July 02, 2019

அரபு கலாச்சாரத்திற்கு பதிலாக, சிங்கள கலாச்சாரத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் - ஞானசார தேரர்

சில சந்தர்ப்பங்களில் வடக்கிலுள்ள முட்டாள்கள் சிலர் சிங்கள மக்களின் இதயத்துடிப்பை புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றனர், ஆனால் அங்குள்ள தமிழ் மக்கள் கல்முனையை மீட்டுத்தருமாறு எம்மிடம் மன்றாடுகின்றனர் என பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

முன்னாள் அமைச்சர் ஹக்கீமுக்கும் ஏனையவர்களுக்கும் விசேடமாக முஸ்லிம் மக்களுக்கும் தமிழ்த் தலைவர்களுக்கும் ஒரு விடயத்தைக் கூற விரும்புகின்றோம்.

அரசியலமைப்பு குறித்து பேசி பிரச்சினைகளை தோற்றுவிக்க முன்னர் வடக்கிலும் கிழக்கிலுமுள்ள மக்கள் சிங்களம் கற்று இந்த பிரச்சினைகளை புரிந்து கொள்ள முதலில் இடமளியுங்கள். இதன்மூலம் அவர்கள் அரசியலமைப்பையும் புரிந்து கொள்வார்கள்.

அத்துடன் சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் அனைத்து பிரச்சினைகளையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

ஹக்கீமுக்கு சிங்களம் தெரியாவிட்டால் என்ன செய்ய முடியும். கிழக்கிலுள்ள மக்களுக்கு அரபு மொழியைப் போதிப்பதை விட்டுவிட்டு சிங்கள மொழியை கற்பிக்க வேண்டும். ஷரியா சட்டங்களை கற்பிக்க முன்னர் இலங்கையின் சட்டங்களை கற்றுக் கொடுக்க வேண்டும்.

அரபு கலாச்சாரத்திற்கு பதிலாக சிங்கள கலாச்சாரத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

8 கருத்துரைகள்:

சில TNA முட்டாள்களுக்கு கிழக்கில் என்ன நடக்குது என புரியவில்லை. அவர்களை பிறகு பார்ப்பம்.
இனவாதிகளின் அக்கிரமங்களிலிருந்து கிழக்கு தமிழர்களை காப்பாற்ற பௌத்த சிங்களவர்களின் உதவிகள் நிச்சயம் தேவை.

சிங்கள மொழி கற்று கொள்ள Muslim கள் தயார்.சிங்களத்தை தாய் மொழியாக அறிவிக்கவும் தயார்.திரு.ஜானசாரா அவர்களே கேட்டுப் பாருங்கள் தமிழ் மக்களும்,தமிழ் தலைமைகலும் இவ்வுரண்டுக்கும் தயாரா என.அப்போது உங்களுக்கு புரியும் உண்மையாக இந்த நாட்டை நேசிப்பது யார் என.

இந்த கட்டாக்காளி நாயின் உளறல்களை குப்பைத் தொட்டியில் எறிந்து விடவும்.

வடக்கு மற்றும் கல்முனைத் தமிழர்கள் முட்டாள்கள் என்பது தேரர் அவர்களின் யாழ் கல்முனை விஜயத்தின் பின்னர்தான் விளங்கியிருக்கின்றது போலும். அந்த வகையில் எங்களுக்கு மகிழ்ச்சிதான்.அந்த முட்டாள்த் தமிழர்கள் விரைவில் உங்களுக்கு ஆசிரியர்களாக மாற இருக்கின்றனர்.

2 – நாட்டு மக்கள் பெரும் நெருக்குவாரத்திற்கு மத்தியில் 200 பாராளுமன்ற உறுப்பினர்களை நேரடியாகத் தேர்தல் மூலம் தெரிவு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி இருக்கின்றார்கள்.அவர்கள் நாட்டின் தேவைகளைக் கவனித்துக் கொள்வார்கள். உங்களைப் போன்றவரகள் அதனுள் மூக்கை நுழைக்காமல் “கம்”னு இருந்தால் போதும்.

3 – நாட்டிலுள்ள தமிழ் பேசும் மக்களுக்கு சிங்களம் கற்பிக்க வேண்டாம்னு யார் சொன்னா. அரசாங்கத்தின் செலவிலோ அல்லது ஆர்வமிருந்தால் தேரரின் செலவிலோ அதனைச் செய்யலாமே.

4 - உங்களுக்கு சிங்களம் போதிப்பதற்கு மிகச் சிறந்த ஆசிரியர் ஹக்கீம் அவர்கள்தான். இலக்கண விளக்கங்களுடன் ஒழுங்குமுறையில் கற்பிப்பார். வகுப்புகள் ஒழுங்கு செய்ய வேண்டுமாக இருந்தால் என்னை அணுகலாம்.

5 - அரபுக் கலாசாரத்திற்குப் பதிலாக சிங்களக் கலாசாரமா? வேண்டாம் என்று சொல்லவில்லை. முதலில் சிங்களக் கலாசாரத்தை பதனிட்டுவிட்டு/ஒழுங்குபடுத்திவிட்டு எங்களிடம் வாருங்கள். அதுபற்றி யோசிப்போம்.

நீ முதலில் தூய்ய பௌத்தம் போதிப்பதை பின்பற்றி நடக்க முயற்சி செய்

First you teach sinhales

😃😃😃 நான் முன்பு சொன்னது இப்போது ஆரம்பம் மிகச் சிறந்த திட்டம்.இனி வடக்கு தமிழன் கிழக்குத் தமிழன் என பிரிக்க போகிறார்கள்.அதன் பின் பின் தமிழரை வலுவிலக்கச் செய்து (தனி நாடு கேட்டவர்கலை கல்முனை வரை கூட்டி வந்து பின் கைவிடப்படும்) எனவேதான் அன்பு,பாசத்தை கிழக்கு தமிழனுக்கு காட்டி வடக்கு தமிழனையும் கிழக்கு தமிழனையும் இரு துருவங்கலாக மாற்றும் நடவடிக்கை Muslim,kalmunai எனும் கோணங்களை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்டுல்லது.இதனால் அழிவு எமக்கல்ல தமிழனுக்கு.thanks a lot mr.janasara thero

கிழக்கு தமிழர்களுக்கு தெரியும் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் ஒரு ஆனியும் புடுங்க வானாம்

Post a comment