Header Ads



பெரும்பாலான மக்கள் சஜித்துடன் இருக்கின்றனர், அவரிடம் நாட்டை ஒப்படையுங்கள் - ஹரீன்

நாட்டின் பெரும்பான்மையான மக்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் இருப்பதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பதுளை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றின்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பற்றி செய்தியாளர்கள் கேட்ட போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,

இது ஐக்கிய தேசியக் கட்சிக்கும், எமது நாட்டுக்கும் அரசியல் ரீதியில் வெறுப்பான காலம். சஜித் பிரேமதாசவிடம் எதிர்பார்ப்பு ஒன்றை ஏற்படுத்தி கொள்ள முடியும்.

பழைய முறைகளுடன் இருக்கும் நபர்களிடம் இருந்து 52 வயதான தலைவர் ஒருவரிடம் இலங்கை ஒப்படைக்கப்படுமாயின், மக்கள் மத்தியில் நாடு தொடர்பான நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்த முடியும்.

கிராமத்து மக்கள் அமைச்சர் சஜித்துடன் இருக்கின்றனர். அவர் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுவது கிராமத்து மக்களுக்கு பிரச்சினையல்ல. அத்துடன் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் சஜித்துடன் இருக்கின்றனர்.

இதனால், நாம் கூட்டு அரசாங்கத்தை அமைத்து விழுந்த குழியில் இருந்து எழ புதிய தலைமையிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும்.

ஒரு குடும்பத்திடம் ஆட்சியை ஒப்படைப்பதை விட, அண்ணனிடம் இருந்து தம்பிக்கு, தம்பியிடம் இருந்து சித்தப்பாவுக்கு, தாயிடம் இருந்து மகனுக்கு ஆட்சி செல்வதை விட, பிரேமதாசவினரிடம் ஆட்சியை ஒப்படைக்கலாம்.

பிரேமதாச என்ற பெயர் 1995ஆம் ஆண்டு முதல், கிராமத்து மக்கள் நேசிக்கும் பெயர். ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் விரும்பும் தலைவருக்கு நாம் இடமளிக்க வேண்டும். அதுதான் சரியான முறை என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.