Header Ads



இஸ்லாமோபோபியா எனும் இனவாத நோய்

- Kalai Marx -

இஸ்லாமோபோபியா எனும் இனவாத நோய், சிலரை எந்தளவு தூரம் மனநோயாளிகளாக மாற்றியுள்ளது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சிறந்த உதாரணம். 

துருக்கியில் இருந்து லண்டன் நோக்கி பறக்கத் தயாராகிக் கொண்டிருந்த ஒரு பயணிகள் விமானத்தில், இனவெறி பிடித்த ஒரு பிரிட்டிஷ் வெள்ளையினப் பெண்மணி செய்த அடாவடித்தனம் காரணமாக, விமானம் ஒரு மணிநேரம் தாமதமாகப் புறப்பட்டது. 

முஸ்லிம் கலாச்சார ஆடை அணிந்த மூன்று பேர் விமானத்தில் ஏறியதைக் கண்டதும் அந்தப் பெண்மணி பயங்கரவாதிகளை கண்டு விட்டதாக அலறினார். அவர்களுடன் பயணம் செய்ய மாட்டேன் என்று கூச்சல் போட்டு ஆர்ப்பாட்டம் செய்துள்ளார். கூடவே இனத்துவேச வசைச் சொற்களையும் பயன்படுத்தினார். இவர் போன்ற இனவெறியர்கள் தான் உண்மையான பயங்கரவாதிகள் என்பதை உணர்ந்து கொண்ட விமானப் பயணிகள், அந்தப் பெண்ணுக்கு எதிராக ஒன்று திரண்டனர்.

அந்தப் பெண் செய்த அடாவடித்தனத்தைக் கண்டு, குழந்தைகள் பயத்தில் சத்தம் போட்டு அழத் தொடங்கி விட்டன. பல பயணிகளும் கண்ணீர் வடித்து அழுதனர். கலவர சூழ்நிலையிலும், ஒரு வெள்ளை இனவாதியால் "பயங்கரவாதி" குற்றம் சாட்டப்பட்ட மூன்று முஸ்லிம் ஆண்களும் அமைதியாக இருந்தனர். பிரிட்டிஷ் வெள்ளையினத்தவர் உட்பட, அனைத்து விமானப் பயணிகளும் ஒரு மனதாக அந்த மூன்று முஸ்லிம் ஆண்கள் பக்கம் நின்றனர். இறுதியில், அனைத்துப் பயணிகளுக்கும் இடையூறாக இருந்த அந்த வெள்ளையினப் பெண்மணியை விமானத்தை விட்டு வெளியேற்றிய பின்னர், ஒரு மணிநேரம் தாமதமாக விமானம் லண்டனை நோக்கிப் புறப்பட்டது. 


No comments

Powered by Blogger.