Header Ads



நீதிமன்றும் இடிந்து விழலாம், எச்சரிக்கும் விஜயதாச

கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றம் ஆகியனவற்றில் மக்களுக்கு பாரிய ஆபத்து காத்திருப்பதாக முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஹூல்ப்டொரப்ஸ் பிளேஸில் அமைந்துள்ள நீதிமன்ற வளாகம் மிகவும் பழமையானது எனவும் எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடிய ஆபத்து நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கட்டடம் இடிந்து வீழ்ந்தால் ஆயிரக் கணக்கான அப்பாவி பொதுமக்களின் உயிர்களுக்கு சேதம் ஏற்படக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நீதவான் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றம் ஆகியன இடிந்து விழக்கூடிய ஆபத்தை எதிர்நோக்கி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நீதிமன்றக் கட்டடம் இடிந்து வீழ்ந்தால் அதற்கான பொறுப்பினை நீதி அமைச்சர் தலதா அதுகோரள உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சு தேவையற்ற விடயங்களுக்கு பணம் செலவழிக்கும் போதிலும் தேவையானவற்றுக்கு பணத்தை செலவழிப்பதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொலன்னாவை அனர்த்தம் போன்று காத்திருக்காது நீதிமன்ற கட்டடங்களை புனரமைத்து அல்லது வேறும் இடமொன்றிற்கு இடம் நகர்த்து பணிகளை மேற்கொள்ளுமாறு விஜயதாச ராஜபக்ச தற்போதைய நீதி அமைச்சர் தலதா அதுகோரலவிடம் கோரியுள்ளார்.

2 comments:

  1. Ennanduppa ippudi nee mattum yosikkira.....

    ReplyDelete
  2. இவர் நீதி அமைச்சராக இருந்த போது.. தண்ணி அடித்து வெறியில் இருந்தாரா என்ன... இப்போதுதான் தெளிந்ததுபோல்

    ReplyDelete

Powered by Blogger.