July 09, 2019

தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பொதுபல சேனா சொன்ன முக்கிய செய்தி

பொதுபலசேன கண்டி போகம்பறையில் நடாத்திய கூட்டம் மிகமுக்கியமான செய்தி ஒன்றை தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சொல்லி இருக்கிறது. அதாவது,

"சிங்களவர் மட்டும்" என்ற தேசிய நிகழ்ச்சி நிரலுக்கு சிங்கள மக்களை அழைக்கும் அபாயமான அறிவித்தலாக அது அமைந்துள்ளது.

அக்கூட்டத்தில் பேசிய ஞானசார தேரர், பின்வரும் விடயங்களை வலியுறுத்தினார்;

👉🏿சிங்கள அரசை அமைப்போம்
👉🏿சிங்களவர்கள் விரும்பும் அரசை ஏற்படுத்துவோம்
👉🏿பாராளுமன்றத்தில் சிங்களவர்கள் கோலோச்சும் நிலையை ஏற்படுத்துவோம்
👉🏿சிங்களவர்கள் முதுகெலும்புடன் இருப்போம்

ஞானசாரவின் இந்தக் கருத்துக்கள் தமிழ் பேசும் சமூகத்தின் மீது "சிங்களம் மட்டும்" என்ற சட்டத்தினூடாக திணிக்கப்பட்ட மொழிசார் இன அடையாள மறைப்பு அல்லது உரிமை மறுப்பை விட, ஒரு படி மேலானதாக பார்க்க வேண்டிய விடயமாகும்.

இது முஸ்லிம்களை இலக்கு வைத்ததாக மேலெழுந்தமானதாக கூறப்பட்டாலும் - உண்மையில் மிக நுணுக்கமாக தமிழர்களையும் சேர்த்து இலக்கு வைக்கப்பட்டிருப்பதையும் - அவர்களின் 30 வருட ஆயுதப்போராட்டத்தின் நியாயங்களை மறுத்து - "தமிழர் தாயகம்" என்ற "தமிழ் தேசிய கோட்பாட்டிற்கு" எதிரானதாகவும் அமைந்திருப்பதை தமிழ் புத்திஜீவிகள் புரிந்துகொண்டிருப்பார்கள் என நினைக்கின்றேன்.

அதாவது, முஸ்லிம்கள் மட்டுமல்ல - தமிழர்கள் கூறுவதை போன்று, இலங்கையில் அவர்களுக்கென்றும் எந்த "பாரம்பரிய நிலமும்" கிடையாது என்பதை - மீண்டும் பகிரங்கமாக பிரகடனம் செய்திருக்கிறார்கள் என்பதுதான் இதன் மறுபக்கமாகும்.

இதனை சிறிய விடயமாக தமிழர்கள் எடுத்துக்கொள்ள முடியாது. ஏன்எனில், பண்டா - செல்வா ஒப்பந்தத்தை கிழித்தெறிய வீதிக்கிறங்கிய அதே மத துறவிகள் கண்டியில் இந்த பிரகடனத்தை செய்திருக்கிறார்கள்.

அதுவும், இரு வாரங்களுக்கு முன்னர் தமிழர்களின் காவலனாக, கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தலுக்கு ஆதரவாக கள விஜயம் மேற்கொண்ட அதே நபர்கள், மாநாடு கூட்டி பிரகடனம் செய்திருக்கிறார்கள்.

அவர்களைப் பொறுத்தவரை தமிழர்களை இலக்கு வைக்க முஸ்லிம்களை தாலாட்டுவதும் - முஸ்லிம்களை இலக்கு வைக்க தமிழர்களுக்கு சோறூட்டுவதும் அவர்களின் தந்திரமே. அவை யாவும், அவர்களின் நலன்களை நிலைநிறுத்த கைக்கொள்ளும் ஏமாற்று வித்தைகளே. இதனை மிகத்தெளிவாக கண்டி மாநாடு வெளிப்படுத்தி நிற்கிறது.

அதாவது, "இலங்கை சிங்களவர்களின் நாடு. இதில் தமிழர்களுக்கோ முஸ்லிம்களுக்கோ பங்கு கிடையாது. விரும்பினால் ,மூடிக்கொண்டு'வாழ்ந்துவிட்டு போங்கள். இல்லாவிட்டால், நாட்டைவிட்டு வெளியேறுங்கள்" இதுதான் இவர்களின் செய்தி.

இந்த செய்தி முஸ்லிம்களை விட தமிழர்களுக்கே ஆத்திரமூட்ட வேண்டிய செய்தியாகும். ஏன்எனில், கடந்தகால யுத்தத்தில் தமிழர்கள்; 

👉🏿2,00,000 உயிர்களை இழந்து
👉🏿30,000 பேர் அங்கவீனமுற்று
👉🏿15,000 சிறுவர்கள் அனாதையாகி
👉🏿90,000 பெண்கள் விதைவைகளாகி 

நிற்கின்ற ஒரு சூழலில், மீண்டும் இலங்கை "சிங்களவர்களுக்கு மட்டுமான நாடு" என்று பகிரங்கமாக பிரகடனம் செய்வதை தமிழ் சமூகமும், அதன் தலைமைகளும் மௌனமாக பார்த்துக்கொண்டிருந்தால் அவர்களை என்னவென்றுதான் சொல்வது?

