Header Ads



பங்காளிகளுடன் ஒப்பந்தம் கைசாத்திட்ட பின்னரே, ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம்

ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளுடன் எதிர்வரும் 5ஆம் திகதி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டவுடன் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணி தொடர்பில் இன்று கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

"ஐக்கிய தேசிய கட்சியும் ஏனைய பல்வேறு கட்சிகளும் இணைந்து அமைக்கவுள்ள கூட்டணியில் கைசாத்திடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

அனைத்து மத குருமார்களினதும் ஆசீர்வாதத்துடன் இந்தப் புதிய கூட்டணி அமைக்கப்படவுள்ளது.

இந்தக் கூட்டணியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதானிகள் என்று அனைவரும் உள்ளடங்குவார்கள்" என்றார்.

1 comment:

  1. Why you guys pulls out religious dignitaries into the politics. Don't you know their interference into politics made social collapse since last century. What they knew in politics. There are Professors, Phd in various field. All religious dignitaries are there especially to teach good habits, way of life, discipline to the people. Leave them alone please. Please make law in the parliament that all religious dignitaries must marry. They will be very happy with you guys, if so you do.

    ReplyDelete

Powered by Blogger.