Header Ads



முஸ்லிம் அமைச்சர்கள் விவகாரத்தில், ரதன தேரருக்கு பௌத்தசாசன அமைச்சர் பதிலடி

முஸ்லிம் அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இருந்தால் அவற்றை கண்ட இடங்களில் கூறித் திரியாமல் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு சென்று முறையிடுமாறு பௌத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் இவ்வாறான செயற்பாட்டையே செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில். ரத்தன தேரர் உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெரிவுக்குழுவில் முன்னிலையாக தமது முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “குற்றச்சாட்டுக்கள் இருந்தால் யாருக்குமே உரிமை இருக்கிறது. ரிஷாட் பதியூனுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவு உட்பட முறைப்பாடு செய்ய வேண்டிய இடங்களுக்கு சென்று மேற்கொள்ள முடியும்.

குற்றச்சாட்டுக்கள் இல்லாவிட்டால் என்ன செய்தாலும் பிரச்சினையில்லை. குறிப்பாக மகாநாயக்க தேரர்களும் அவர்களை மீளப் பொறுப்பேற்கும்படியே ஆலோசனை கூறியிருந்தார்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சாட்சியமளிக்க வராவிட்டால் நாடாளுமன்றிலும் வெளியிடங்களிலும் குறைகூறித்திரிவதில் பிரயோசனமில்லை. அத்துரலியே ரத்தன தேரரும் இதனையே செய்கின்றார்.

அவர் ஜே.வி.பியின் நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது இந்த குண்டுவெடிப்புச் சம்பவமானது கடவுளின் ஆசிர்வாதம் என்றுகூட கூறியிருந்தார்.

அவர் வெறுமனே சபையிலும் அதேபோல வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தாமல் நேரடியாக சாட்சியமளிக்க வந்தாலே போதும்.

அவர் நம்பிக்கையில்லா யோசனை ஒன்றை கொண்டுவருவதாகக் கூறியிருந்தாலும் அதனையும் கொண்டுவரட்டும். அது அவருக்கு கைவந்தக் கலையாகும்” என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

4 comments:

  1. மிகச் சரியான பதிலடி

    ReplyDelete
  2. Sensible and good Buddhist people should reject these sort of racist monks hereafter if there are really loving the country and their religion.

    ReplyDelete
  3. For my knowledge, more than 95% of Buddhists; not only them also Hindus and christians are always good minded. One drop of poison spoil the a well of water.

    ReplyDelete

Powered by Blogger.