எனவே, ஆகக்குறைந்தது கண்டி மாநாட்டிற்கான பதிலை முஸ்லிம்களையும் முந்திக்கொண்டு 

👉🏿தமிழர் அரசியல் தலைமைகளே வழங்க வேண்டும்
👉🏿தமிழர் போராட்டத்தில் பங்கேற்ற இயக்கங்களே வழங்க வேண்டும். 
👉🏿புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகளே வழங்க வேண்டும்
👉🏿புலம்பெயர் தமிழர்களே வழங்க வேண்டும்
👉🏿நாடு கடந்த தமிழர்களே வழங்க வேண்டும்
இதுவரை வழங்கினார்களா? இல்லை.

இனியும் வழங்குவார்களா? தெரியாது

ஏன்எனில், இப்போது இவர்களுக்கு முஸ்லிம்கள் தமது எதிரிகள் என்ற மனப்பதிவு வந்திருக்கிறது.

அதனால், முஸ்லிம்களை இலக்கு வைக்கிறார்கள் அல்லது இலக்குவைக்கப்படும் போது உள்ளூர சந்தோசம் கொள்கிறார்கள். அதனால், தமது இவ்வளவு இழப்புக்களையும் தாண்டிய போராட்டத்தின் கருப்பொருளையே கேள்விக்குறியாக்கும் ஞானசாரவின் பிரகடனத்தைப் பற்றி அக்கறையே இல்லாது இருக்கிறார்கள்.

அடித்தாலும் கடித்தாலும் - மொழியால் ஒன்றினைந்த சமூகங்களான தமிழர்களும் முஸ்லிம்களும் - சிறு சிறு முரண்பாடுகளை தற்காலிகமாக தள்ளிவைத்துவிட்டு - ஒன்று சேர்ந்து கைகோர்த்து - "சிங்களவர்களுக்கு மட்டுமான இலங்கை" என்ற கடும்போக்கு சிந்தனையை எதிர்க்க - அழைப்பு விடுக்க தன்மானமிக்க தமிழ் தேசியத்தில் ஒரு தலைமை கூட இல்லை என்று நினைக்கும் போது மனம் கனக்கிறது.

தமிழ் - முஸ்லிம் உறவின் விரிசல்கள் இன்னும் என்னவென்னவற்றையெல்லாம் இழக்க வைக்கப்போகிறதோ என்ற கவலை மனதை ஆட்கொள்கிறது. தமிழர் தேசியம் தனது வீரியத்தை இழந்து நடைப்பிணமாகற மாறிவிட்ட இந்த நாட்களை எண்ணி மனம் கூசுகிறது.  A.L.Thavam

7 கருத்துரைகள்:

அன்னே அஜன் எங்கே ஓடி விட்டாய் இனி நீர் தமிழன் இல்லை கிருத்தவம் என சொல்வீர் போல்.உன்னை போல் ஆட்கலால்தான் கிழக்கு தமிழர்கள் முட்டாளாக்கப்பட்டுல்லனர்

@A.L Thavam, நல்ல கேள்வி கேட்டீர்கள்.

ஆனால், தற்போதய நிலைமையில் தமிழர்கள் logical ஆக think பண்ண வேண்டும், emotional ஆக பதில்கள் விடுவது முட்டாள் தனம்.

கடந்த காலங்களில் தமிழர்களுக்கு கிடைத்த அனுபவங்களின் படி, சிங்களவர்கள்-முஸ்லிம்கள் இருவரும் தமிழர்களின் 100% எதிரிகள்.
ஆனால், சிங்களவர்கள் நேருக்கு நேர் மோதும் நேர்மையான எதிரிகள்., முஸ்லிம்கள் சேர்ந்திருந்தது துரோகம் செய்யும் எதிரிகள். அதே அனுபவம் தான் சிங்களவர்களுக்கும் கிடைத்துள்ளது.

தற்பொது கூட, கல்முனை யில் தமிழர்களுக்கு துரோகம் .

எனவே தற்பொது, பொது துரோகியை தோற்கடித்து-ஒழிக்க, சிங்களவர்களுக்கு தமிழர்கள் 100% ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்.


அதன் பின்னர், சிங்களவர்களுடன் சமரசம்/மோதல் செய்து உரிமைகள் பெறுவது இலகு.

