Header Ads



அது அவமானகரமானது, இதுபோன்று இனியும் நடக்கக்கூடாது - நியூசிலாந்து கேப்டன்


உலகக்கோப்பையை வெல்ல இங்கிலாந்து தகுதியான அணி என்று நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில், இங்கிலாந்து அணி சூப்பர் ஓவரில் நியூசிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.

சூப்பர் ஓவர் முறையும் டை ஆனதால், பவுண்டரிகள் அதிகம் அடிக்கப்பட்ட அணி என்ற கணக்கின் படி இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தோல்வி குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூறுகையில்,

‘போட்டி கடும் சவாலாக இருந்தது. இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள். உலகக்கோப்பையை வெல்ல அந்த அணி தகுதியானது. இந்த பிட்ச் நாங்கள் எதிர்பார்த்ததை விட வித்தியாசமாக இருந்தது. இதில் 300 ஓட்டங்களுக்கு மேல் அடிக்கலாம் என்று பேசிக் கொண்டிருந்தோம்.

ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. இன்னும் 10-20 ஓட்டங்கள் கூடுதலாக அடித்திருந்தால் சிறப்பானதாக இருந்திருக்கும். எங்கள் வீரர்களும் சிறப்பாக ஆடினார்கள். கடைசி வரை போராடினார்கள். அவர்களுக்கு நன்றி.

கடைசிக் கட்டத்தில் ஸ்டம்பை நோக்கி எறியப்பட்ட பந்து, பென் ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பவுண்டரி சென்றது அவமானகரமானது. விளையாட்டில் இதுவும் ஓர் அங்கம் என்றாலும், இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்கக் கூடாது’ என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.