Header Ads



கம்பஹாவில் இப்படியும் நடந்தது

கம்பஹாவில் மனைவி கொலை செய்ய முயற்சித்த கணவன், சிக்கிக் கொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இரண்டுதடவைகள் இவ்வாறான முயற்சியை கணவன் மேற்கொண்டுள்ளார். அதில், சமயோசிதமாக சிந்தித்த 52 வயதான மனைவி, தப்பித்துகொண்டார்.

வயோதிபமான அந்த குடுபத்தினருக்கு ஒரேயொரு பெண் பிள்ளை மட்டுமே உள்ளது. நாகப்பாம்பை தன்னுடைய மனைவியின் மீது வீசெறிந்து, மனைவியை படுகொலை செய்வதற்கு முயன்றுள்ளார்.

கம்பஹா நகருக்கு அண்மையில், மனைவி, ஜூன் 30ஆம் திகதி வீட்டில் இருந்துள்ளார். இதன்போதே, அவருடைய கணவன், வீட்டுக்குள்ளிருந்தே மனைவியின் மீது விஷம்கொண்ட நாகப்பாம்பை விட்டு வீசியுள்ளார்.

கூச்சலிட்ட மனைவி, பாம்பிடமிருந்து தப்பிவிட்டார். எனினும், அதுதொடர்பில் பொலிஸார் அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக, முறைப்பாடு செய்துள்ளார். தன்னுடைய முயற்சியை கைவிடாத கணவன், மீண்டுமொரு தடவையும் பாம்பை போட்டுள்ளார்.

உடனடியாக செயற்பட்ட பொலிஸார் அந்த வீட்டுக்குள் பாம்பாட்டியுடன் சென்று சோதனைகளை முன்னெடுத்துள்ளனர். அதன்போதே, வீடொன்றின் மற்றொரு அறைகுள் பாம்பொன்று இருப்பதை கண்டுள்ளனர். அந்தப் பாம்பு, ஏற்கெனவே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதற்கான அச்சத்திலும் ஆக்குரோசித்திலும் இருந்துள்ளது.

பாம்பை விற்ற பாம்பாட்டியே, அந்தப் பாம்பை பிடித்து பொலிஸாரிடம் கொடுத்துள்ளார். விசாரணையின் போது வாய்த்திறக்காத பாம்பாட்டி, அந்த வீட்டுப் பெண்மணியை கண்டு, அச்சத்திலேயே தகவல் வெளியிட்டுள்ளார். ஏனெனில், முதலாவது தடவையாக, பாம்பாட்டியே மறைந்திருந்து பாம்பை போட்டுள்ளார்.

அதிலிருந்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், தன்னிடமே, 25ஆயிரம் ரூபாய்க்கு பாம்பை விற்றுள்ளார். அதனை எடுத்துவந்து வீட்டின் அறையொன்றில் மறைத்துவைத்துள்ளார்.

இரண்டு முறைகளும் பாம்பு தீண்டாமல் விட்டது தனக்கு வியப்பாக இருப்பதாக பாம்பாட்டி தெரிவித்துள்ளார்.

எனினும், மனைவியின் மீது பாம்பை போட்ட கணவன், சைக்கிளை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்வதற்கு பொலிஸார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்

No comments

Powered by Blogger.