All need to teach for this disgusting pig, let him to do whatever he like, all tamil speak people need to get ready and stronger then every, we need to create a community with unity, tamil and muslim need a good relationship to defend this pig racist, don't let your hope , if he comes the way we need to treat him,


புள்ளிக்கொடத்தில நான் படிச்சது இன்னும் எனக்கு ஞாபகமிருக்கு. ஒரு அம்மா தன்ட பத்து புள்ளைகள்கிட்ட ஒன்னாக் கட்டின பத்து கொள்ளிக்கட்டைகள தனித்தனியா வந்து முறிங்கடான்னு சொன்னாங்களாம். எவ்வளவோ முயற்சி செஞ்சும் அவங்களால முறிக்க முடியல. பொறவு தனித்தனியா எடுத்து ஒன்னொன்னா முறிங்கடான்னு சொன்னாங்களாம். மிச்சம் Quick ஆ முறிச்சிட்டாங்களாம். அதில தாய்க்கு திருப்தி ஏற்படல. திருப்பி “பத்து பேரும் சேர்ந்து ஒரே நேரத்தில் அந்த கொள்ளிக் கட்டுகளை முறிங்கடா" ன்னு சொன்னாங்களாம். சொற்ப நேரம் எடுத்திச்சுதான். ஆனால் பாவிகள் முறிச்சுப் போட்டான்கள். இது விசேடமாக எங்களுக்கான ஒரு படிப்பினைக்குரிய கதை. எப்பங்க தமிழனுக்கும் முஸ்லிம்களுக்கும் இந்த நாட்டுல பிரச்சினை இருந்துச்சு. கிழக்குல புட்டும் தேங்காப் பூவும் போல வாழ்ந்தோம். வடக்குக்கு படிக்கப் போய் “தமிழர்கள்” வீட்டுல டோரா போட்டு எங்கட அம்மாமார் தந்த விதவிதமான தோசை இட்லி சாம்பார் உளுந்து வடை பருப்பு வடை சாப்பிட்டு உடம்பைத் தேத்தி நல்ல முறையில் படிச்சு ஒழுக்கமுள்ளவர்களாக நாங்க மாற இல்லையாங்க. வடக்குல இருந்த Teachers கிழக்குக்கு வந்து எங்களை அவங்கட பிள்ளைகளா எண்ணி எங்களுக்குப் சீரிய முறையில் படிப்பிக்கவில்லையாங்க! முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இருக்கும் உறவு காலம்காலமாக ஏற்பட்ட மானசீக உறவு. வடக்கு தாய்மார்கள் அவங்கட வீடுகளில் தங்கிப் படித்த முஸ்லிம் மாணவர்களை மாற்றான் (Outsiders) என்று நினைத்தது என் அனுபவத்தில் இல்லை. பக்கத்தில் எங்களை இருத்தித்தான் எங்களுக்கு உணவு பறிமாறினார்கள். ஏதோ இந்தக் கறுப்பு நாட்களில (Black days) வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் மாட்டுப்பட்டுவிட்டோம். எமது அரசியலாளர்கள் ஏதோ பேசி ஒரு முடிவொன்றுக்கு வந்து நாங்கள் மீண்டும் அல்லாஹ்வின் உதவியால் நல்லபடியாக வாழ்வதற்கு வழிகாட்டுவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருப்போம். தமிழர்களிலும் முஸ்லிம்களிலும் தகுதி வாய்ந்த அரசியலாளர்கள் மிக நல்லவர்கள் வல்லவரகள் தற்போது இருக்கின்றனர்.

வாழ்க அஜன் உன் பேதலித்த புத்திக்கு செயலுருவம் கொடு இன்னும் பட்டுக்கெடு

@ajan அடேங்கப்பா...! இந்த ராச தந்திரம் தெரியாத கூமுட்டை பிரபாகரன் இத்தனை லட்சம் உயிர்களை பலி கொடுத்துட்டு கோடாரிக் கொத்தும் வாங்கி புதைச்ச இடமும் தெரியாமல் அழிந்து போய் விட்டான். நீயெல்லாம் நாஸாவுல இருக்க வேண்டிய ஆளு. உன் கெரகம் எங்க கூட மாரடிக்கிற. உங்க ஊர்ல நீ மட்டும் தான் இப்படி கேனையா இல்ல மொத்த ஊரே இப்படித்தானா? உங்களையெல்லாம் நாங்க மனுசனாவே மதிக்கிறதில்ல இந்த லட்சணத்தில துரோகம் வேற பண்ணுறாங்களாக்கும். காமடி பீஸுங்க

We muslims never worked against sinhala Buddhist or Tamils, muslims progress is depend on the faith kept on Al mighty allah & Holy ISLAM. Strictly following of the teachings of Al Quran, other than nothing...But they have to follow five concept PANCIL, & no body is following but...alcoholing, drug addict, & many more at last more of them living like Ghanasara thera without famyly life...no children or growth of population...this their own problem...no need of jealous against muslim . He have to correct their own society before his dream of SINHALA RAJJYA......

Post a comment