July 21, 2019

அப்பட்டமான பொய்களை கூறும் விக்னேஸ்வரனுக்கு, காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவன சம்மேளனம் கண்டனம்

(ஊடக அறிக்கை)

கடந்த 20ஆம் தேதி மட்டக்களப்பு கண்ணகிபுரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் முன்னாள் வட மாகாண முதலமைச்சர் திரு விக்னேஸ்வரன் ஐயா மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 300 தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டு இருப்பதாகவும் 09 ஆயிரத்துக்கு அதிகமான தமிழ் பெண்கள் முஸ்லிம் மதத்திற்கு மாற்றப்பட்டிருப்பதாக இவ்விடயத்தை தன்னிடம் ரத்ன தேரர் கூறியதாகவும் மேற்படி சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.

உண்மையில் இப்படி அப்பட்டமான பொய்களையும் இன நல்லுறவை பாதிக்கின்ற கருத்துகளையும் பொறுப்பு வாய்ந்த முன்னாள் முதலமைச்சர் தெரிவித்திருப்பதை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மிக வன்மையாக கண்டிக்கிறது.

கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதல்களை சிலர் தங்களுடைய வங்குரோத்து அரசியலை வளர்ப்பதற்காக பயன்படுத்துவதை நாம் மிக வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறான கருத்துகளின் ஊடாக பாதிக்கப்படுவது இந்த நாட்டு மக்களின் இன ஒற்றுமையும் சகவாழ்வும் என்பதை முன்னாள் முதலமைச்சர் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை நாம் இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

எனவே தனக்கு கிடைக்கின்ற இதுபோன்ற கருத்துக்களை ஆராயாமல், தீர விசாரிக்காமல் பொதுத் தளத்தில் கருத்து சொல்வதை இனிமேலாவது இது போன்ற அரசியல் தலைவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும்.

இந்த நாடு கடந்த 30 வருடகால யுத்தத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு தற்போது தான் ஓரளவு மக்கள் நிம்மதியாக வாழத் தொடங்கி இருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறான கருத்துக்கள் இந்நாட்டு மக்களை மோசமான கட்டத்தை நோக்கி நகர்த்தும் என்பதை மிகத் தெளிவாகச் சொல்லி வைக்க விரும்புகின்றோம்.

எனவே முன்னாள் முதலமைச்சர் திரு விக்னேஸ்வரன் அவர்கள் இந்நாட்டு மக்களின் சகவாழ்வுக்கும் இன நல்லுறவுக்கும் தன்னுடைய அரசியலை பயன்படுத்த வேண்டும் என நாம் வினயமாக கேட்டுக் கொள்கின்றோம்.

5 கருத்துரைகள்:

பண்டைக் காலத்தில் “யசலாகதிஸ்ஸ” என்ற அரசன் இலங்கையை ஆண்டு வந்தான். அந்த அரசனைப் போன்ற முகஒற்றுமை கொண்ட “சுப்பன்” என்ற இந்து சேவகன் அவனிடம் பணி புரிந்து வந்தான். இந்த முகஒற்றுமையைப் பயன்படுத்தி அரசன் சேவகனாகவும் சேவகன் அரசனாகவும் மாறிமாறி வேஷம் போட்டு அரசவையினரை ஏமாற்றி கேலி செய்து வந்தனர். இப்படியான சந்தர்ப்பம் ஒன்றினைப் பயன்படுத்திய சுப்பன் கட்சி மாறி ((it means use the artificial situation) தானே உண்மை அரசன் என்றும் இந்த சுப்பன் என்னைக் கேவலப்படுத்திவிட்டான். இவனை உடனடியாகக் கொல்லுங்கள் என்று உத்தரவிட்டு அநியாயமாக உண்மையான அரசனைக் கொலை செய்து விட்டான். இவ்வரலாறு Dr. Paranavitharana அவர்களின் The Concise History of Ceylon என்ற நூலில் விளக்கமாக எழுதப்பட்டுள்ளது. இது தற்போதைய தமிழர் தேசியக் கூட்டமைப்புக்கும் (TNA) பொருந்தும். சும்மா ஓய்வில் கிடந்த விக்கி ஐயா அவர்களை எந்தவித அரசியல் முகாந்திரமுமில்லாமல் (Identity) நட்பை மாத்திரம் அடிப்படையாக வைத்து சம்பந்தர் சேர் அவர்கள் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி அரசியலுக்குள் நுழைவித்து மாகாணசபை உறுப்பினர் பதவி மட்டுமல்ல முதல் அமைச்சர் பதவியையும் கொடுத்து அவரை அலங்கரித்தார். ஈற்றில் என்ன நடைபெற்றது. இன்று தனது ஏணியான தமிழர் தேசியக் கூட்டமைப்புக்கு (TNA) விசுவாசம் அற்ற ஒருவராக காட்சியளிப்பவராக மட்டுமன்றி ஒரு போட்டியாளராகவும் (Rival) மாற முயற்சிப்பது பெரும் வியப்பான விடயமுமாகும். ஆனால் இவருக்கு அரசியலில் எந்த சமபலமும் (Imbalance) இல்லை என்பதுதான் பெரும் உண்மை.

When these people become old their brains stop functioning and amnesia starts and they brood and blunder...

"அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று அறிவிழந்து தடுமாற்றமடைய வேண்டாம். எவர் சொன்ன சொல்லானாலும் அதனை உன் சிந்தையிலெடுத்துச் சீர்தூக்கிப் பார்" என்று ஒரு வசனம் சோக்ரட்டீஸ் நாடகத்தில் வருகின்றது. ஐயா, முன்னாள் நீதிபதி அவர்களே நீங்கள் மேற்கோள் காட்ட அறிவிழந்த அத்துரலிய தான் அகப்பட்டாரோ? எவ்வளவு பெரிய அபத்தம் ஐயா!

He used to read his speeches. He couldn't even make a speech for school kids off-hand. That is how his political ability is. Now he probably tries to make off-hand speeches, so he naturally fails out of inexperience. He does not know what he is talking about. it is time for him to go home and play with his grand children.

former judge, present joker. welcome to the paradise.

Post a comment