு குறித்த முறைப்பாடு நேற்று (29) சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பொலிஸ் தலைமையகத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளது. 

கடந்த வாரம் சட்டமா அதிபர் சார்ப்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி மாலிக் அசீஸ் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கியிருந்தார். 

இதன்போது சஹ்ரான் தொடர்பிலான கோப்பு ஒன்று 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தனக்கு கிடைக்கப்பெற்றதாகவும் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார். 

அதனடிப்படையில் சிங்கள ஜாதிக அமைப்பு நேற்று சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு சென்று மாலிக் அசீஸ் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு முறைப்பாட்டை தாக்கல் செய்திருந்தனர்.

No comments

Powered by Blogger.