July 13, 2019

காதி நீதிமன்றம் பக்கச்சார்பான, தீர்ப்பு வழங்குவதாக குற்றச்சாட்டு

முஸ்லிம் சமூகத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள காதி நீதிமன்றம் ஊடாக ஆண்கள் சார்பில் பக்கசார்பாக வழங்கப்பட்ட தீர்ப்புக்களால் பெரும்பாலன பெண்கள் குழந்தைகளுடன் வீதியில் கைவிடப்பட்டுள்ளதாக அந்த நீதிமன்றத்தால் பாதிக்கப்பட்ட வெலிமடை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்  அவரது தந்தையுடன் ஊவாபரணகம பகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே இதனை வெளிப்படுத்தியிருந்தார்.

தந்தையின் பாதுகாப்பில் இருந்த இவர், 1 திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார்.

பின்னர் அவர் தனது கணவருக்கு எதிராக  பதுளையில் உள்ள காதி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

எனினும் தனது குழந்தையை பராமரிக்க, நியாயமான இழப்பீட்டை அந்த நீதிமன்றத்திடம் கோரிய போதும், அது கிடைக்கவில்லை என அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

14 கருத்துரைகள்:

எனவே சம்பந்தப்பட்ட காதி நீதவானுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.எமது சட்டத்தரனிகல் உள்ளார்கள்.சிரஜ் நூர்தீன்,சரூக் போன்ரவர்கலை நாடவும்.பணத்துக்காக இனவாத ஊடகங்களுக்கு முன் ஏன் இவ்வாறு பேட்டி கொடுப்பது.தற்போது பணம் கொடுக்கப்பட்டு சில வரிய Muslim களை இனவாதிகல் பயன்படுத்தி சிறிய விடயங்கல் பெரிசாக சோடிக்கப்படுகிரது.muslim சமூகம் இப்படியான வசதியில்லா Muslim களுக்கு உதவுங்கள்.அவர்கள் பணத்துக்காக விலை போவதை தடுங்கல்

கேட்ட இழப்பீட்டை விட பல மடங்கு அதிகமாக ஹிருவும் தெரனையும் தந்திருப்பார்களே.

அவ்வாறு பிரச்சினைகள் இருக்கும் போது பகிரங்கமாகவா சென்று எல்லோருக்கும் தெரியும்படி கத்த வேண்டும் ?இனி இது போதும் துவேஷக்கார துறவிகளுக்கும் மேலும் அவங்களின் Tv (Hiru,Derana)நிகழ்சிக்கலுக்கும் பேசுவதுக்கும்.இலங்கையில் கூடுதலாக பிரச்சினைகள் ஏட்படுத்த வழிசெய்பவர்கள் எமது முஸ்லிம்களே.

இதுபோன்ற குற்றசாட்டுக்கள் பல உண்டு. காதி நீதிமன்றத்தில் நம்பிக்கையில்லாவிட்டால் பாதிக்கபட்டவர் உயர்நீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்ய ஏதும் தடைகள் உள்ளதா? முஸ்லிம்களாகவே முன்வந்து தனிச்சட்ட நிர்வாக தவறுகளை கண்காணிக்கும் அமைப்புகளை உருவாக்க வேண்டும்.

"kaazi" is a arabic word, means: "judge". but who is judge in kaazi courts? all are lebbes and school teachers know nothings about Islam!

Only hiru and derana media persons there... This may be drama like Dr Shafi.

காழி நீதிமன்றங்கள் சிறப்பாக இயங்குவதட்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தனது கவனத்தை செலுத்த வேண்டும்

It is an isolagalted incident and there are leg remendies for these issues even at no cost.there are many lawyers who were Alreday doing free smiliar free services.by coming public you won't get the ultimate result you needed. Probably other people familiar with this innocent lady should have advised or should advise now.

ஜெயபாலன் ஐயா அவர்களே தயவு செய்து முஸ்லிம்களின் மார்க்க விடயங்களில் மூக்கை நுழைப்பதை விடுத்து உங்களுடைய நடுநிலையை பேணிக்கொள்ளுங்கள். நாம் ஹிந்துக்களின் விடயங்களில் மூக்கை நுழைப்பதில்லையே?

ACJU working without vision and plan, they are around 15 years back. so, don't expect any advanced things from them.

அல்லாஹ் ஒருவனே அனைத்தையும் அறிந்தவன். அந்த பெண்ணிடம் மட்டுமல்ல இலங்கையில் வாழும் இன்னும் எத்தனையோ பெண்களுக்கு ஹாதி நீதிமன்றத்தினுடாக அநீதம் இழைக்கப்பட்டுள்ளது. இவற்றை சரி செய்வதற்கு எவ்வாறு உதவலாம் என்று எண்ணுவதை விட்டுவிட்டு, நாட்டின் சூழ்நிலையை கருத்தில் கொள்ளாத அப்பாவிப் பெண்ணை வாய்க்கு வந்தபடி பொய்யை இட்டுக்கட்டாதீர்கள்.

NGK அவர்களே மனித உரிமை மீறல் பெண்கள் உரிமை மீறல் செய்தியானபின்னர் ஒருபோதும் மார்க்கவிடயமல்ல. முஸ்லிம்கள் பாதிக்கபட்டதாய் செய்திவந்தபிறகு எதிர்த்து கருத்துசொல்லும் உரிமையை நான் உயிருக்கு அஞ்சி வன்னியிலும் விட்டுக்கொடுத்ததில்லை. மனித உரிமை மீறல் எந்தபக்கத்தில் இருந்து செய்திவந்தாலும் அஞ்சாமல் தட்டிக்கேட்ப்பேன்.

NGK அவர்களே ஜெயபாலன் அவர்களின் பின்னூட்டத்தை நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன், எப்போதும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக நடுநிலை பேணி எழுதுவார்கள்,
So நல்லவர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம்

I once got cheated by an interdicted Qazi (who was previously a Qazi and interdicted due to malpractices) who claimed as he is continuing to represent certain area as Qazi. luckily I met the real qazi later and got the things sorted out. But in this process the interdicted qazi took a payment of 6,000 saying its the fee for documentation. There are cheats like this in Qazi system mainly because the qazi's are not professionals and does not bound by any professional ethics. They as far as I know these kind of Qazis are not god fearing as well. Don't blame the party who was subjected to unjust. this system need improvements.

Post a comment