Header Ads



முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான ஞானசாரருக்கு, ஜனா­தி­பதி அதிருப்தி - தொலைபேசியில் தொடர்பும் கொண்டார்

நாட்டில் தற்­போது முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கி­யுள்ள பிரச்­சி­னைகள், அவ­ச­ர­காலச் சட்­டத்தின் கீழான அநா­வ­சிய கைதுகள், அச்­சு­றுத்­தல்கள், துன்­பு­றுத்­தல்கள், பொய்ப் பிர­சா­ரங்கள் தொடர்பில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து கலந்­து­ரை­யா­டினர். இச்­சந்­திப்பு ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்தில் நடை­பெற்­றது.

இச் சந்­திப்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதி­யுதீன், ஏ.எச்.எம்.பௌஸி, எம்.எஸ்.எஸ். அமீ­ரலி, அப்­துல்லாஹ் மஹ்ரூப், அலி­சாஹிர் மௌலானா, பைசல் காசிம், எஸ்.எம்.எம்.இஸ்­மாயில், எம்.ஐ.எம். மன்சூர் ஆகியோர் கலந்து கொண்­டனர்.

சிறை­யி­லி­ருந்து ஜனா­தி­ப­தியின் பொது மன்­னிப்பின் கீழ் விடு­தலை செய்­யப்­பட்ட ஞான­சார தேரர் குறித்தும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஜனா­தி­ப­தி­யிடம் முறை­யிட்­டனர். முஸ்­லிம்கள் மீதான கெடு­பி­டிகள் நாளாந்தம் அதி­க­ரித்து வரு­கின்­றன. நீங்கள் மன்­னிப்பு வழங்கி சிறை­யி­லி­ருந்து விடு­தலை செய்த ஞான­சார தேரர் இன்று உலமா சபையை விமர்­சித்து முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ராகப் பேசி வரு­கிறார். பொய் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைக்­கிறார். ஜனா­தி­பதி என்ற வகையில் நீங்கள் இது தொடர்பில் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் இல்­லையேல் இன முரண்­பா­டுகள் மேலெழும் என்றும் தெரி­வித்­தனர்.

இத­னை­ய­டுத்து அங்­கி­ருந்­த­வாறே ஞான­சார தேரரை தொலை­பே­சி­யூ­டாக தொடர்­பு­கொண்ட ஜனா­தி­பதி, முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான அவ­ரது கருத்­துக்கள் மற்றும் செயற்­பா­டுகள் தொடர்பில் தனது அதி­ருப்­தி­யினை வெளி­யிட்டார். அத்­துடன் தொடச்­சி­யாக இவ்­வாறு செயற்­பட்டால் மீண்­டு­மொரு தடவை என்னால் உங்­க­ளுக்கு மன்­னிப்பு வழங்க முடி­யாது எனவும் சுட்­டிக்­காட்­டினார்.

3 comments:

  1. மீண்டும் மன்னிப்பு என்றால் அவருக்கு அடுத்தமுறையும் சிறை தண்டனை நெருங்குது அதட்கும் ஜனாதிபதி இப்பவே மன்னிப்பு கொடுக்க தாயார் நிலையில் உள்ளார் போலும்!

    ReplyDelete
  2. மீண்டும் ஒரு முறை சனாதிபதியா வாற ஆசையோ !

    ReplyDelete
  3. MEENDUM JANAZIPAZIYAVAZA ??? AYYYÝYOOOÒW

    ReplyDelete

Powered by Blogger.